சங்கீதம் 115 : 1 (IRVTA)
தாவீதின் பாடல். எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.
சங்கீதம் 115 : 2 (IRVTA)
அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?
சங்கீதம் 115 : 3 (IRVTA)
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.
சங்கீதம் 115 : 4 (IRVTA)
அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
சங்கீதம் 115 : 5 (IRVTA)
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
சங்கீதம் 115 : 6 (IRVTA)
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
சங்கீதம் 115 : 7 (IRVTA)
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
சங்கீதம் 115 : 8 (IRVTA)
அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
சங்கீதம் 115 : 9 (IRVTA)
இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
சங்கீதம் 115 : 10 (IRVTA)
ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
சங்கீதம் 115 : 11 (IRVTA)
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
சங்கீதம் 115 : 12 (IRVTA)
யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 115 : 13 (IRVTA)
யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 115 : 14 (IRVTA)
யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.
சங்கீதம் 115 : 15 (IRVTA)
வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
சங்கீதம் 115 : 16 (IRVTA)
வானங்கள் யெகோவாவுடையவைகள்; பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.
சங்கீதம் 115 : 17 (IRVTA)
இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.
சங்கீதம் 115 : 18 (IRVTA)
நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். அல்லேலூயா.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18