சங்கீதம் 11 : 1 (IRVTA)
{இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.} நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; [QBR] பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி, [QBR] பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள். [QBR]
சங்கீதம் 11 : 2 (IRVTA)
இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து, [QBR] செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள். [QBR]
சங்கீதம் 11 : 3 (IRVTA)
அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே, [QBR] நீதிமான் என்ன செய்வான்? [QBR]
சங்கீதம் 11 : 4 (IRVTA)
யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; [QBR] யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; [QBR] அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன. [QBR]
சங்கீதம் 11 : 5 (IRVTA)
யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; [QBR] துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. [QBR]
சங்கீதம் 11 : 6 (IRVTA)
துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; [QBR] நெருப்பும், கந்தகமும், [QBR] அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு. [QBR]
சங்கீதம் 11 : 7 (IRVTA)
யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; [QBR] அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது. [PE]

1 2 3 4 5 6 7

BG:

Opacity:

Color:


Size:


Font: