சங்கீதம் 106 : 1 (IRVTA)
அல்லேலூயா, யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 106 : 2 (IRVTA)
யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் சொல்லக்கூடியவன் யார்?
சங்கீதம் 106 : 3 (IRVTA)
நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.
சங்கீதம் 106 : 4 (IRVTA)
யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு,
சங்கீதம் 106 : 5 (IRVTA)
உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.
சங்கீதம் 106 : 6 (IRVTA)
எங்களுடைய முன்னோர்களோடு நாங்களும் பாவஞ்செய்து, அக்கிரமம் நடப்பித்து, தீமைகளைச் செய்தோம்.
சங்கீதம் 106 : 7 (IRVTA)
எங்களுடைய முன்னோர்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் பெருக்கத்தை நினைக்காமலும் போய், சிவந்த கடலின் ஓரத்திலே கலகம்செய்தார்கள்.
சங்கீதம் 106 : 8 (IRVTA)
ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய பெயரினிமித்தம் அவர்களைக் காப்பாற்றினார்.
சங்கீதம் 106 : 9 (IRVTA)
அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது; காய்ந்த தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகச்செய்தார்.
சங்கீதம் 106 : 10 (IRVTA)
பகைவரின் கைக்கு அவர்களை விலக்கிக் காப்பாற்றி, எதிரியின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.
சங்கீதம் 106 : 11 (IRVTA)
அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீதியாக இருக்கவில்லை.
சங்கீதம் 106 : 12 (IRVTA)
அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்.
சங்கீதம் 106 : 13 (IRVTA)
ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்காமல்,
சங்கீதம் 106 : 14 (IRVTA)
வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி, பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
சங்கீதம் 106 : 15 (IRVTA)
அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் சரீரத்திலோ வியாதியை அனுப்பினார்.
சங்கீதம் 106 : 16 (IRVTA)
முகாமில் அவர்கள் மோசேயின்மேலும், யெகோவாவுடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
சங்கீதம் 106 : 17 (IRVTA)
பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.
சங்கீதம் 106 : 18 (IRVTA)
அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது; நெருப்பு ஜூவாலை துன்மார்க்கர்களை எரித்துப்போட்டது.
சங்கீதம் 106 : 19 (IRVTA)
அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்க்கப்பட்ட சிலையை வழிபட்டார்கள்.
சங்கீதம் 106 : 20 (IRVTA)
தங்களுடைய மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
சங்கீதம் 106 : 21 (IRVTA)
எகிப்திலே பெரிய செயல்களையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த கடலினருகில் பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,
சங்கீதம் 106 : 22 (IRVTA)
தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
சங்கீதம் 106 : 23 (IRVTA)
ஆகையால், அவர்களை நாசம்செய்வேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடி, அவருடைய கடுங்கோபத்தை ஆற்றுவதற்கு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாசலிலே நின்றான்.
சங்கீதம் 106 : 24 (IRVTA)
அவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல், விரும்பத்தக்க தேசத்தை அசட்டைச்செய்தார்கள்.
சங்கீதம் 106 : 25 (IRVTA)
யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல், தங்களுடைய கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
சங்கீதம் 106 : 26 (IRVTA)
அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும், அவர்கள் சந்ததி தேசங்களுக்குள்ளே அழியவும்,
சங்கீதம் 106 : 27 (IRVTA)
அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
சங்கீதம் 106 : 28 (IRVTA)
அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, உயிரில்லாதவைகளுக்கு செலுத்தின பலிகளை சாப்பிட்டு,
சங்கீதம் 106 : 29 (IRVTA)
தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.
சங்கீதம் 106 : 30 (IRVTA)
அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.
சங்கீதம் 106 : 31 (IRVTA)
அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
சங்கீதம் 106 : 32 (IRVTA)
மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்களினால் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.
சங்கீதம் 106 : 33 (IRVTA)
அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே, தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான்.
சங்கீதம் 106 : 34 (IRVTA)
யெகோவா தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த மக்களை அழிக்கவில்லை.
சங்கீதம் 106 : 35 (IRVTA)
அந்நிய ஜாதிகளோடு கலந்து, அவர்களுடைய செயல்களைக் கற்று;
சங்கீதம் 106 : 36 (IRVTA)
அவர்களுடைய சிலைகளை வழிபட்டார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியானது.
சங்கீதம் 106 : 37 (IRVTA)
அவர்கள் தங்களுடைய மகன்களையும் தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
சங்கீதம் 106 : 38 (IRVTA)
அவர்கள் கானான் தேசத்து சிலைகளுக்கு பலியிட்டு, தங்களுடைய மகன்கள் மகள்களுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
சங்கீதம் 106 : 39 (IRVTA)
அவர்கள் தங்களுடைய செயல்களினால் அசுத்தமாகி, தங்களுடைய செயல்களினால் வேசித்தனம் செய்தார்கள்.
சங்கீதம் 106 : 40 (IRVTA)
அதினால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களின்மேல் எழும்பினது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.
சங்கீதம் 106 : 41 (IRVTA)
அவர்களைத் தேசங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஆண்டார்கள்.
சங்கீதம் 106 : 42 (IRVTA)
அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
சங்கீதம் 106 : 43 (IRVTA)
அநேகமுறை அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்களுடைய யோசனையினால் அவருக்கு விரோதமாகக் கலகம்செய்து, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.
சங்கீதம் 106 : 44 (IRVTA)
அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் பார்த்து,
சங்கீதம் 106 : 45 (IRVTA)
அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனவேதனை அடைந்து,
சங்கீதம் 106 : 46 (IRVTA)
அவர்களைச் சிறைபிடித்த அனைவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.
சங்கீதம் 106 : 47 (IRVTA)
எங்கள் தேவனாகிய யெகோவாவே, நாங்கள் உமது பரிசுத்தப் பெயரைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களைக் காப்பாற்றி, எங்களைத் தேசங்களிலிருந்து சேர்த்தருளும்.
சங்கீதம் 106 : 48 (IRVTA)
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அநாதியாக என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். மக்களெல்லோரும் ஆமென், என்பார்களாக, அல்லேலூயா.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48