சங்கீதம் 105 : 1 (IRVTA)
யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
சங்கீதம் 105 : 2 (IRVTA)
அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
சங்கீதம் 105 : 3 (IRVTA)
அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
சங்கீதம் 105 : 4 (IRVTA)
யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள்.
சங்கீதம் 105 : 5 (IRVTA)
அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!
சங்கீதம் 105 : 6 (IRVTA)
அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
சங்கீதம் 105 : 7 (IRVTA)
அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா, அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
சங்கீதம் 105 : 8 (IRVTA)
ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,
சங்கீதம் 105 : 9 (IRVTA)
அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
சங்கீதம் 105 : 10 (IRVTA)
அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
சங்கீதம் 105 : 11 (IRVTA)
உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
சங்கீதம் 105 : 12 (IRVTA)
அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள்.
சங்கீதம் 105 : 13 (IRVTA)
அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும், ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள்.
சங்கீதம் 105 : 14 (IRVTA)
அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
சங்கீதம் 105 : 15 (IRVTA)
நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
சங்கீதம் 105 : 16 (IRVTA)
அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.
சங்கீதம் 105 : 17 (IRVTA)
அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
சங்கீதம் 105 : 18 (IRVTA)
அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது.
சங்கீதம் 105 : 19 (IRVTA)
யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
சங்கீதம் 105 : 20 (IRVTA)
ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான்.
சங்கீதம் 105 : 21 (IRVTA)
தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும்,
சங்கீதம் 105 : 22 (IRVTA)
அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும், தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார்.
சங்கீதம் 105 : 23 (IRVTA)
அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான்.
சங்கீதம் 105 : 24 (IRVTA)
அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து, அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார்.
சங்கீதம் 105 : 25 (IRVTA)
தம்முடைய மக்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
சங்கீதம் 105 : 26 (IRVTA)
தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
சங்கீதம் 105 : 27 (IRVTA)
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
சங்கீதம் 105 : 28 (IRVTA)
அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை.
சங்கீதம் 105 : 29 (IRVTA)
அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மீன்களை சாகடித்தார்.
சங்கீதம் 105 : 30 (IRVTA)
அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
சங்கீதம் 105 : 31 (IRVTA)
அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
சங்கீதம் 105 : 32 (IRVTA)
அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார்.
சங்கீதம் 105 : 33 (IRVTA)
அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
சங்கீதம் 105 : 34 (IRVTA)
அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
சங்கீதம் 105 : 35 (IRVTA)
அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
சங்கீதம் 105 : 36 (IRVTA)
அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார்.
சங்கீதம் 105 : 37 (IRVTA)
அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.
சங்கீதம் 105 : 38 (IRVTA)
எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.
சங்கீதம் 105 : 39 (IRVTA)
அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார்.
சங்கீதம் 105 : 40 (IRVTA)
இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.
சங்கீதம் 105 : 41 (IRVTA)
கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது.
சங்கீதம் 105 : 42 (IRVTA)
அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து,
சங்கீதம் 105 : 43 (IRVTA)
தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து,
சங்கீதம் 105 : 44 (IRVTA)
தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
சங்கீதம் 105 : 45 (IRVTA)
அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.
❮
❯