சங்கீதம் 100 : 1 (IRVTA)
நன்றிப்பாடல். பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
சங்கீதம் 100 : 2 (IRVTA)
மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.
சங்கீதம் 100 : 3 (IRVTA)
யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.
சங்கீதம் 100 : 4 (IRVTA)
அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
சங்கீதம் 100 : 5 (IRVTA)
யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

1 2 3 4 5