நீதிமொழிகள் 27 : 1 (IRVTA)
குடும்ப வாழ்வு நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியமாட்டாயே.
நீதிமொழிகள் 27 : 2 (IRVTA)
உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
நீதிமொழிகள் 27 : 3 (IRVTA)
கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்; மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம்.
நீதிமொழிகள் 27 : 4 (IRVTA)
கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்?
நீதிமொழிகள் 27 : 5 (IRVTA)
மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
நீதிமொழிகள் 27 : 6 (IRVTA)
நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
நீதிமொழிகள் 27 : 7 (IRVTA)
திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான ஆகாரங்களும் தித்திப்பாக இருக்கும்.
நீதிமொழிகள் 27 : 8 (IRVTA)
தன்னுடைய கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன்னுடைய இடத்தைவிட்டு அலைகிற மனிதனும் இருக்கிறான்.
நீதிமொழிகள் 27 : 9 (IRVTA)
வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.
நீதிமொழிகள் 27 : 10 (IRVTA)
உன்னுடைய நண்பனையும், உன்னுடைய தகப்பனுடைய நண்பனையும் விட்டுவிடாதே; உன்னுடைய ஆபத்துக்காலத்தில் உன்னுடைய சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனைவிட சமீபத்திலுள்ள அயலானே சிறப்பானவன்.
நீதிமொழிகள் 27 : 11 (IRVTA)
என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக, நீ ஞானவானாகி, என்னுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.
நீதிமொழிகள் 27 : 12 (IRVTA)
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
நீதிமொழிகள் 27 : 13 (IRVTA)
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள், அந்நிய பெண்ணுக்காக ஈடுவாங்கிக்கொள்.
நீதிமொழிகள் 27 : 14 (IRVTA)
ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடு தன்னுடைய நண்பனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.
நீதிமொழிகள் 27 : 15 (IRVTA)
அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான பெண்ணும் சரி.
நீதிமொழிகள் 27 : 16 (IRVTA)
அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன்னுடைய வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
நீதிமொழிகள் 27 : 17 (IRVTA)
இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்; அப்படியே மனிதனும் தன்னுடைய நண்பனைக் கூர்மையாக்குகிறான்.
நீதிமொழிகள் 27 : 18 (IRVTA)
அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்; தன்னுடைய எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.
நீதிமொழிகள் 27 : 19 (IRVTA)
தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல, மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
நீதிமொழிகள் 27 : 20 (IRVTA)
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை.
நீதிமொழிகள் 27 : 21 (IRVTA)
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனிதனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
நீதிமொழிகள் 27 : 22 (IRVTA)
மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.
நீதிமொழிகள் 27 : 23 (IRVTA)
உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்; உன்னுடைய மந்தைகளின்மேல் கவனமாக இரு.
நீதிமொழிகள் 27 : 24 (IRVTA)
செல்வம் என்றைக்கும் நிலைக்காது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?
நீதிமொழிகள் 27 : 25 (IRVTA)
புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.
நீதிமொழிகள் 27 : 26 (IRVTA)
ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.
நீதிமொழிகள் 27 : 27 (IRVTA)
வெள்ளாட்டுப்பால் உன்னுடைய உணவுக்கும், உன் வீட்டாரின் உணவுக்கும் உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானதாக இருக்கும்.
❮
❯