நீதிமொழிகள் 16 : 1 (IRVTA)
தேவ ஞானமும் நீதியும் மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் யெகோவாவால் வரும்.
நீதிமொழிகள் 16 : 2 (IRVTA)
மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
நீதிமொழிகள் 16 : 3 (IRVTA)
உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும்.
நீதிமொழிகள் 16 : 4 (IRVTA)
யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
நீதிமொழிகள் 16 : 5 (IRVTA)
மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
நீதிமொழிகள் 16 : 6 (IRVTA)
கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.
நீதிமொழிகள் 16 : 7 (IRVTA)
ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார்.
நீதிமொழிகள் 16 : 8 (IRVTA)
அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது.
நீதிமொழிகள் 16 : 9 (IRVTA)
மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா.
நீதிமொழிகள் 16 : 10 (IRVTA)
ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது.
நீதிமொழிகள் 16 : 11 (IRVTA)
நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
நீதிமொழிகள் 16 : 12 (IRVTA)
அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
நீதிமொழிகள் 16 : 13 (IRVTA)
நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
நீதிமொழிகள் 16 : 14 (IRVTA)
ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
நீதிமொழிகள் 16 : 15 (IRVTA)
ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
நீதிமொழிகள் 16 : 16 (IRVTA)
பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை
நீதிமொழிகள் 16 : 17 (IRVTA)
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.
நீதிமொழிகள் 16 : 18 (IRVTA)
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
நீதிமொழிகள் 16 : 19 (IRVTA)
அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம்.
நீதிமொழிகள் 16 : 20 (IRVTA)
விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான்.
நீதிமொழிகள் 16 : 21 (IRVTA)
இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்.
நீதிமொழிகள் 16 : 22 (IRVTA)
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே.
நீதிமொழிகள் 16 : 23 (IRVTA)
ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
நீதிமொழிகள் 16 : 24 (IRVTA)
இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகும்.
நீதிமொழிகள் 16 : 25 (IRVTA)
மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
நீதிமொழிகள் 16 : 26 (IRVTA)
உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
நீதிமொழிகள் 16 : 27 (IRVTA)
வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.
நீதிமொழிகள் 16 : 28 (IRVTA)
மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
நீதிமொழிகள் 16 : 29 (IRVTA)
கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான்.
நீதிமொழிகள் 16 : 30 (IRVTA)
அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான்.
நீதிமொழிகள் 16 : 31 (IRVTA)
நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம்.
நீதிமொழிகள் 16 : 32 (IRVTA)
பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.
நீதிமொழிகள் 16 : 33 (IRVTA)
சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33