நீதிமொழிகள் 14 : 1 (IRVTA)
விவேகமும் அலட்சியமும் புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
நீதிமொழிகள் 14 : 2 (IRVTA)
நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான்.
நீதிமொழிகள் 14 : 3 (IRVTA)
மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
நீதிமொழிகள் 14 : 4 (IRVTA)
எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
நீதிமொழிகள் 14 : 5 (IRVTA)
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
நீதிமொழிகள் 14 : 6 (IRVTA)
பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும்.
நீதிமொழிகள் 14 : 7 (IRVTA)
மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய்.
நீதிமொழிகள் 14 : 8 (IRVTA)
தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
நீதிமொழிகள் 14 : 9 (IRVTA)
மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு.
நீதிமொழிகள் 14 : 10 (IRVTA)
இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான்.
நீதிமொழிகள் 14 : 11 (IRVTA)
துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
நீதிமொழிகள் 14 : 12 (IRVTA)
மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
நீதிமொழிகள் 14 : 13 (IRVTA)
சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
நீதிமொழிகள் 14 : 14 (IRVTA)
பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
நீதிமொழிகள் 14 : 15 (IRVTA)
பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான்.
நீதிமொழிகள் 14 : 16 (IRVTA)
ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான்.
நீதிமொழிகள் 14 : 17 (IRVTA)
முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
நீதிமொழிகள் 14 : 18 (IRVTA)
பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
நீதிமொழிகள் 14 : 19 (IRVTA)
தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
நீதிமொழிகள் 14 : 20 (IRVTA)
தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு.
நீதிமொழிகள் 14 : 21 (IRVTA)
பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.
நீதிமொழிகள் 14 : 22 (IRVTA)
தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு.
நீதிமொழிகள் 14 : 23 (IRVTA)
எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும்.
நீதிமொழிகள் 14 : 24 (IRVTA)
ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; மூடர்களின் மதியீனம் மூடத்தனமே.
நீதிமொழிகள் 14 : 25 (IRVTA)
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
நீதிமொழிகள் 14 : 26 (IRVTA)
யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
நீதிமொழிகள் 14 : 27 (IRVTA)
யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
நீதிமொழிகள் 14 : 28 (IRVTA)
மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; மக்கள்குறைவு தலைவனின் முறிவு.
நீதிமொழிகள் 14 : 29 (IRVTA)
நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான்.
நீதிமொழிகள் 14 : 30 (IRVTA)
சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; பொறாமையோ எலும்புருக்கி.
நீதிமொழிகள் 14 : 31 (IRVTA)
தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்;
நீதிமொழிகள் 14 : 32 (IRVTA)
துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
நீதிமொழிகள் 14 : 33 (IRVTA)
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
நீதிமொழிகள் 14 : 34 (IRVTA)
நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி.
நீதிமொழிகள் 14 : 35 (IRVTA)
ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35