பிலிப்பியர் 3 : 1 (IRVTA)
சரீரத்தின்மேலுள்ள நம்பிக்கை மேலும், என் சகோதரர்களே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே மீண்டும் எழுதுவது எனக்கு வருத்தம் இல்லை, அது உங்களுக்கு நலமாக இருக்கும்.
பிலிப்பியர் 3 : 2 (IRVTA)
நாய்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். விருத்தசேதனக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
பிலிப்பியர் 3 : 3 (IRVTA)
ஏனென்றால், சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இல்லாமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவிற்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
பிலிப்பியர் 3 : 4 (IRVTA)
சரீரத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இருக்க நினைத்தால் நான் அதைவிட அதிகமாக அப்படிச் செய்யலாம்.
பிலிப்பியர் 3 : 5 (IRVTA)
நான் எட்டாம்நாளில் விருத்தசேதனம்பண்ணப்பட்டவன், இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;
பிலிப்பியர் 3 : 6 (IRVTA)
பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்தின் நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
பிலிப்பியர் 3 : 7 (IRVTA)
ஆனாலும், எனக்கு இலாபமாக இருந்தவைகள் எவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைத்தேன்.
பிலிப்பியர் 3 : 8 (IRVTA)
அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
பிலிப்பியர் 3 : 9 (IRVTA)
நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாக இல்லாமல், கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாக தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருந்து, கிறிஸ்துவிற்குள் இருக்கிறவன் என்று தெரியும்படிக்கும்,
பிலிப்பியர் 3 : 10 (IRVTA)
இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும்,
பிலிப்பியர் 3 : 11 (IRVTA)
அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்றும் நினைக்கிறேன்.
பிலிப்பியர் 3 : 12 (IRVTA)
இலக்கை நோக்கி ஓடுதல் நான் பெற்றுக்கொண்டேன் அல்லது முழுவதும் தேறினவனானேன் என்று நினைக்காமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்வதற்காக ஆசையாகத் தொடருகிறேன்.
பிலிப்பியர் 3 : 13 (IRVTA)
சகோதரர்களே, அதைப் பிடித்துக்கொண்டேன் என்று நான் நினைக்கிறதில்லை; ஒன்று செய்கிறேன், கடந்தவைகளை மறந்து, வருகிறவைகளைத் தேடி,
பிலிப்பியர் 3 : 14 (IRVTA)
கிறிஸ்து இயேசுவிற்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
பிலிப்பியர் 3 : 15 (IRVTA)
ஆகவே, நம்மில் தேறினவர்கள் எல்லோரும் இந்தச் சிந்தையாகவே இருக்கவேண்டும்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறு சிந்தையாக இருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
பிலிப்பியர் 3 : 16 (IRVTA)
ஆனாலும் நாம் எதுவரைக்கும் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காக நடந்துகொண்டு, ஒரே சிந்தையாக இருப்போமாக.
பிலிப்பியர் 3 : 17 (IRVTA)
சகோதரர்களே, நீங்கள் என்னோடு பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்கிப் பாருங்கள்.
பிலிப்பியர் 3 : 18 (IRVTA)
ஏனென்றால், அநேகர் வேறுவிதமாக நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களென்று உங்களுக்கு அநேகமுறைச் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
பிலிப்பியர் 3 : 19 (IRVTA)
அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய வெட்கமே, அவர்கள் பூமிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
பிலிப்பியர் 3 : 20 (IRVTA)
நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பிலிப்பியர் 3 : 21 (IRVTA)
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்வதற்கு தம்முடைய வல்லமையான செயலின்படி, நம்முடைய அற்பமான சரீரத்தை அவருடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21