பிலிப்பியர் 2 : 1 (IRVTA)
கிறிஸ்துவின் தாழ்மை ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால்,
பிலிப்பியர் 2 : 2 (IRVTA)
நீங்கள் ஒரே சிந்தையும் ஒரே அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாக ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
பிலிப்பியர் 2 : 3 (IRVTA)
ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும்.
பிலிப்பியர் 2 : 4 (IRVTA)
அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும்.
பிலிப்பியர் 2 : 5 (IRVTA)
கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களுக்கும் இருக்கவேண்டும்;
பிலிப்பியர் 2 : 6 (IRVTA)
அவர் தேவனுடைய உருவமாக இருந்தும், தேவனுக்குச் சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக நினைக்காமல்,
பிலிப்பியர் 2 : 7 (IRVTA)
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனிதனின் சாயல் ஆனார்.
பிலிப்பியர் 2 : 8 (IRVTA)
அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2 : 9 (IRVTA)
ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
பிலிப்பியர் 2 : 10 (IRVTA)
இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும்,
பிலிப்பியர் 2 : 11 (IRVTA)
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
பிலிப்பியர் 2 : 12 (IRVTA)
பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
பிலிப்பியர் 2 : 13 (IRVTA)
ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராக இருக்கிறார்.
பிலிப்பியர் 2 : 14 (IRVTA)
நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதும் இல்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
பிலிப்பியர் 2 : 15 (IRVTA)
கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் இல்லாதவர்களும் கபடு இல்லாதவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக இருப்பதற்கு,
பிலிப்பியர் 2 : 16 (IRVTA)
எல்லாவற்றையும் முறுமுறுப்பு இல்லாமலும் வாக்குவாதம் இல்லாமலும் செய்யுங்கள்.
பிலிப்பியர் 2 : 17 (IRVTA)
மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன்.
பிலிப்பியர் 2 : 18 (IRVTA)
இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.
பிலிப்பியர் 2 : 19 (IRVTA)
தீமோத்தேயுவும் எப்பாப்பிரோதீத்துவும் அன்றியும், நானும் உங்களுடைய செய்திகளைத் தெரிந்து மன ஆறுதல் அடைவதற்குச் சீக்கிரமாகத் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் நம்பியிருக்கிறேன்.
பிலிப்பியர் 2 : 20 (IRVTA)
ஆகவே, உங்களுடைய காரியங்களை உண்மையாகக் கவனிப்பதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனைத்தவிர வேறுயாரும் என்னிடம் இல்லை.
பிலிப்பியர் 2 : 21 (IRVTA)
மற்ற எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
பிலிப்பியர் 2 : 22 (IRVTA)
தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.
பிலிப்பியர் 2 : 23 (IRVTA)
ஆகவே, என் காரியங்கள் எப்படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன்.
பிலிப்பியர் 2 : 24 (IRVTA)
அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேன் என்று கர்த்தருக்குள் விசுவாசமாக இருக்கிறேன்.
பிலிப்பியர் 2 : 25 (IRVTA)
மேலும், என் சகோதரனும், உடன்வேலைக்காரனும், கிறிஸ்துவின் படைவீரனும், உங்களுடைய தூதுவனாகவும், என்னுடைய குறைவில் உதவி செய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடம் அனுப்பவேண்டும் என்று நினைத்தேன்.
பிலிப்பியர் 2 : 26 (IRVTA)
அவன் உங்கள் எல்லோர்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே அதிக மனச்சோர்வு அடைந்தவனாகவும் இருக்கிறான்.
பிலிப்பியர் 2 : 27 (IRVTA)
அவன் வியாதிப்பட்டு மரணத்திற்கு அருகில் இருந்தது உண்மைதான். ஆனாலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமட்டுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடி, எனக்கும் இரங்கினார்.
பிலிப்பியர் 2 : 28 (IRVTA)
ஆகவே, நீங்கள் அவனை மீண்டும் பார்த்து சந்தோஷப்படவும், என் துக்கம் குறையவும், அவனை சீக்கிரமாக அனுப்பினேன்.
பிலிப்பியர் 2 : 29 (IRVTA)
ஆனபடியால் நீங்கள் கர்த்தருக்குள் அதிகமான சந்தோஷத்தோடு அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனம்பண்ணுங்கள்.
பிலிப்பியர் 2 : 30 (IRVTA)
ஏனென்றால், நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்களுடைய குறைவை நிறைவாக்குவதற்கு, அவன் தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல், கிறிஸ்துவின் ஊழியத்திற்காக மரணத்திற்கு அருகில் இருந்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30