எண்ணாகமம் 9 : 1 (IRVTA)
பஸ்கா அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதத்தில் யெகோவா சீனாய் வனாந்திரத்தில் மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 9 : 2 (IRVTA)
“குறித்த காலத்தில் இஸ்ரவேல் மக்கள் பஸ்காவை அனுசரிக்கவேண்டும்.
எண்ணாகமம் 9 : 3 (IRVTA)
இந்த மாதம் பதினான்காம்தேதி மாலை வேளையாகிய குறித்த காலத்தில் அதை அனுசரிக்கவேண்டும்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைகளின்படியேயும் அதை அனுசரிக்கவேண்டும் என்றார்.
எண்ணாகமம் 9 : 4 (IRVTA)
அப்படியே பஸ்காவை அனுசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டான்.
எண்ணாகமம் 9 : 5 (IRVTA)
அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி மாலைநேரமான வேளையில், சீனாய் வனாந்திரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
எண்ணாகமம் 9 : 6 (IRVTA)
அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை அனுசரிக்கத்தகாதவர்களாக இருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து:
எண்ணாகமம் 9 : 7 (IRVTA)
“நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் மக்களோடு யெகோவாவுக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடி, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள்.
எண்ணாகமம் 9 : 8 (IRVTA)
மோசே அவர்களை நோக்கி: “பொறுங்கள்; யெகோவா உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.
எண்ணாகமம் 9 : 10 (IRVTA)
“நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலோ உங்கள் சந்ததியாரிலோ ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பயணமாகத் தூரமாக போயிருந்தாலும், யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டும்.
எண்ணாகமம் 9 : 11 (IRVTA)
அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினான்காம்தேதி மாலைநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் சாப்பிட்டு
எண்ணாகமம் 9 : 12 (IRVTA)
அதிகாலைவரை அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய எல்லா முறைகளின்படியும் அதை அனுசரிக்கவேண்டும்.
எண்ணாகமம் 9 : 13 (IRVTA)
ஒருவன் சுத்தமுள்ளவனுமாகப் பயணம் போகாதவனுமாக இருந்தும், பஸ்காவை அனுசரிக்காமல் போனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் யெகோவாவின் பலியைச் செலுத்தாதபடியால் தன்னுடைய மக்களில் இல்லாமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன்னுடைய பாவத்தைச் சுமப்பான்.
எண்ணாகமம் 9 : 14 (IRVTA)
ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறையின்படியும் அனுசரிக்கவேண்டும்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல்” என்றார்.
எண்ணாகமம் 9 : 15 (IRVTA)
ஆசரிப்புக்கூடாரத்தின் மேல் மேகம் வாசஸ்தலம் பிரதிஷ்டைசெய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடியது; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டானது; அது அதிகாலைவரை இருந்தது.
எண்ணாகமம் 9 : 16 (IRVTA)
இப்படி எப்போதும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது.
எண்ணாகமம் 9 : 17 (IRVTA)
மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்வார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் மக்கள் முகாமிடுவார்கள்.
எண்ணாகமம் 9 : 18 (IRVTA)
யெகோவாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் மக்கள் புறப்படுவார்கள்; யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாட்களெல்லாம் அவர்கள் முகாமில் தங்கியிருப்பார்கள்.
எண்ணாகமம் 9 : 19 (IRVTA)
மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் புறப்படாமல் யெகோவாவின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.
எண்ணாகமம் 9 : 20 (IRVTA)
மேகம் சிலநாட்கள் மட்டும் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிட்டு, யெகோவாவுடைய கட்டளையின்படியே புறப்படுவார்கள்.
எண்ணாகமம் 9 : 21 (IRVTA)
மேகம் மாலைதுவங்கி அதிகாலைவரை இருந்து, அதிகாலையில் உயர எழும்பும்போது, உடனே புறப்படுவார்கள்; பகலிலோ இரவிலோ மேகம் எழும்பும்போது புறப்படுவார்கள்.
எண்ணாகமம் 9 : 22 (IRVTA)
மேகமானது இரண்டு நாளாவது ஒரு மாதமாவது ஒரு வருடமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யாமல் முகாமிட்டிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ புறப்படுவார்கள்.
எண்ணாகமம் 9 : 23 (IRVTA)
யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; யெகோவாவுடைய கட்டளையின்படியே பயணம் செய்வார்கள்; யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே யெகோவாவுடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23