எண்ணாகமம் 7 : 1 (IRVTA)
பிரதிஷ்டை காணிக்கை மோசே வாசஸ்தலத்தை நிறுவி, அதையும் அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிப்பொருட்களையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்தி முடித்த நாளில்,
எண்ணாகமம் 7 : 2 (IRVTA)
தங்களுடைய பிதாக்களுடைய வம்சத்தலைவர்களும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
எண்ணாகமம் 7 : 3 (IRVTA)
தங்களுடைய காணிக்கையாக, ஆறு கூண்டுவண்டிகளையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டியும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, யெகோவாவுக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
எண்ணாகமம் 7 : 4 (IRVTA)
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 7 : 5 (IRVTA)
“நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி. லேவியர்களுக்கு அவரவர் வேலைக்குத் தகுந்தவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.
எண்ணாகமம் 7 : 6 (IRVTA)
அப்பொழுது மோசே அந்த வண்டிகளையும் மாடுகளையும் வாங்கி, லேவியர்களுக்குக் கொடுத்தான்.
எண்ணாகமம் 7 : 7 (IRVTA)
இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் சந்ததியார்களுக்கு, அவர்கள் வேலைக்குத்தகுந்த பங்காகக் கொடுத்தான்.
எண்ணாகமம் 7 : 8 (IRVTA)
நான்கு வண்டிகளையும் எட்டு மாடுகளையும் மெராரியின் சந்ததியினருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தகுந்த பங்காகக் கொடுத்தான்.
எண்ணாகமம் 7 : 9 (IRVTA)
கோகாத்தின் சந்ததியாருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாக இருந்தது.
எண்ணாகமம் 7 : 10 (IRVTA)
பலிபீடம் அபிஷேகம்செய்யப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்திற்கு முன்பாகத் தங்களுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.
எண்ணாகமம் 7 : 11 (IRVTA)
“அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தவேண்டும்” என்றார்.
எண்ணாகமம் 7 : 12 (IRVTA)
அப்படியே முதலாம் நாளில் தன்னுடைய காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் மகன் நகசோன்.
எண்ணாகமம் 7 : 13 (IRVTA)
அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைப்பதற்காக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
எண்ணாகமம் 7 : 14 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள தங்கத்தால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7 : 15 (IRVTA)
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7 : 16 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7 : 17 (IRVTA)
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் மகனாகிய நகசோனின் காணிக்கை.
எண்ணாகமம் 7 : 18 (IRVTA)
இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் மகன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7 : 19 (IRVTA)
அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைப்பதற்காக, எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
எண்ணாகமம் 7 : 20 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7 : 21 (IRVTA)
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7 : 22 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7 : 23 (IRVTA)
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் மகனாகிய நெதனெயேலின் காணிக்கை.
எண்ணாகமம் 7 : 24 (IRVTA)
மூன்றாம் நாளில் ஏலோனின் மகனாகிய எலியாப் என்னும் செபுலோன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7 : 25 (IRVTA)
அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைப்பதற்காக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
எண்ணாகமம் 7 : 26 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7 : 27 (IRVTA)
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7 : 28 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7 : 29 (IRVTA)
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும் ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏலோனின் மகனாகிய எலியாபின் காணிக்கை.
எண்ணாகமம் 7 : 30 (IRVTA)
நான்காம் நாளில் சேதேயூரின் மகனாகிய எலிசூர் என்னும் ரூபன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7 : 31 (IRVTA)
அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைப்பதற்காக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
எண்ணாகமம் 7 : 32 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7 : 33 (IRVTA)
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7 : 34 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7 : 35 (IRVTA)
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்காடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சேதேயூரின் மகனாகிய எலிசூரின் காணிக்கை.
எண்ணாகமம் 7 : 36 (IRVTA)
ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7 : 37 (IRVTA)
அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிகலமும் ஆகிய இந்த இரண்டும்,
எண்ணாகமம் 7 : 38 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7 : 39 (IRVTA)
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7 : 40 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7 : 41 (IRVTA)
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின் மகனாகிய செலூமியேலின் காணிக்கை.
எண்ணாகமம் 7 : 42 (IRVTA)
ஆறாம் நாளிலே தேகுவேலின் மகனாகிய எலியாசாப் என்னும் காத் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7 : 43 (IRVTA)
அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
எண்ணாகமம் 7 : 44 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7 : 45 (IRVTA)
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7 : 46 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7 : 47 (IRVTA)
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் மகனாகிய எலியாசாபின் காணிக்கை.
எண்ணாகமம் 7 : 48 (IRVTA)
ஏழாம் நாளில் அம்மீயூதின் மகனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7 : 49 (IRVTA)
அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
எண்ணாகமம் 7 : 50 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7 : 51 (IRVTA)
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7 : 52 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7 : 53 (IRVTA)
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் மகனாகிய எலிஷாமாவின் காணிக்கை.
எண்ணாகமம் 7 : 54 (IRVTA)
எட்டாம் நாளில் பெதாசூரின் மகனாகிய கமாலியேல் என்னும் மனாசே சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7 : 55 (IRVTA)
அவனுடைய காணிக்கையாவது: உணவுபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
எண்ணாகமம் 7 : 56 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7 : 57 (IRVTA)
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7 : 58 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7 : 59 (IRVTA)
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின் மகனாகிய கமாலியேலின் காணிக்கை.
எண்ணாகமம் 7 : 60 (IRVTA)
ஒன்பதாம் நாளில் கீதெயோனின் மகனாகிய அபீதான் என்னும் பென்யமீன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7 : 61 (IRVTA)
அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
எண்ணாகமம் 7 : 62 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7 : 63 (IRVTA)
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7 : 64 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7 : 65 (IRVTA)
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் மகனாகிய அபீதானின் காணிக்கை.
எண்ணாகமம் 7 : 66 (IRVTA)
பத்தாம் நாளில் அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர் என்னும் தாண் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7 : 67 (IRVTA)
அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
எண்ணாகமம் 7 : 68 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7 : 69 (IRVTA)
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7 : 70 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7 : 71 (IRVTA)
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேரின் காணிக்கை.
எண்ணாகமம் 7 : 72 (IRVTA)
பதினோராம் நாளில் ஓகிரானின் மகனாகிய பாகியேல் என்னும் ஆசேர் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7 : 73 (IRVTA)
அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
எண்ணாகமம் 7 : 74 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7 : 75 (IRVTA)
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7 : 76 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7 : 77 (IRVTA)
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின் மகனாகிய பாகியேலின் காணிக்கை.
எண்ணாகமம் 7 : 78 (IRVTA)
பன்னிரண்டாம் நாளில் ஏனானின் மகனாகிய அகீரா என்னும் நப்தலி சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7 : 79 (IRVTA)
அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
எண்ணாகமம் 7 : 80 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7 : 81 (IRVTA)
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7 : 82 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7 : 83 (IRVTA)
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் மகனாகிய அகீராவின் காணிக்கை.
எண்ணாகமம் 7 : 84 (IRVTA)
பலிபீடம் அபிஷேகம் செய்யப்பட்டபோது, இஸ்ரவேல் பிரபுக்களால் செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது: வெள்ளித்தாலங்கள் பன்னிரண்டு, வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு.
எண்ணாகமம் 7 : 85 (IRVTA)
ஒவ்வொரு வெள்ளித்தட்டு நூற்று முப்பது சேக்கல் நிறையும், ஒவ்வொரு கலம் எழுபது சேக்கல் நிறையுமாக, இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையாக இருந்தது.
எண்ணாகமம் 7 : 86 (IRVTA)
தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூப கரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாக இருந்தது.
எண்ணாகமம் 7 : 87 (IRVTA)
சர்வாங்கதகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒருவயதுடைய ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்குரிய போஜனபலிகளும் கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு.
எண்ணாகமம் 7 : 88 (IRVTA)
சமாதானபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக் கடாக்கள் அறுபது; ஒருவயதுடைய ஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்செய்யப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே.
எண்ணாகமம் 7 : 89 (IRVTA)
மோசே தேவனோடு பேசும்படி ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போது, தன்னோடே பேசுகிறவர்களின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் [* ஆதி 3 அதிகாரத்தில் ஜீவ விருட்சத்தை பாதுகாக்க இருந்தது போல தெய்வீக பொருட்களை பாதுகாக்க இங்கு இருந்தன. ] நடுவிலிருந்து உண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடு பேசுவார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89