எண்ணாகமம் 34 : 1 (IRVTA)
கானானின் எல்லைகள் யெகோவா மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 34 : 2 (IRVTA)
நீ இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது; நீங்கள் கானான்தேசத்தில் சேரும்போது,
எண்ணாகமம் 34 : 3 (IRVTA)
உங்கள் தென்புறம் சீன்வனாந்திரம் துவங்கி ஏதோம் தேசத்தின் ஓரம்வரை இருக்கும்; கிழக்கே இருக்கிற சவக்கடலின் கடைசி துவங்கி உங்களுடைய தென் எல்லையாக இருக்கும்.
எண்ணாகமம் 34 : 4 (IRVTA)
உங்களுடைய எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்திரம் வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் ஆதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,
எண்ணாகமம் 34 : 5 (IRVTA)
அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் மத்திய தரைக் கடலில் முடியும்.
எண்ணாகமம் 34 : 6 (IRVTA)
மேற்கு திசைக்குப் மத்தியதரைக் கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்கு புறத்து எல்லையாக இருக்கும்.
எண்ணாகமம் 34 : 7 (IRVTA)
உங்களுக்கு வடதிசை எல்லை மத்தியதரைக் கடல் துவங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து,
எண்ணாகமம் 34 : 8 (IRVTA)
ஓர் என்னும் மலை துவங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
எண்ணாகமம் 34 : 9 (IRVTA)
அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப் போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாக இருக்கும்.
எண்ணாகமம் 34 : 10 (IRVTA)
உங்களுக்குக் கிழக்குத்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து,
எண்ணாகமம் 34 : 11 (IRVTA)
சேப்பாமிலிருந்து எல்லையானது ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாவரையும், அங்கேயிருந்து கலிலேயா கடல் வரையும் அதின் கிழக்குக் கரையோரமாக,
எண்ணாகமம் 34 : 12 (IRVTA)
அங்கேயிருந்து யோர்தான் நதி வரையும் போய், சவக்கடலில் முடியும்; இந்தச் சுற்று எல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல்” என்றார்.
எண்ணாகமம் 34 : 13 (IRVTA)
அப்பொழுது மோசே இஸ்ரவேல் மக்களை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி யெகோவா கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.
எண்ணாகமம் 34 : 14 (IRVTA)
ரூபன் சந்ததியர்கள் தங்கள் முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், காத் சந்ததியர்கள் தங்கள் முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், தங்களுடைய சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்களுடைய சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
எண்ணாகமம் 34 : 15 (IRVTA)
இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகிலுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்களுடைய சுகந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்” என்றான்.
எண்ணாகமம் 34 : 16 (IRVTA)
மேலும் யெகோவா மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 34 : 17 (IRVTA)
உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும் மனிதர்களின் பெயர்களாவன: “ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவுமே.
எண்ணாகமம் 34 : 18 (IRVTA)
அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.
எண்ணாகமம் 34 : 19 (IRVTA)
அந்த மனிதர்களுடைய பெயர்களாவன: யூதா கோத்திரத்திற்கு எப்புன்னேயின் மகனாகிய காலேபும்,
எண்ணாகமம் 34 : 20 (IRVTA)
சிமியோன் சந்ததியாரும் கோத்திரத்திற்கு அம்மியூதின் மகனாகிய சாமுவேலும்,
எண்ணாகமம் 34 : 21 (IRVTA)
பென்யமீன் கோத்திரத்திற்குக் கிஸ்லோனின் மகனாகிய எலிதாதும்,
எண்ணாகமம் 34 : 22 (IRVTA)
தாண் சந்ததியாரின் கோத்திரத்திற்கு யொக்லியின் மகனாகிய புக்கி என்னும் பிரபுவும்,
எண்ணாகமம் 34 : 23 (IRVTA)
யோசேப்பின் மகனாகிய மனாசே சந்ததியாரின் கோத்திரத்திற்கு எபோதின் மகனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,
எண்ணாகமம் 34 : 24 (IRVTA)
எப்பிராயீம் சந்ததியாரின் கோத்திரத்திற்கு சிப்தானின் மகனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும்,
எண்ணாகமம் 34 : 25 (IRVTA)
செபுலோன் சந்ததியாரின் கோத்திரத்திற்கு பர்னாகின் மகனாகிய எலிசாபான் என்னும் பிரபுவும்,
எண்ணாகமம் 34 : 26 (IRVTA)
இசக்கார் சந்ததியாரின் கோத்திரத்திற்கு ஆசானின் மகனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,
எண்ணாகமம் 34 : 27 (IRVTA)
ஆசேர் சந்ததியாரின் கோத்திரத்திற்கு சேலோமியின் மகனாகிய அகியூத் என்னும் பிரபுவும்,
எண்ணாகமம் 34 : 28 (IRVTA)
நப்தலி சந்ததியாரின் கோத்திரத்திற்கு அம்மியூதின் மகனாகிய, பெதாக்கேல் என்னும் பிரபுவுமே” என்றார்.
எண்ணாகமம் 34 : 29 (IRVTA)
கானான்தேசத்திலே இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் யெகோவா கட்டளையிட்டவர்கள் இவர்களே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29