எண்ணாகமம் 33 : 1 (IRVTA)
இஸ்ரவேல் பயணத்தின் நிலைகள் மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் இராணுவங்களின்படி எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுடைய பயணங்களின் விபரம்:
எண்ணாகமம் 33 : 2 (IRVTA)
மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடி அவர்கள் புறப்பட்ட முறையாக அவர்களுடைய பயணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டு பயணித்த பயணங்களாவன:
எண்ணாகமம் 33 : 3 (IRVTA)
முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர்கள் எல்லோரும் பார்க்க, இஸ்ரவேல் மக்கள் பலத்தகையுடன் புறப்பட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 4 (IRVTA)
அப்பொழுது எகிப்தியர்கள் யெகோவா தங்களுக்குள்ளே அழித்த மூத்தபிள்ளைகளையெல்லாம் அடக்கம்செய்தார்கள்; அவர்களுடைய தெய்வங்களின் பெயரிலும் யெகோவா நீதிசெலுத்தினார்* யெகோவா எகிப்தியர் தெய்வங்களை விட வல்லமையுள்ளவர் என்று நிருபித்திருக்கிறார் .
எண்ணாகமம் 33 : 5 (IRVTA)
பின்பு இஸ்ரவேல் மக்கள் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 6 (IRVTA)
சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்திரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 7 (IRVTA)
ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாக முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 8 (IRVTA)
ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்திரத்திற்குப் போய், ஏத்தாம் வனாந்திரத்திலே மூன்று நாட்கள் பயணம்செய்து, மாராவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 9 (IRVTA)
மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 10 (IRVTA)
ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 11 (IRVTA)
சிவந்த சமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 12 (IRVTA)
சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 13 (IRVTA)
தொப்காவிலிருந்து புறப்பட்டுப் போய், ஆலூசிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 14 (IRVTA)
ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
எண்ணாகமம் 33 : 15 (IRVTA)
ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 16 (IRVTA)
சீனாய் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 17 (IRVTA)
கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 18 (IRVTA)
ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 19 (IRVTA)
ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 20 (IRVTA)
ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 21 (IRVTA)
லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 22 (IRVTA)
ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 23 (IRVTA)
கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 24 (IRVTA)
சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 25 (IRVTA)
ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 26 (IRVTA)
மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 27 (IRVTA)
தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 28 (IRVTA)
தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 29 (IRVTA)
மித்காவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 30 (IRVTA)
அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 31 (IRVTA)
மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 32 (IRVTA)
பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 33 (IRVTA)
கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 34 (IRVTA)
யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 35 (IRVTA)
எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 36 (IRVTA)
எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 37 (IRVTA)
காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 38 (IRVTA)
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் யெகோவாவுடைய கட்டளையின்படி ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 40 ஆம் வருடம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.
எண்ணாகமம் 33 : 39 (IRVTA)
ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, 123 வயதாக இருந்தான்.
எண்ணாகமம் 33 : 40 (IRVTA)
அந்த நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் மக்கள் வருகிறதைக் கேள்விப்பட்டான்.
எண்ணாகமம் 33 : 41 (IRVTA)
ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 42 (IRVTA)
சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 43 (IRVTA)
பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 44 (IRVTA)
ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 45 (IRVTA)
அந்த மேடுகளை விட்டுப்பறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 46 (IRVTA)
தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 47 (IRVTA)
அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 48 (IRVTA)
அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 49 (IRVTA)
யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் துவங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் முகாமிட்டிருந்தார்கள்.
எண்ணாகமம் 33 : 50 (IRVTA)
எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே யெகோவா மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 33 : 51 (IRVTA)
நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,
எண்ணாகமம் 33 : 52 (IRVTA)
அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,
எண்ணாகமம் 33 : 53 (IRVTA)
தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கவேண்டும்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.
எண்ணாகமம் 33 : 54 (IRVTA)
சீட்டுப்போட்டு, தேசத்தை உங்களுடைய குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக மக்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச மக்களுக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அந்த இடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.
எண்ணாகமம் 33 : 55 (IRVTA)
நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமல் இருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்களுடைய கண்களில் முட்களும் உங்களுடைய விலாக்களிலே கூர்களுமாக இருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.
எண்ணாகமம் 33 : 56 (IRVTA)
அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல்” என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56