எண்ணாகமம் 3 : 1 (IRVTA)
லேவியர்கள் சீனாய் மலையில் யெகோவா மோசேயோடு பேசின நாளில், ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறு:
எண்ணாகமம் 3 : 2 (IRVTA)
ஆரோனுடைய மகன்கள், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.
எண்ணாகமம் 3 : 3 (IRVTA)
ஆசாரிய ஊழியம் செய்வதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம் பெற்ற ஆசாரியர்களான ஆரோனுடைய மகன்களின் பெயர்கள் இவைகளே.
எண்ணாகமம் 3 : 4 (IRVTA)
நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்திரத்தில் அந்நிய அக்கினியைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, யெகோவாவுடைய சந்நிதியில் இறந்துபோனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்;
எண்ணாகமம் 3 : 6 (IRVTA)
“நீ லேவிகோத்திரத்தார்களைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து.
எண்ணாகமம் 3 : 7 (IRVTA)
அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யவேண்டும்.
எண்ணாகமம் 3 : 8 (IRVTA)
அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் பொருட்கள் முதலானவைகளையும், இஸ்ரவேல் கோத்திரத்தின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவேண்டும்.
எண்ணாகமம் 3 : 9 (IRVTA)
ஆகையால் லேவியர்களை ஆரோனிடத்திலும் அவனுடைய மகன்களிடத்திலும் ஒப்புக்கொடு; இஸ்ரவேல் மக்களில் இவர்கள் முழுவதுமாக அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
எண்ணாகமம் 3 : 10 (IRVTA)
ஆரோனையும் அவனுடைய மகன்களையுமோ, தங்களுடைய ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கவேண்டும், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும் என்றார்.
எண்ணாகமம் 3 : 11 (IRVTA)
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 3 : 12 (IRVTA)
“இஸ்ரவேல் மக்களில் கர்ப்பம்திறந்து பிறக்கிற முதற்பேறான எல்லாவற்றிற்கும் பதிலாக, நான் லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாக இருக்கிறார்கள்.
எண்ணாகமம் 3 : 13 (IRVTA)
முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் கொலைசெய்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்கள்முதல் மிருகஜீவன் வரையுள்ள முதற்பேறான எல்லாவற்றையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதால், அவைகள் என்னுடையவைகளாக இருக்கும்; நான் யெகோவா என்றார்.
எண்ணாகமம் 3 : 14 (IRVTA)
பின்னும் யெகோவா சீனாய் வனாந்திரத்தில் மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 3 : 15 (IRVTA)
“லேவியின் மக்களை அவர்களுடைய முன்னோர்களின் வம்சங்களின்படியே எண்ணவேண்டும்; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணு என்றார்.
எண்ணாகமம் 3 : 16 (IRVTA)
அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை, தனக்குக் கட்டளையிட்டபடி மோசே அவர்களை எண்ணினான்.
எண்ணாகமம் 3 : 17 (IRVTA)
லேவியின் மகன்கள் தங்களுடைய பெயர்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
எண்ணாகமம் 3 : 18 (IRVTA)
தங்களுடைய வம்சத்தின்படியே கெர்சோனுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.
எண்ணாகமம் 3 : 19 (IRVTA)
தங்களுடைய வம்சங்களின்படியே கோகாத்துடைய மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
எண்ணாகமம் 3 : 20 (IRVTA)
தங்களுடைய வம்சங்களின்படியே மெராரியினுடைய மகன்கள், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியர்களுடைய பிதாக்களின் வம்சத்தார்.
எண்ணாகமம் 3 : 21 (IRVTA)
கெர்சோனின் வழியாக லிப்னீயர்களின் வம்சமும் சீமேயியர்கள் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியர்களின் வம்சங்கள்.
எண்ணாகமம் 3 : 22 (IRVTA)
அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் 7,500 பேராக இருந்தார்கள்.
எண்ணாகமம் 3 : 23 (IRVTA)
கெர்சோனியர்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே முகாமிடவேண்டும்.
எண்ணாகமம் 3 : 24 (IRVTA)
கெர்சோனியர்களுடைய தகப்பன் வம்சத்திற்குத் தலைவன் லாயேலின் மகனாகிய எலியாசாப் என்பவன்.
எண்ணாகமம் 3 : 25 (IRVTA)
ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் குடும்பத்தாரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவும்,
எண்ணாகமம் 3 : 26 (IRVTA)
வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தின் அருகிலும் சுற்றிலும் இருக்கிற முற்றத்தின் தொங்கு திரைகளும், முற்றத்தின்வாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.
எண்ணாகமம் 3 : 27 (IRVTA)
கோகாத்தின் வழியாக அம்ராமியர்களின் வம்சமும் இத்சாரியர்களின் வம்சமும் எப்ரோனியர்களின் வம்சமும் ஊசியேலர்களின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியர்களின் வம்சங்கள்.
எண்ணாகமம் 3 : 28 (IRVTA)
ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்திற்குரியவைகளைக் காப்பவர்கள், 8,600 பேராக இருந்தார்கள்.
எண்ணாகமம் 3 : 29 (IRVTA)
கோகாத் சந்ததியார்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே முகாமிடவேண்டும்.
எண்ணாகமம் 3 : 30 (IRVTA)
அவர்களின் தலைவன், ஊசியேலின் மகனாகிய எலிசாபான்.
எண்ணாகமம் 3 : 31 (IRVTA)
அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிப்பொருட்களும், தொங்கு திரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.
எண்ணாகமம் 3 : 32 (IRVTA)
ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசார் என்பவன் லேவியர்களுடைய தலைவர்களுக்குத் தலைவனாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 3 : 33 (IRVTA)
மெராரியின் வழியாக மகலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
எண்ணாகமம் 3 : 34 (IRVTA)
அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் 6,200 பேராக இருந்தார்கள்.
எண்ணாகமம் 3 : 35 (IRVTA)
அபியாயேலின் மகனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் முகாமிடவேண்டும்.
எண்ணாகமம் 3 : 36 (IRVTA)
அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், அதினுடைய எல்லாப் பணிப்பொருட்களும், அதற்குரியவைகள் அனைத்தும்,
எண்ணாகமம் 3 : 37 (IRVTA)
சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளுமே.
எண்ணாகமம் 3 : 38 (IRVTA)
ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்திற்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கிழக்குபக்கத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் மக்களின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும்.
எண்ணாகமம் 3 : 39 (IRVTA)
மோசேயும், ஆரோனும், யெகோவாவுடைய வாக்கின்படி, லேவியர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் 22,000 பேராக இருந்தார்கள்.
எண்ணாகமம் 3 : 40 (IRVTA)
“அதன் பின்பு யெகோவா மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மக்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி அவர்கள் பெயர்களை பட்டியலிட்டு,
எண்ணாகமம் 3 : 41 (IRVTA)
இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான எல்லாவற்றிற்கும் பதிலாக லேவியர்களையும், இஸ்ரவேல் சந்ததியின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் யெகோவா என்றார்.
எண்ணாகமம் 3 : 42 (IRVTA)
அப்பொழுது மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான எல்லோரையும் எண்ணினான்.
எண்ணாகமம் 3 : 43 (IRVTA)
ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லோரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, 22,273 பேராக இருந்தார்கள்.
எண்ணாகமம் 3 : 44 (IRVTA)
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 3 : 45 (IRVTA)
“நீ இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான அனைவருக்கும் பதிலாக லேவியர்களையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியர்களின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள்; நான் யெகோவா.
எண்ணாகமம் 3 : 46 (IRVTA)
இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறுகளில் லேவியர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, மீட்கப்படவேண்டிய 273 பேரிடத்திலும்,
எண்ணாகமம் 3 : 47 (IRVTA)
நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்கவேண்டும்; அந்தச் சேக்கலானது இருபது கேரா.
எண்ணாகமம் 3 : 48 (IRVTA)
லேவியர்களுடைய எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் பணத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடு” என்றார்.
எண்ணாகமம் 3 : 49 (IRVTA)
அப்படியே லேவியர்களால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறானவர்களிடத்தில்,
எண்ணாகமம் 3 : 50 (IRVTA)
1,365 சேக்கலாகிய பணத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,
எண்ணாகமம் 3 : 51 (IRVTA)
யெகோவாவுடைய வார்தையின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும், யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51