எண்ணாகமம் 29 : 1 (IRVTA)
{எக்காள பண்டிகை} [PS] “ஏழாம் மாதம் முதல் தேதி பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்தஒரு வேலையும் செய்யக்கூடாது; அது உங்களுக்கு எக்காளம் ஊதும் நாளாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 29 : 2 (IRVTA)
அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29 : 3 (IRVTA)
அவைகளுக்கு அடுத்த உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
எண்ணாகமம் 29 : 4 (IRVTA)
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
எண்ணாகமம் 29 : 5 (IRVTA)
உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,
எண்ணாகமம் 29 : 6 (IRVTA)
மாதப்பிறப்பின் சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், தினந்தோறும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் தவிர, இவைகளையும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தவேண்டும். [PS]
எண்ணாகமம் 29 : 7 (IRVTA)
{பரிகாரத்தின் நாள்} [PS] “இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதிலே நீங்கள் எந்தஒரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி [* உபவாசித்து] ,
எண்ணாகமம் 29 : 8 (IRVTA)
யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29 : 9 (IRVTA)
அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
எண்ணாகமம் 29 : 10 (IRVTA)
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
எண்ணாகமம் 29 : 11 (IRVTA)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரணபலியையும், நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும். [PS]
எண்ணாகமம் 29 : 12 (IRVTA)
{ஆசரிப்புக்கூடார பண்டிகை} [PS] “ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது; ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகை அனுசரிக்கவேண்டும்.
எண்ணாகமம் 29 : 13 (IRVTA)
நீங்கள் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்கதகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29 : 14 (IRVTA)
அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும்,
எண்ணாகமம் 29 : 15 (IRVTA)
பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
எண்ணாகமம் 29 : 16 (IRVTA)
நிரந்தர தகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
எண்ணாகமம் 29 : 17 (IRVTA)
“இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29 : 18 (IRVTA)
காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தகுந்தபடி முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29 : 19 (IRVTA)
நிரந்தர சர்வாங்க தகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
எண்ணாகமம் 29 : 20 (IRVTA)
“மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29 : 21 (IRVTA)
காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29 : 22 (IRVTA)
நிரந்தர சர்வாங்க தகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
எண்ணாகமம் 29 : 23 (IRVTA)
“நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29 : 24 (IRVTA)
காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29 : 25 (IRVTA)
நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
எண்ணாகமம் 29 : 26 (IRVTA)
“ஐந்தாம் நாளிலே ஒன்பது காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29 : 27 (IRVTA)
காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29 : 28 (IRVTA)
நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
எண்ணாகமம் 29 : 29 (IRVTA)
“ஆறாம் நாளிலே எட்டுக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29 : 30 (IRVTA)
காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29 : 31 (IRVTA)
நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலிகளையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
எண்ணாகமம் 29 : 32 (IRVTA)
“ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29 : 33 (IRVTA)
காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29 : 34 (IRVTA)
நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
எண்ணாகமம் 29 : 35 (IRVTA)
“எட்டாம் நாள் உங்களுக்கு விசேஷித்த ஆசரிப்பு நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.
எண்ணாகமம் 29 : 36 (IRVTA)
அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்கு நறுமண வாசனையுள்ள தகனமான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 29 : 37 (IRVTA)
காளையும், ஆட்டுக்கடாவும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தகுந்தபடி முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
எண்ணாகமம் 29 : 38 (IRVTA)
நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
எண்ணாகமம் 29 : 39 (IRVTA)
“உங்களுடைய பொருத்தனைகளையும், உங்களுடைய உற்சாகபலிகளையும், உங்களுடைய சர்வாங்கதகனபலிகளையும், உங்களுடைய உணவுபலிகளையும், உங்களுடைய பானபலிகளையும், உங்களுடைய சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்களுடைய பண்டிகைகளிலே யெகோவாவுக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.
எண்ணாகமம் 29 : 40 (IRVTA)
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னான். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: