எண்ணாகமம் 23 : 1 (IRVTA)
{பிலேயாமின் முதல் தேவ வாக்கு} [PS] பிலேயாம் பாலாகை நோக்கி: “நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும்” என்றான்.
எண்ணாகமம் 23 : 2 (IRVTA)
பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பாலாகும் பிலேயாமும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள்.
எண்ணாகமம் 23 : 3 (IRVTA)
பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: “உம்முடைய சர்வாங்கதகனபலி அருகில் நில்லும், நான் போய்வருகிறேன்; யெகோவா வந்து என்னைச் சந்திப்பதாக இருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான்.
எண்ணாகமம் 23 : 4 (IRVTA)
தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: “நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்செய்து, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன்” என்றான்.
எண்ணாகமம் 23 : 5 (IRVTA)
யெகோவா பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: “நீ பாலாகினிடத்தில் திரும்பிப் போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும்” என்றார்.
எண்ணாகமம் 23 : 6 (IRVTA)
அவனிடம் அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய எல்லா பிரபுக்களோடுங்கூட தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்.
எண்ணாகமம் 23 : 7 (IRVTA)
அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: [QBR] “மோவாபின் ராஜாவாகிய பாலாக் [QBR] என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: [QBR] நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; [QBR] நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும்” என்று சொன்னான். [QBR]
எண்ணாகமம் 23 : 8 (IRVTA)
தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? [QBR] யெகோவா வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? [QBR]
எண்ணாகமம் 23 : 9 (IRVTA)
உயரமான மலையிலிருந்து நான் அவனைக் கண்டு, [QBR] குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; [QBR] அந்த மக்கள் தேசத்தோடு கலக்காமல் தனியே வாழ்வார்கள். [QBR]
எண்ணாகமம் 23 : 10 (IRVTA)
“யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? [QBR] இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? [QBR] நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, [QBR] என்னுடைய முடிவு அவனுடைய முடிவுபோல் இருப்பதாக” என்றான். [PE][PS]
எண்ணாகமம் 23 : 11 (IRVTA)
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “நீர் எனக்கு என்ன செய்தீர்; என்னுடைய எதிரிகளைச் சபிக்கும்படி உம்மை அழைத்து வந்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்” என்றான்.
எண்ணாகமம் 23 : 12 (IRVTA)
அதற்கு அவன்: “யெகோவா என்னுடைய வாயில் அருளினதையே சொல்வது என்னுடைய கடமையல்லவா” என்றான். [PS]
எண்ணாகமம் 23 : 13 (IRVTA)
{பிலேயாமின் இரண்டாவது தேவ வாக்கு} [PS] பின்பு பாலாக் அவனை நோக்கி: “நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடுகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லோரையும் பாரக்காமல், அவர்களுடைய கடைசி முகாமை மட்டும் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்” என்று சொல்லி,
எண்ணாகமம் 23 : 14 (IRVTA)
அவனைப் பிஸ்காவின் உச்சியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
எண்ணாகமம் 23 : 15 (IRVTA)
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “இங்கே உம்முடைய சர்வாங்கதகனபலி அருகில் நில்லும்; நான் அங்கே போய்க் யெகோவாவைச் சந்தித்துவருகிறேன்” என்றான்.
எண்ணாகமம் 23 : 16 (IRVTA)
யெகோவா பிலேயாமைச் சந்தித்து, அவனுடைய வாயிலே வசனத்தை அருளி; “நீ பாலாகினிடம் திரும்பிப்போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும்” என்றார்.
எண்ணாகமம் 23 : 17 (IRVTA)
அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: “யெகோவா என்ன சொன்னார்” என்று கேட்டான்.
எண்ணாகமம் 23 : 18 (IRVTA)
அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: [QBR] “பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் மகனே, [QBR] எனக்குச் செவிகொடும். [QBR]
எண்ணாகமம் 23 : 19 (IRVTA)
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; [QBR] மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; [QBR] அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா? [QBR] அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா? [QBR]
எண்ணாகமம் 23 : 20 (IRVTA)
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளை பெற்றேன்; [QBR] அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது. [QBR]
எண்ணாகமம் 23 : 21 (IRVTA)
அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, [QBR] இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; [QBR] அவர்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களோடு இருக்கிறார்; [QBR] ராஜாவின் வெற்றியின் கெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. [QBR]
எண்ணாகமம் 23 : 22 (IRVTA)
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; [QBR] காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு. [QBR]
எண்ணாகமம் 23 : 23 (IRVTA)
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, [QBR] இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; [QBR] தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும். [QBR]
எண்ணாகமம் 23 : 24 (IRVTA)
அந்த மக்கள் கொடிய சிங்கம்போல எழும்பும், [QBR] இளம்சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; [QBR] அது தான் பிடித்த இரையைச் சாப்பிட்டு, [QBR] வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை படுத்துக்கொள்வதில்லை” என்றான். [PE][PS]
எண்ணாகமம் 23 : 25 (IRVTA)
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம்” என்றான்.
எண்ணாகமம் 23 : 26 (IRVTA)
அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: “யெகோவா சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடு நான் சொல்லவில்லையா” என்றான். [PS]
எண்ணாகமம் 23 : 27 (IRVTA)
{பிலேயாமின் மூன்றாவது தேவ வாக்கு} [PS] அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கே இருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாக இருக்கும்” என்று சொல்லி,
எண்ணாகமம் 23 : 28 (IRVTA)
அவனை எஷிமோனுக்கு எதிராக இருக்கிற பேயோரின் உச்சிக்கு அழைத்துக்கொண்டு போனான்.
எண்ணாகமம் 23 : 29 (IRVTA)
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்செய்யும்” என்றான்.
எண்ணாகமம் 23 : 30 (IRVTA)
பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30

BG:

Opacity:

Color:


Size:


Font: