எண்ணாகமம் 2 : 1 (IRVTA)
கோத்திர முகாம்களை அமைத்தல் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
எண்ணாகமம் 2 : 2 (IRVTA)
“இஸ்ரவேல் சந்ததியார்கள் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தைச் சேர்ந்த தங்கள் தங்கள் கொடியருகில் தங்களுடைய கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.
எண்ணாகமம் 2 : 3 (IRVTA)
யூதாவின் முகாமின் கொடியை உடைய இராணுவங்கள் சூரியன் உதிக்கும் கிழக்குப்புறத்திலே முகாமிடவேண்டும்; அம்மினதாபின் மகனாகிய நகசோன் யூதா சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 2 : 4 (IRVTA)
எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 74,600 பேர்.
எண்ணாகமம் 2 : 5 (IRVTA)
அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 2 : 6 (IRVTA)
எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 54,400 பேர்.
எண்ணாகமம் 2 : 7 (IRVTA)
அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏலோனின் மகனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 2 : 8 (IRVTA)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 57,400 பேர்.
எண்ணாகமம் 2 : 9 (IRVTA)
எண்ணப்பட்ட யூதாவின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,86,400 பேர்; இவர்கள் பயணத்தில் முதல் முகாமாகப் போகவேண்டும்.
எண்ணாகமம் 2 : 10 (IRVTA)
“ரூபனுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் தென்புறத்தில் முகாமிடவேண்டும்; சேதேயூரின் மகனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 2 : 11 (IRVTA)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 46,500 பேர்.
எண்ணாகமம் 2 : 12 (IRVTA)
அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 2 : 13 (IRVTA)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 59,300 பேர்.
எண்ணாகமம் 2 : 14 (IRVTA)
அவன் அருகே காத் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ரேகுவேலின் மகனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்கு படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 2 : 15 (IRVTA)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பது 45,650 பேர்.
எண்ணாகமம் 2 : 16 (IRVTA)
எண்ணப்பட்ட ரூபனின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,51,450 பேர்; இவர்கள் பயணத்தில் இரண்டாம் முகாமாகப் போகவேண்டும்.
எண்ணாகமம் 2 : 17 (IRVTA)
“பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியர்களின் இராணுவத்தோடு முகாம்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படி முகாமிடுகிறார்களோ, அப்படியே அவரவர் தங்களுடைய வரிசையிலே தங்களுடைய கொடிகளோடு பிரயாணமாகப் போகவேண்டும்.
எண்ணாகமம் 2 : 18 (IRVTA)
“எப்பிராயீமுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் மேற்கு புறத்தில் இறங்கவேண்டும், அம்மியூதின் மகனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 2 : 19 (IRVTA)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர்.
எண்ணாகமம் 2 : 20 (IRVTA)
அவன் அருகே மனாசே கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; பெதாசூரின் மகனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 2 : 21 (IRVTA)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 32,200 பேர்.
எண்ணாகமம் 2 : 22 (IRVTA)
அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; கீதெயோனின் மகனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 2 : 23 (IRVTA)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 35,400 பேர்.
எண்ணாகமம் 2 : 24 (IRVTA)
எண்ணப்பட்ட எப்பிராயீமின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,08,100 பேர்; இவர்கள் பயணத்தில் மூன்றாம் முகாமாகப் போகவேண்டும்.
எண்ணாகமம் 2 : 25 (IRVTA)
“தாணுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 2 : 26 (IRVTA)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 62,700 பேர்.
எண்ணாகமம் 2 : 27 (IRVTA)
அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஓகிரானின் மகனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 2 : 28 (IRVTA)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 41,500 பேர்.
எண்ணாகமம் 2 : 29 (IRVTA)
அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏனானின் மகனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 2 : 30 (IRVTA)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர்.
எண்ணாகமம் 2 : 31 (IRVTA)
எண்ணப்பட்ட தாணின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் 1,57,600 பேர்; இவர்கள் தங்களுடைய கொடிகளோடு கடைசியிலும் போகவேண்டும்”.
எண்ணாகமம் 2 : 32 (IRVTA)
இவர்களே தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள். முகாம்களிலே தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 6,03,550 பேராயிருந்தார்கள்.
எண்ணாகமம் 2 : 33 (IRVTA)
லேவியர்களோ, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்குள்ளே எண்ணப்படவில்லை.
எண்ணாகமம் 2 : 34 (IRVTA)
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் முகாமிட்டு, தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சங்களின்படியே பயணப்பட்டுப் போனார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34