எண்ணாகமம் 1 : 1 (IRVTA)
{கணக்கெடுத்தல்} [PS] இஸ்ரவேல் மக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், யெகோவா சீனாய் வனாந்திரத்தில் இருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 1 : 2 (IRVTA)
“நீங்கள் இஸ்ரவேலர்களின் முழுச்சபையாக இருக்கிற அவர்கள் தகப்பன்மார்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள ஆண்களாகிய எல்லா தலைகளையும் ஒவ்வொருவராக எண்ணிக் கணக்கெடுங்கள்.
எண்ணாகமம் 1 : 3 (IRVTA)
இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் அவர்களுடைய சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பாருங்கள்.
எண்ணாகமம் 1 : 4 (IRVTA)
ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களோடு இருக்கவேண்டும்; அவன் தன்னுடைய பிதாக்களின் வம்சத்திற்குத் தலைவனாக இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 1 : 5 (IRVTA)
உங்களோடு நிற்கவேண்டிய மனிதர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய மகன் எலிசூர்.
எண்ணாகமம் 1 : 6 (IRVTA)
சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் மகன் செலூமியேல்.
எண்ணாகமம் 1 : 7 (IRVTA)
யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் மகன் நகசோன்.
எண்ணாகமம் 1 : 8 (IRVTA)
இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் மகன் நெதனெயேல்.
எண்ணாகமம் 1 : 9 (IRVTA)
செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் மகன் எலியாப்.
எண்ணாகமம் 1 : 10 (IRVTA)
யோசேப்பின் மகன்களாகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் மகன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் மகன் கமாலியேல்.
எண்ணாகமம் 1 : 11 (IRVTA)
பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான்.
எண்ணாகமம் 1 : 12 (IRVTA)
தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் மகன் அகியேசேர்.
எண்ணாகமம் 1 : 13 (IRVTA)
ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் மகன் பாகியேல்.
எண்ணாகமம் 1 : 14 (IRVTA)
காத் கோத்திரத்தில் தேகுவேலின் மகன் எலியாசாப்.
எண்ணாகமம் 1 : 15 (IRVTA)
நப்தலி கோத்திரத்தில் ஏனானின் மகன் அகீரா.
எண்ணாகமம் 1 : 16 (IRVTA)
இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் [* ஆயிரம்பேர்களுக்குத்] ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களுமாக இருப்பவர்கள் என்றார்.
எண்ணாகமம் 1 : 17 (IRVTA)
அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதர்களைக் கூட்டிக்கொண்டு,
எண்ணாகமம் 1 : 18 (IRVTA)
இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படியும், முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், பெயர் கணக்கின்படியும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்களுடைய வம்சாவளியைத் தெரிவித்தார்கள்.
எண்ணாகமம் 1 : 19 (IRVTA)
இப்படிக் யெகோவா கட்டளையிட்டபடியே, மோசே அவர்களை சீனாய் வனாந்திரத்தில் எண்ணிப்பார்த்தான்.
எண்ணாகமம் 1 : 20 (IRVTA)
இஸ்ரவேலின் மூத்தமகனாகிய ரூபன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 1 : 21 (IRVTA)
ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 46,500 பேர்.
எண்ணாகமம் 1 : 22 (IRVTA)
சிமியோன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 1 : 23 (IRVTA)
சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 59,300 பேர்.
எண்ணாகமம் 1 : 24 (IRVTA)
காத் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 1 : 25 (IRVTA)
காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 45,650 பேர்.
எண்ணாகமம் 1 : 26 (IRVTA)
யூதா சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 1 : 27 (IRVTA)
யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 74,600 பேர்.
எண்ணாகமம் 1 : 28 (IRVTA)
இசக்கார் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 1 : 29 (IRVTA)
இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 54,400 பேர்.
எண்ணாகமம் 1 : 30 (IRVTA)
செபுலோன் சந்ததியாருடைய புறப்படக்கூடிய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 1 : 31 (IRVTA)
செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 57,400 பேர்.
எண்ணாகமம் 1 : 32 (IRVTA)
யோசேப்பின் மகன்களில் எப்பிராயீம் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 1 : 33 (IRVTA)
எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 40,500 பேர்.
எண்ணாகமம் 1 : 34 (IRVTA)
மனாசே சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 1 : 35 (IRVTA)
மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 32,200 பேர்.
எண்ணாகமம் 1 : 36 (IRVTA)
பென்யமீன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 1 : 37 (IRVTA)
பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 35,400 பேர்.
எண்ணாகமம் 1 : 38 (IRVTA)
தாண் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 1 : 39 (IRVTA)
தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 62,700 பேர்.
எண்ணாகமம் 1 : 40 (IRVTA)
ஆசேர் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 1 : 41 (IRVTA)
ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 41,500 பேர்.
எண்ணாகமம் 1 : 42 (IRVTA)
நப்தலி சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 1 : 43 (IRVTA)
நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 53,400 பேர்.
எண்ணாகமம் 1 : 44 (IRVTA)
எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய கோத்திரங்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.
எண்ணாகமம் 1 : 45 (IRVTA)
இஸ்ரவேல் பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்களாகிய எண்ணப்பட்ட நபர்கள் எல்லோரும்,
எண்ணாகமம் 1 : 46 (IRVTA)
6,03,550 பேராயிருந்தார்கள்.
எண்ணாகமம் 1 : 47 (IRVTA)
லேவியர்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடன் எண்ணப்படவில்லை.
எண்ணாகமம் 1 : 48 (IRVTA)
யெகோவா மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 1 : 49 (IRVTA)
“நீ லேவி கோத்திரத்தாரை மட்டும் எண்ணாமலும், இஸ்ரவேல் மக்களுக்குள்ளே அவர்களுடைய தொகையை சேர்க்காமலும்,
எண்ணாகமம் 1 : 50 (IRVTA)
லேவியர்களைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய எல்லா பணிப்பொருட்களுக்கும், அதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் பொறுப்பாளர்களாக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும் சுமக்க வேண்டும்; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.
எண்ணாகமம் 1 : 51 (IRVTA)
சாட்சியின் வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர்கள் அதை இறக்கிவைத்து, அது நிறுவப்படும்போது, லேவியர்கள் அதை எடுத்து நிறுத்தவேண்டும்; அந்நியன் அதற்கு அருகில் வந்தால் கொலை செய்யப்படவேண்டும்.
எண்ணாகமம் 1 : 52 (IRVTA)
இஸ்ரவேல் மக்கள் தங்கள் தங்கள் முகாமோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடவேண்டும்.
எண்ணாகமம் 1 : 53 (IRVTA)
இஸ்ரவேல் மக்களாகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடி லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிட்டு, லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.
எண்ணாகமம் 1 : 54 (IRVTA)
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54

BG:

Opacity:

Color:


Size:


Font: