நெகேமியா 7 : 1 (IRVTA)
மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு,
நெகேமியா 7 : 2 (IRVTA)
நான் என்னுடைய சகோதரனாகிய அனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
நெகேமியா 7 : 3 (IRVTA)
அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
நெகேமியா 7 : 4 (IRVTA)
சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் பட்டியல் பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
நெகேமியா 7 : 5 (IRVTA)
அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
நெகேமியா 7 : 6 (IRVTA)
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
நெகேமியா 7 : 7 (IRVTA)
எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:
நெகேமியா 7 : 8 (IRVTA)
பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர்.
நெகேமியா 7 : 9 (IRVTA)
செபத்தியாவின் வம்சத்தினர்கள் 372 பேர்.
நெகேமியா 7 : 10 (IRVTA)
ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர்.
நெகேமியா 7 : 11 (IRVTA)
யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர்.
நெகேமியா 7 : 12 (IRVTA)
ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
நெகேமியா 7 : 13 (IRVTA)
சத்தூவின் வம்சத்தினர்கள் 845 பேர்.
நெகேமியா 7 : 14 (IRVTA)
சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர்.
நெகேமியா 7 : 15 (IRVTA)
பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர்.
நெகேமியா 7 : 16 (IRVTA)
பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர்.
நெகேமியா 7 : 17 (IRVTA)
அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர்.
நெகேமியா 7 : 18 (IRVTA)
அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர்.
நெகேமியா 7 : 19 (IRVTA)
பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர்.
நெகேமியா 7 : 20 (IRVTA)
ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர்.
நெகேமியா 7 : 21 (IRVTA)
எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர்.
நெகேமியா 7 : 22 (IRVTA)
ஆசூமின் வம்சத்தினர்கள் 328 பேர்.
நெகேமியா 7 : 23 (IRVTA)
பேசாயின் வம்சத்தினர்கள் 324 பேர்.
நெகேமியா 7 : 24 (IRVTA)
ஆரீப்பின் வம்சத்தினர்கள் 112 பேர்.
நெகேமியா 7 : 25 (IRVTA)
கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர்.
நெகேமியா 7 : 26 (IRVTA)
பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர்.
நெகேமியா 7 : 27 (IRVTA)
ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர்.
நெகேமியா 7 : 28 (IRVTA)
பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர்.
நெகேமியா 7 : 29 (IRVTA)
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர்.
நெகேமியா 7 : 30 (IRVTA)
ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர்.
நெகேமியா 7 : 31 (IRVTA)
மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர்.
நெகேமியா 7 : 32 (IRVTA)
பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர்.
நெகேமியா 7 : 33 (IRVTA)
வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் 52 பேர்.
நெகேமியா 7 : 34 (IRVTA)
மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
நெகேமியா 7 : 35 (IRVTA)
ஆரிம் வம்சத்தினர்கள் 320 பேர்.
நெகேமியா 7 : 36 (IRVTA)
எரிகோ வம்சத்தினர்கள் 345 பேர்.
நெகேமியா 7 : 37 (IRVTA)
லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.
நெகேமியா 7 : 38 (IRVTA)
செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர்.
நெகேமியா 7 : 39 (IRVTA)
ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.
நெகேமியா 7 : 40 (IRVTA)
இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர்.
நெகேமியா 7 : 41 (IRVTA)
பஸ்கூரின் வம்சத்தினர்கள் 1,247 பேர்.
நெகேமியா 7 : 42 (IRVTA)
ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர்.
நெகேமியா 7 : 43 (IRVTA)
லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர்.
நெகேமியா 7 : 44 (IRVTA)
பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.
நெகேமியா 7 : 45 (IRVTA)
வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர்.
நெகேமியா 7 : 46 (IRVTA)
ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 47 (IRVTA)
கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 48 (IRVTA)
லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 49 (IRVTA)
ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 50 (IRVTA)
ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 51 (IRVTA)
காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 52 (IRVTA)
பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபுசீமின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 53 (IRVTA)
பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 54 (IRVTA)
பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 55 (IRVTA)
பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 56 (IRVTA)
நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 57 (IRVTA)
சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 58 (IRVTA)
யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள்,
நெகேமியா 7 : 59 (IRVTA)
செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.
நெகேமியா 7 : 60 (IRVTA)
ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
நெகேமியா 7 : 61 (IRVTA)
தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
நெகேமியா 7 : 62 (IRVTA)
தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர்.
நெகேமியா 7 : 63 (IRVTA)
ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள்.
நெகேமியா 7 : 64 (IRVTA)
இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
நெகேமியா 7 : 65 (IRVTA)
ஊரீம் தும்மீம்* யாத். 28:30 ஐ பார்க்க, இவைகள் மூலமாக தேவ சித்தம் அறிய பயன்படுத்தினார்கள். என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
நெகேமியா 7 : 66 (IRVTA)
சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள்.
நெகேமியா 7 : 67 (IRVTA)
அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
நெகேமியா 7 : 68 (IRVTA)
அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245.
நெகேமியா 7 : 69 (IRVTA)
ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720.
நெகேமியா 7 : 70 (IRVTA)
வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.
நெகேமியா 7 : 71 (IRVTA)
வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும்† 8,500 கிலோ. கிராம் பொன், 170 கிலோ. பொன். 1,200 கிலோ வெள்ளி கொடுத்தார்கள்.
நெகேமியா 7 : 72 (IRVTA)
மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும்,‡ 170 கிலோ பொன், 1, 100 கிலோ வெள்ளி. 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
நெகேமியா 7 : 73 (IRVTA)
ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73