நெகேமியா 12 : 1 (IRVTA)
ஆசாரியர்களும் லேவியர்களும் செயல்தியேலின் மகனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியர்களும் லேவியர்களும் யாரென்றால்: செராயா, எரேமியா, எஸ்றா,
நெகேமியா 12 : 2 (IRVTA)
அமரியா, மல்லூக், அத்தூஸ்,
நெகேமியா 12 : 3 (IRVTA)
செக்கனியா, ரேகூம், மெரெமோத்,
நெகேமியா 12 : 5 (IRVTA)
மியாமின், மாதியா, பில்கா,
நெகேமியா 12 : 6 (IRVTA)
செமாயா, யோயாரிப், யெதாயா,
நெகேமியா 12 : 7 (IRVTA)
சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியர்களுக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.
நெகேமியா 12 : 8 (IRVTA)
லேவியர்கள் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவனுடைய சகோதரர்களும் துதிசெய்தலுக்கு பொறுப்பாக இருந்தார்கள்.
நெகேமியா 12 : 9 (IRVTA)
பக்பூக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.
நெகேமியா 12 : 10 (IRVTA)
யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.
நெகேமியா 12 : 11 (IRVTA)
யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.
நெகேமியா 12 : 12 (IRVTA)
யொயகீமின் நாட்களிலே தகப்பன்மார்களின் குடும்பத்தார்களுக்கு தலைவர்களான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,
நெகேமியா 12 : 13 (IRVTA)
எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
நெகேமியா 12 : 14 (IRVTA)
மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,
நெகேமியா 12 : 15 (IRVTA)
ஆரீமின் சந்ததியில் அதனா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
நெகேமியா 12 : 16 (IRVTA)
இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநேதோனின் சந்ததியில் மெசுல்லாம்,
நெகேமியா 12 : 17 (IRVTA)
அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன் மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்.
நெகேமியா 12 : 18 (IRVTA)
பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்,
நெகேமியா 12 : 19 (IRVTA)
யோயாரிபின் சந்ததியில் மதனாய், யெதாயாவின் சந்ததியில் ஊசி,
நெகேமியா 12 : 20 (IRVTA)
சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,
நெகேமியா 12 : 21 (IRVTA)
இல்க்கியாவின் சந்ததியில் அஷபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
நெகேமியா 12 : 22 (IRVTA)
எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர்கள் தகப்பன்மார்களின் தலைவர்களாக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ஆட்சி காலம்வரை இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்.
நெகேமியா 12 : 23 (IRVTA)
லேவியின் சந்ததியர்களாகிய தகப்பன்மார் குடும்பத்தார்களின் தலைவர்கள் எலியாசிபின் மகனாகிய யோகனானின் நாட்கள்வரை நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
நெகேமியா 12 : 24 (IRVTA)
லேவியர்களின் தலைவர்களாகிய அஷபியாவும், செரெபியாவும், கத்மியேலின் மகன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்களுடைய சகோதரர்களும், தேவனுடைய மனிதனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் ஸ்தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக பிரிவுகளாக இருந்தார்கள்.
நெகேமியா 12 : 25 (IRVTA)
மத்தனியா, பக்பூக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாக இருந்தார்கள்.
நெகேமியா 12 : 26 (IRVTA)
எருசலேமின் மதில்கள் பிரதிஷ்டை செய்யப்படுதல் யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன் யொயகீமின் நாட்களிலும், ஆளுநராகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
நெகேமியா 12 : 27 (IRVTA)
எருசலேமின் மதிலை பிரதிஷ்டைசெய்யும்போது, துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியர்களை எருசலேமுக்குக் கூட்டிவரத் தேடினார்கள்.
நெகேமியா 12 : 28 (IRVTA)
அப்படியே பாடகர்களின் குழுவினர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியர்களின் கிராமங்களிலும்,
நெகேமியா 12 : 29 (IRVTA)
பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்து வந்து கூடினார்கள்; பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.
நெகேமியா 12 : 30 (IRVTA)
ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைச் சுத்தம்செய்துகொண்டு, மக்களையும் பட்டணவாசல்களையும் மதிலையும் சுத்தம்செய்தார்கள்.
நெகேமியா 12 : 31 (IRVTA)
அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை மதிலின்மேல் ஏறச்செய்து, துதிசெய்து நடந்துபோவதற்காக இரண்டு பெரிய கூட்டத்தார்களை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் மதிலின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
நெகேமியா 12 : 32 (IRVTA)
அவர்கள் பின்னே ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேர்களும்,
நெகேமியா 12 : 33 (IRVTA)
அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
நெகேமியா 12 : 34 (IRVTA)
யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,
நெகேமியா 12 : 35 (IRVTA)
பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியர்களின் மகன்களில் ஆசாப்பின் மகன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்கு மகனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் மகன் சகரியாவும்,
நெகேமியா 12 : 36 (IRVTA)
தேவனுடைய மனிதனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவனுடைய சகோதரர்களான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.
நெகேமியா 12 : 37 (IRVTA)
அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான தண்ணீர்வாசலுக்கு வந்தபோது, மதிலைவிட உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின் மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசல்வரை போனார்கள்.
நெகேமியா 12 : 38 (IRVTA)
துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாக நடந்துபோனார்கள், அவர்கள் பின்னே நான் போனேன்; மக்களில் பாதிப்பேர் மதிலின்மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து, அகழ் மதில்வரை நேராகப்போய்,
நெகேமியா 12 : 39 (IRVTA)
எப்பிராயீம்வாசலையும், பழையவாசலையும், மீன்வாசலையும், அனானெயேலின் கோபுரத்தையும், மேயா என்கிற கோபுரத்தையும் கடந்து, ஆட்டுவாசல்வரை புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.
நெகேமியா 12 : 40 (IRVTA)
அதற்குப்பின்பு துதிசெய்கிற இரண்டு கூட்டத்தார்களும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடு இருக்கிற தலைவர்களில் பாதிப்பேர்களும்,
நெகேமியா 12 : 41 (IRVTA)
பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா என்கிற ஆசாரியர்களும்,
நெகேமியா 12 : 42 (IRVTA)
மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகர்களும், அவர்களை நடத்துகிறவனாகிய யெஷரகியாவும் சத்தமாகப் பாடினார்கள்.
நெகேமியா 12 : 43 (IRVTA)
அந்த நாளிலே அதிகமான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்குப் பெரிய சந்தோஷத்தை உண்டாக்கியதால் மகிழ்ச்சியாக இருந்தார்கள்; பெண்களும் பிள்ளைகளும்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.
நெகேமியா 12 : 44 (IRVTA)
அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதற்பழங்களையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்முறையில் வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்ப்பதற்கு, சில மனிதர்கள் பொறுப்பாளர்களாக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்கள்மேலும் லேவியர்கள்மேலும் யூதா மனிதர்கள் சந்தோஷமாக இருந்தார்கள்.
நெகேமியா 12 : 45 (IRVTA)
பாடகர்களும், வாசல் காவலாளர்களும், தாவீதும் அவன் மகனாகிய சாலொமோனும் கற்பித்தபடி தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.
நெகேமியா 12 : 46 (IRVTA)
தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகர்களின் தலைவர்களும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் ஸ்தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நெகேமியா 12 : 47 (IRVTA)
ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் பாடகர்களுக்கும் வாசல் காவலாளர்களுக்கும் அனுதின ஒழுங்கின்படி வேலைளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியர்களுக்கென்று பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்; லேவியர்கள் ஆரோனின் சந்ததிக்கென்று அவர்கள் வேலைகளைப் பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47