புலம்பல் 3 : 1 (IRVTA)
{தீர்க்கதரிசியின் மனவேதனையும் நம்பிக்கையும்} [PS] ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான்.
புலம்பல் 3 : 2 (IRVTA)
அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
புலம்பல் 3 : 3 (IRVTA)
அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார்.
புலம்பல் 3 : 4 (IRVTA)
என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
புலம்பல் 3 : 5 (IRVTA)
அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார்.
புலம்பல் 3 : 6 (IRVTA)
ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார்.
புலம்பல் 3 : 7 (IRVTA)
நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கை கடினமாக்கினார்.
புலம்பல் 3 : 8 (IRVTA)
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார்.
புலம்பல் 3 : 9 (IRVTA)
வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
புலம்பல் 3 : 10 (IRVTA)
அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
புலம்பல் 3 : 11 (IRVTA)
என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார்.
புலம்பல் 3 : 12 (IRVTA)
தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
புலம்பல் 3 : 13 (IRVTA)
தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார்.
புலம்பல் 3 : 14 (IRVTA)
நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன்.
புலம்பல் 3 : 15 (IRVTA)
கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார்.
புலம்பல் 3 : 16 (IRVTA)
அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார்.
புலம்பல் 3 : 17 (IRVTA)
என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
புலம்பல் 3 : 18 (IRVTA)
என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன்.
புலம்பல் 3 : 19 (IRVTA)
எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
புலம்பல் 3 : 20 (IRVTA)
என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது.
புலம்பல் 3 : 21 (IRVTA)
இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன்.
புலம்பல் 3 : 22 (IRVTA)
நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
புலம்பல் 3 : 23 (IRVTA)
அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
புலம்பல் 3 : 24 (IRVTA)
யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
புலம்பல் 3 : 25 (IRVTA)
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர்.
புலம்பல் 3 : 26 (IRVTA)
யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
புலம்பல் 3 : 27 (IRVTA)
தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது.
புலம்பல் 3 : 28 (IRVTA)
அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக.
புலம்பல் 3 : 29 (IRVTA)
நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக.
புலம்பல் 3 : 30 (IRVTA)
தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக.
புலம்பல் 3 : 31 (IRVTA)
ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
புலம்பல் 3 : 32 (IRVTA)
அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார்.
புலம்பல் 3 : 33 (IRVTA)
அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை.
புலம்பல் 3 : 34 (IRVTA)
ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,
புலம்பல் 3 : 35 (IRVTA)
உன்னதமான தேவனின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
புலம்பல் 3 : 36 (IRVTA)
மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
புலம்பல் 3 : 37 (IRVTA)
ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
புலம்பல் 3 : 38 (IRVTA)
உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
புலம்பல் 3 : 39 (IRVTA)
உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
புலம்பல் 3 : 40 (IRVTA)
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம்.
புலம்பல் 3 : 41 (IRVTA)
நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக.
புலம்பல் 3 : 42 (IRVTA)
நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர்.
புலம்பல் 3 : 43 (IRVTA)
தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
புலம்பல் 3 : 44 (IRVTA)
ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
புலம்பல் 3 : 45 (IRVTA)
மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
புலம்பல் 3 : 46 (IRVTA)
எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள்.
புலம்பல் 3 : 47 (IRVTA)
பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது.
புலம்பல் 3 : 48 (IRVTA)
மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.
புலம்பல் 3 : 49 (IRVTA)
யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை,
புலம்பல் 3 : 50 (IRVTA)
என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது.
புலம்பல் 3 : 51 (IRVTA)
என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது.
புலம்பல் 3 : 52 (IRVTA)
காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள்.
புலம்பல் 3 : 53 (IRVTA)
படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லை [* ] வைத்தார்கள்.
புலம்பல் 3 : 54 (IRVTA)
தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன்.
புலம்பல் 3 : 55 (IRVTA)
மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.
புலம்பல் 3 : 56 (IRVTA)
என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.
புலம்பல் 3 : 57 (IRVTA)
நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர்.
புலம்பல் 3 : 58 (IRVTA)
ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
புலம்பல் 3 : 59 (IRVTA)
யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும்.
புலம்பல் 3 : 60 (IRVTA)
அவர்களுடைய எல்லா விரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
புலம்பல் 3 : 61 (IRVTA)
யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும்,
புலம்பல் 3 : 62 (IRVTA)
எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
புலம்பல் 3 : 63 (IRVTA)
அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
புலம்பல் 3 : 64 (IRVTA)
யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர்.
புலம்பல் 3 : 65 (IRVTA)
அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
புலம்பல் 3 : 66 (IRVTA)
கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66

BG:

Opacity:

Color:


Size:


Font: