நியாயாதிபதிகள் 2 : 1 (IRVTA)
போகீமில் யெகோவாவுடைய தூதன் யெகோவாவுடைய தூதன் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்து, உங்களுடைய பிதாக்களுக்கு வாக்குக்கொடுத்த தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடு செய்த என்னுடைய உடன்படிக்கையை நான் ஒருபோதும் முறித்துப்போடுவதில்லை என்றும்,
நியாயாதிபதிகள் 2 : 2 (IRVTA)
நீங்கள் இந்த தேசத்தில் குடியிருக்கிறவர்களோடு உடன்படிக்கைசெய்யாமல், அவர்களுடைய பலிபீடங்களை இடித்துவிடவேண்டும் என்றும் சொன்னேன்; ஆனாலும் என்னுடைய சொல்லைக் கேட்காமல்போனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?
நியாயாதிபதிகள் 2 : 3 (IRVTA)
ஆகவே, நான் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.
நியாயாதிபதிகள் 2 : 4 (IRVTA)
யெகோவாவுடைய தூதன் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் அனைவரிடமும் சொல்லும்போது, மக்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 5 (IRVTA)
அந்த இடத்திற்கு போகீம்* அழுகை என்று பெயரிட்டு, அங்கே யெகோவா வுக்குப் பலிசெலுத்தினார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 6 (IRVTA)
கீழ்ப்படியாமையும், தோல்வியும் யோசுவா இஸ்ரவேல் மக்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகத்திற்குப் போனார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 7 (IRVTA)
யோசுவாவின் எல்லா நாட்களிலும் யெகோவா இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய செயல்களையெல்லாம் பார்த்தவர்களும், யோசுவாவிற்குப் பின்பு உயிரோடு இருந்தவர்களுமாகிய மூப்பர்களின் எல்லா நாட்களிலும் மக்கள் யெகோவாவைத் தொழுது கொண்டார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 8 (IRVTA)
நூனின் மகனான யோசுவா என்னும் யெகோவாவின் ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக இறந்துபோனான்.
நியாயாதிபதிகள் 2 : 9 (IRVTA)
அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கில் இருக்கிற அவனுடைய சுதந்திரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்செய்தார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 10 (IRVTA)
அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களோடு சேர்க்கப்பட்டப்பின்பு, யெகோவாவையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த செய்கைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின்பு எழும்பியது.
நியாயாதிபதிகள் 2 : 11 (IRVTA)
அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்து, பாகால்களைத் தொழுது,
நியாயாதிபதிகள் 2 : 12 (IRVTA)
தங்களுடைய முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச் செய்த அவர்களுடைய தேவனாகிய யெகோவாவைவிட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போய், அவைகளைத் தொழுதுகொண்டு, யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 13 (IRVTA)
அவர்கள் யெகோவாவைவிட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுதுகொண்டார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 14 (IRVTA)
அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி, அவர்கள் அதற்குப்பின்பு தங்கள் எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர்களுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்களுடைய எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
நியாயாதிபதிகள் 2 : 15 (IRVTA)
யெகோவா அவர்களுக்கு வாக்கு செய்தபடி, அவர்கள் புறப்பட்டுப்போகிற இடங்களெல்லாம் யெகோவாவுடைய கரம் தீமைக்கென்றே அவர்களுக்கு எதிராக இருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 16 (IRVTA)
யெகோவா நியாயாதிபதிகளை எழும்பச்செய்தார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றினார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 17 (IRVTA)
அவர்கள் தங்களுடைய நியாயாதிபதிகளின் சொல்லைக் கேட்காமல், அந்நிய தெய்வங்களுக்குத் தங்களை விலைமாதர்களைப்போல ஒப்புக்கொடுத்து, அவைகளைத் தொழுதுகொண்டார்கள்; தங்களுடைய பிதாக்கள் யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, பிதாக்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 18 (IRVTA)
யெகோவா அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பச்செய்கிறபோது, யெகோவா நியாயாதிபதியோடு இருந்து அந்த நியாயாதிபதி வாழ்ந்த நாட்களிலெல்லாம் அவர்களுடைய எதிரிகளின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றிவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினால் தவிக்கிறதினாலே, யெகோவா துக்கப்படுவார்.
நியாயாதிபதிகள் 2 : 19 (IRVTA)
நியாயாதிபதி மரித்தவுடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி, பணிவிடை செய்யவும், தொழுதுகொள்ளவும், தங்களுடைய பிதாக்களைவிட இழிவாக நடந்து, தங்களுடைய தீய செய்கைகளையும் தங்களுடைய முரட்டாட்டமான வழிகளையும் விடாதிருப்பார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 20 (IRVTA)
ஆகையால் யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி: இந்த மக்கள் தங்களுடைய பிதாக்களுக்கு நான் கற்பித்த என்னுடைய உடன்படிக்கையை மீறி என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனதினால்,
நியாயாதிபதிகள் 2 : 21 (IRVTA)
யோசுவா இறந்தபின்பு விட்டுப்போன தேசங்களில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.
நியாயாதிபதிகள் 2 : 22 (IRVTA)
அவர்களுடைய பிதாக்கள் யெகோவாவின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படி, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலை சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.
நியாயாதிபதிகள் 2 : 23 (IRVTA)
அதற்காகக் யெகோவா அந்த தேசங்களை யோசுவாவுடைய கையில் ஒப்புக்கொடுக்காமலும், அவைகளை சீக்கிரமாகத் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23