யோசுவா 21 : 1 (IRVTA)
லேவியர்களுக்கான பட்டணங்கள் அப்பொழுது லேவியர்களின் வம்சப்பிதாக்களின் தலைவர்கள்; கானான்தேசத்தில் இருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடமும், நூனின் மகனாகிய யோசுவாவிடமும், இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரப் பிதாக்களில் உள்ள தலைவர்களிடமும் வந்து:
யோசுவா 21 : 2 (IRVTA)
நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்களுடைய மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.
யோசுவா 21 : 3 (IRVTA)
யெகோவாவுடைய கட்டளையின்படியே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய பங்குகளிலே லேவியர்களுக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
யோசுவா 21 : 4 (IRVTA)
கோகாத்தியர்களின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியர்களில் ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததிக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
யோசுவா 21 : 5 (IRVTA)
கோகாத்தின் மற்ற வம்சங்களுக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து.
யோசுவா 21 : 6 (IRVTA)
கெர்சோன் வம்சத்தின் மக்களுக்கு, இசக்கார் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானில் இருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
யோசுவா 21 : 7 (IRVTA)
மெராரி வம்சத்தின் மக்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு.
யோசுவா 21 : 8 (IRVTA)
இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் மக்கள், யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியர்களுக்குக் கொடுத்தார்கள்.
யோசுவா 21 : 9 (IRVTA)
லேவியின் கோத்திரத்தில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியர்களின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் சந்ததியினர்களுக்கு,
யோசுவா 21 : 10 (IRVTA)
யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பெயர்பெயராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் பெயர்களாவன:
யோசுவா 21 : 11 (IRVTA)
யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சுற்றியுள்ள வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
யோசுவா 21 : 12 (IRVTA)
பட்டணத்தின் வயல்களையும் அதினுடைய கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்தார்கள்.
யோசுவா 21 : 13 (IRVTA)
இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியார்களுக்கு எபிரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
யோசுவா 21 : 14 (IRVTA)
யாத்தீரையும் அதினுடைய வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
யோசுவா 21 : 15 (IRVTA)
ஓலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், தெபீரையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
யோசுவா 21 : 16 (IRVTA)
ஆயீனையும் அதினுடைய வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களில் இருக்கிற பட்டணங்கள் ஒன்பது.
யோசுவா 21 : 17 (IRVTA)
பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கேபாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
யோசுவா 21 : 18 (IRVTA)
ஆனதோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், அல்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
யோசுவா 21 : 19 (IRVTA)
ஆசாரியர்களான ஆரோனுடைய சந்ததியார்களின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
யோசுவா 21 : 20 (IRVTA)
லேவியர்களான கோகாத்தின் குடும்பத்தார்களில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன:
யோசுவா 21 : 21 (IRVTA)
கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
யோசுவா 21 : 22 (IRVTA)
கிப்சாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
யோசுவா 21 : 23 (IRVTA)
தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதினுடைய வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
யோசுவா 21 : 24 (IRVTA)
ஆயலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
யோசுவா 21 : 25 (IRVTA)
மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
யோசுவா 21 : 26 (IRVTA)
கோகாத் வம்சத்தின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பத்து.
யோசுவா 21 : 27 (IRVTA)
லேவியர்களின் வம்சங்களிலே கெர்சோன் வம்சத்தார்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
யோசுவா 21 : 28 (IRVTA)
இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
யோசுவா 21 : 29 (IRVTA)
யர்மூத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
யோசுவா 21 : 30 (IRVTA)
ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதினுடைய வெளிநிலங்களையும், அப்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
யோசுவா 21 : 31 (IRVTA)
எல்காத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், ரேகோபையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
யோசுவா 21 : 32 (IRVTA)
நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதினுடைய வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தானையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.
யோசுவா 21 : 33 (IRVTA)
கெர்சோனியர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
யோசுவா 21 : 34 (IRVTA)
மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
யோசுவா 21 : 35 (IRVTA)
திம்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், நகலாலையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
யோசுவா 21 : 36 (IRVTA)
ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாகசாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
யோசுவா 21 : 37 (IRVTA)
கெதெமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
யோசுவா 21 : 38 (IRVTA)
காத் கோத்திரத்திலே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மகனாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
யோசுவா 21 : 39 (IRVTA)
எஸ்போனையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
யோசுவா 21 : 40 (IRVTA)
இவைகளெல்லாம் லேவியர்களின் மற்ற வம்சங்களாகிய மெராரி வம்சத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.
யோசுவா 21 : 41 (IRVTA)
இஸ்ரவேல் மக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தின் நடுவிலே இருக்கிற லேவியர்களின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களும் உட்பட நாற்பத்தெட்டு.
யோசுவா 21 : 42 (IRVTA)
இந்தப் பட்டணங்களில் ஒவ்வொன்றிற்கும் அதைச் சுற்றியுள்ள வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப் பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது.
யோசுவா 21 : 43 (IRVTA)
இந்தவிதமாகக் யெகோவா இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.
யோசுவா 21 : 44 (IRVTA)
யெகோவா அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் ஓய்ந்திருக்கச்செய்தார்; அவர்களுடைய எல்லா எதிரிகளிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் எதிரிகளையெல்லாம் யெகோவா அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.
யோசுவா 21 : 45 (IRVTA)
யெகோவா இஸ்ரவேல் குடும்பத்தார்களுக்குச் சொல்லியிருந்த நல்ல வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறினது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45