யோசுவா 19 : 1 (IRVTA)
{சிமியோன் கோத்திரத்தார்களின் பங்கு} [PS] இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு, யூதா கோத்திரத்தார்களுடைய பங்குகளின் நடுவே இருக்கிறது.
யோசுவா 19 : 2 (IRVTA)
அவர்களுக்குச் சொந்தமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,
யோசுவா 19 : 3 (IRVTA)
ஆசார்சூவால், பாலா, ஏத்சேம்,
யோசுவா 19 : 4 (IRVTA)
எல்தோலாத், பெத்தூல், ஓர்மா,
யோசுவா 19 : 5 (IRVTA)
சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,
யோசுவா 19 : 6 (IRVTA)
பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பதிமூன்று.
யோசுவா 19 : 7 (IRVTA)
மேலும் ஆயீன், ரிம்மோன். ஏத்தேர், ஆசான் என்னும் நான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
யோசுவா 19 : 8 (IRVTA)
இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கே இருக்கிற ராமாத்வரை இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பங்கு.
யோசுவா 19 : 9 (IRVTA)
சிமியோன் கோத்திரத்தார்களுடைய பங்கு யூதா கோத்திரத்தார்களின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா கோத்திரத்தார்களின் பங்கு அவர்களுக்கு மிகுதியாக இருந்தபடியால், சிமியோன் கோத்திரத்தார் அவர்களுடைய பங்குகளின் நடுவிலே பங்குகளைப் பெற்றார்கள். [PS]
யோசுவா 19 : 10 (IRVTA)
{செபுலோன் கோத்திரத்தார்களின் பங்கு} [PS] மூன்றாம் சீட்டு செபுலோன் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சொந்தமான பங்குவீதம் சாரீத் வரை உள்ளது.
யோசுவா 19 : 11 (IRVTA)
அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்திற்கு வந்து, யொக்னியாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும்.
யோசுவா 19 : 12 (IRVTA)
சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்திற்குத் திரும்பி, தாபராத்திற்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
யோசுவா 19 : 13 (IRVTA)
அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே காத்தேப்பேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போகும்.
யோசுவா 19 : 14 (IRVTA)
அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.
யோசுவா 19 : 15 (IRVTA)
காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
யோசுவா 19 : 16 (IRVTA)
செபுலோன் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த பங்குகள் ஆகும். [PS]
யோசுவா 19 : 17 (IRVTA)
{இசக்கார் கோத்திரத்தார்களின் பங்கு} [PS] நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
யோசுவா 19 : 18 (IRVTA)
இசக்கார் கோத்திரத்தார்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,
யோசுவா 19 : 19 (IRVTA)
அப்பிராயீம், சீகோன் அனாகராத்,
யோசுவா 19 : 20 (IRVTA)
ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,
யோசுவா 19 : 21 (IRVTA)
ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.
யோசுவா 19 : 22 (IRVTA)
அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உண்டு.
யோசுவா 19 : 23 (IRVTA)
இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு ஆகும். [PS]
யோசுவா 19 : 24 (IRVTA)
{ஆசேர் கோத்திரத்தார்களின் பங்கு} [PS] ஐந்தாம் சீட்டு ஆசேர் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
யோசுவா 19 : 25 (IRVTA)
அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
யோசுவா 19 : 26 (IRVTA)
அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,
யோசுவா 19 : 27 (IRVTA)
கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கே இருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்கிற்கும் பெத்தேமேக்கிற்கும் நேகியெலிற்கும் வந்து, இடதுபுறமான காபூலிற்கும்,
யோசுவா 19 : 28 (IRVTA)
எபிரோனிற்கும், ரேகோபிற்கும், அம்மோனிற்கும், கானாவிற்கும், பெரிய சீதோன்வரைக்கும் போகும்.
யோசுவா 19 : 29 (IRVTA)
அப்புறம் அந்த எல்லை ராமாவிற்கும் தீரு என்னும் பாதுகாப்பான பட்டணம்வரைத் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவிற்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்தில் உள்ள மத்திய தரைக் கடலிலே முடியும்.
யோசுவா 19 : 30 (IRVTA)
உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.
யோசுவா 19 : 31 (IRVTA)
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்குகள் ஆகும். [PS]
யோசுவா 19 : 32 (IRVTA)
{நப்தலி கோத்திரத்தார்களின் பங்கு} [PS] ஆறாம் சீட்டு நப்தலி கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
யோசுவா 19 : 33 (IRVTA)
நப்தலி கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்வரைக்கும் போய், யோர்தானில் முடியும்.
யோசுவா 19 : 34 (IRVTA)
அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகக்கிற்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.
யோசுவா 19 : 35 (IRVTA)
பாதுகாப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,
யோசுவா 19 : 36 (IRVTA)
ஆதமா, ராமா, ஆத்சோர்,
யோசுவா 19 : 37 (IRVTA)
கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்,
யோசுவா 19 : 38 (IRVTA)
ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெத்தானாத் பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பத்தொன்பது.
யோசுவா 19 : 39 (IRVTA)
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும். [PS]
யோசுவா 19 : 40 (IRVTA)
{தாண் கோத்திரத்தார்களின் பங்கு} [PS] ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
யோசுவா 19 : 41 (IRVTA)
அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
யோசுவா 19 : 42 (IRVTA)
சாலாபீன், ஆயலோன், யெத்லா,
யோசுவா 19 : 43 (IRVTA)
ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
யோசுவா 19 : 44 (IRVTA)
எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,
யோசுவா 19 : 45 (IRVTA)
யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,
யோசுவா 19 : 46 (IRVTA)
மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யோப்பாவுக்கு எதிரான எல்லையுமே.
யோசுவா 19 : 47 (IRVTA)
தாண் கோத்திரத்தார்களின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாக இருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, பட்டயத்தினால் அழித்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்களுடைய முற்பிதாவாகிய தாணுடைய பெயரின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
யோசுவா 19 : 48 (IRVTA)
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும். [PS]
யோசுவா 19 : 49 (IRVTA)
{யோசுவாவின் பங்கு} [PS] தேசத்தை அதின் எல்லைகளின்படி சொந்தமாகப் பங்கிட்டு முடித்தபோது, இஸ்ரவேல் மக்கள் நூனின் மகனாகிய யோசுவாவிற்குத் தங்கள் நடுவிலே ஒரு பங்கைக் கொடுத்தார்கள்.
யோசுவா 19 : 50 (IRVTA)
எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் யெகோவாவுடைய கட்டளையின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.
யோசுவா 19 : 51 (IRVTA)
ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் இஸ்ரவேல் மக்களின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த பங்குகள் இவைகளே; இவ்விதமாக அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள். [PE]
❮
❯