யோசுவா 15 : 1 (IRVTA)
யூதா கோத்திரத்தார்களின் பங்கு யூதா கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகே உள்ள சீன்வனாந்திரமே தென்பகுதியின் கடைசி எல்லை.
யோசுவா 15 : 2 (IRVTA)
தென்பகுதியான அவர்களுடைய எல்லை சவக்கடலின்* மரணக்கடல் கடைசியில் தெற்கு நோக்கி இருக்கிற முனைதுவங்கி,
யோசுவா 15 : 3 (IRVTA)
தென்பகுதியில் இருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கே இருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய்,
யோசுவா 15 : 4 (IRVTA)
அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, மத்திய தரைக் கடல்வரைக்கும் போய் முடியும்; இதுவே உங்களுடைய தென்பகுதிக்கு எல்லையாக இருக்கும் என்றான்.
யோசுவா 15 : 5 (IRVTA)
கிழக்கு எல்லையானது, யோர்தான் நதியின் ஆரம்பம்வரை இருக்கிற சவக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் நதியின் ஆரம்பம் இருக்கிற கடலின் முனைதுவங்கி,
யோசுவா 15 : 6 (IRVTA)
பெத்ஓக்லாவுக்கு ஏறி, வடக்கே இருக்கிற பெத் அரபாவைக் கடந்து, ரூபனின் மகனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,
யோசுவா 15 : 7 (IRVTA)
பிறகு ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் நீரூற்றுவரைக்கும் போய், என்ரோகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
யோசுவா 15 : 8 (IRVTA)
பிறகு எபூசியர்கள் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாக இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கே இருக்கிற இராட்சதர்களுடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் உச்சிவரை ஏறிப்போய்,
யோசுவா 15 : 9 (IRVTA)
அந்த மலையின் உச்சியிலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
யோசுவா 15 : 10 (IRVTA)
பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
யோசுவா 15 : 11 (IRVTA)
1 பின்பு வடக்கே இருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாகச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, மத்திய தரைக் கடலிலே முடியும்.
யோசுவா 15 : 12 (IRVTA)
மேற்கு எல்லை, பெரிய மத்திய தரைக் கடலே; இது யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
யோசுவா 15 : 13 (IRVTA)
எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்கு, யோசுவா, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை யூதா கோத்திரத்தின் நடுவே பங்காகக் கொடுத்தான்.
யோசுவா 15 : 14 (IRVTA)
அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று மகன்களையும் காலேப் துரத்திவிட்டு,
யோசுவா 15 : 15 (IRVTA)
அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பெயர் கீரியாத்செப்பேர்.
யோசுவா 15 : 16 (IRVTA)
கீரியாத்செப்பேரை அழித்துக் கைப்பற்றுகிறவனுக்கு, என் மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
யோசுவா 15 : 17 (IRVTA)
அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினான்; எனவே, தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
யோசுவா 15 : 18 (IRVTA)
அவள் புறப்படும்போது, என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.
யோசுவா 15 : 19 (IRVTA)
அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
யோசுவா 15 : 20 (IRVTA)
யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கு என்னவென்றால்:
யோசுவா 15 : 21 (IRVTA)
தென்புறத்தின் கடைசியான ஏதோமின் எல்லைக்கு நேராக, யூதா கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,
யோசுவா 15 : 22 (IRVTA)
கீனா. திமோனா, ஆதாதா,
யோசுவா 15 : 23 (IRVTA)
கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
யோசுவா 15 : 24 (IRVTA)
சீப், தேலெம், பெயாலோத்,
யோசுவா 15 : 25 (IRVTA)
ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
யோசுவா 15 : 26 (IRVTA)
ஆமாம், சேமா, மொலாதா,
யோசுவா 15 : 27 (IRVTA)
ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பெலேத்,
யோசுவா 15 : 28 (IRVTA)
ஆசார்சூவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,
யோசுவா 15 : 29 (IRVTA)
பாலா, ஈயிம், ஏத்சேம்,
யோசுவா 15 : 30 (IRVTA)
எல்தோலாத், கெசீல், ஓர்மா,
யோசுவா 15 : 31 (IRVTA)
சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
யோசுவா 15 : 32 (IRVTA)
லெபாயோத், சில்லீம், ஆயீன், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இருபத்தொன்பது.
யோசுவா 15 : 33 (IRVTA)
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
யோசுவா 15 : 34 (IRVTA)
சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
யோசுவா 15 : 35 (IRVTA)
யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
யோசுவா 15 : 36 (IRVTA)
சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினான்கு.
யோசுவா 15 : 37 (IRVTA)
சேனான், அதாஷா, மிக்தால்காத்,
யோசுவா 15 : 38 (IRVTA)
திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
யோசுவா 15 : 39 (IRVTA)
லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
யோசுவா 15 : 40 (IRVTA)
காபோன், லகமாம், கித்லீஷ்,
யோசுவா 15 : 41 (IRVTA)
கெதெரோத், பெத்டாகோன், நாமா, மக்கெதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினாறு.
யோசுவா 15 : 42 (IRVTA)
லிப்னா, ஏத்தேர், ஆசான்,
யோசுவா 15 : 43 (IRVTA)
இப்தா, அஸ்னா, நெசீப்,
யோசுவா 15 : 44 (IRVTA)
கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
யோசுவா 15 : 45 (IRVTA)
எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
யோசுவா 15 : 46 (IRVTA)
எக்ரோன் துவங்கிச் மத்திய தரைக் கடல் வரை, அஸ்தோத்தின் பகுதியில் இருக்கிற எல்லா ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
யோசுவா 15 : 47 (IRVTA)
அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் ஆறு வரையிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; மத்திய தரைக் கடலே எல்லை.
யோசுவா 15 : 48 (IRVTA)
மலைகளில் சாமீர், யாத்தீர், சோக்கோ,
யோசுவா 15 : 49 (IRVTA)
தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
யோசுவா 15 : 50 (IRVTA)
ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
யோசுவா 15 : 51 (IRVTA)
கோசேன், ஓலோன், கிலோ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினொன்று.
யோசுவா 15 : 52 (IRVTA)
அராப், தூமா, எஷியான்,
யோசுவா 15 : 53 (IRVTA)
யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
யோசுவா 15 : 54 (IRVTA)
உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
யோசுவா 15 : 55 (IRVTA)
மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
யோசுவா 15 : 56 (IRVTA)
யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
யோசுவா 15 : 57 (IRVTA)
காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்படப் பத்து.
யோசுவா 15 : 58 (IRVTA)
அல்கூல், பெத்சூர், கேதோர்,
யோசுவா 15 : 59 (IRVTA)
மாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
யோசுவா 15 : 60 (IRVTA)
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இரண்டு.
யோசுவா 15 : 61 (IRVTA)
வனாந்திரத்தில், பெத் அரபா, மித்தீன், செக்காக்கா,
யோசுவா 15 : 62 (IRVTA)
நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
யோசுவா 15 : 63 (IRVTA)
எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களை யூதா கோத்திரத்தார்கள் துரத்திவிடமுடியாமல்போனது; ஆகவே இந்த நாள்வரை எபூசியர்கள் யூதா கோத்திரத்தார்களோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63