யோசுவா 12 : 1 (IRVTA)
முறியடிக்கப்பட்ட இராஜாக்கள் யோர்தான் நதிக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
யோசுவா 12 : 2 (IRVTA)
அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேர் துவங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத் உட்பட அம்மோனியர்களின் எல்லையான யாப்போக்கு ஆறுவரையுள்ள தேசத்தையும்,
யோசுவா 12 : 3 (IRVTA)
சமவெளி துவங்கிக் கிழக்கே இருக்கிற கின்னரேத் கடல்வரைக்கும் பெத்யெசிமோத் வழியாகக் கிழக்கே இருக்கிற சமவெளியின் கடலாகிய உப்புக்கடல்வரைக்கும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குக் கீழாக இருக்கிற தேசத்தையும் ஆட்சிசெய்தான்.
யோசுவா 12 : 4 (IRVTA)
இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்து,
யோசுவா 12 : 5 (IRVTA)
எர்மோன் மலையையும் சல்காயிவையும், கெசூரியர்கள், மாகாத்தியர்கள் எல்லைவரைக்கும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாக இருந்த பாதிக் கீலேயாத்வரைக்கும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆட்சிசெய்தான்.
யோசுவா 12 : 6 (IRVTA)
அவர்களைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசேயும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தார்கள்; அந்த தேசத்தைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தான்.
யோசுவா 12 : 7 (IRVTA)
யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் துவங்கி சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைவரைக்கும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த பகுதிகளிலும் வனாந்திரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,
யோசுவா 12 : 8 (IRVTA)
யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தவர்களுமான ராஜாக்கள் யாரென்றால்:
யோசுவா 12 : 9 (IRVTA)
எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயீயின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 10 (IRVTA)
எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 11 (IRVTA)
யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 12 (IRVTA)
எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 13 (IRVTA)
தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 14 (IRVTA)
ஓர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 15 (IRVTA)
லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 16 (IRVTA)
மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 17 (IRVTA)
தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 18 (IRVTA)
ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 19 (IRVTA)
மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 20 (IRVTA)
சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 21 (IRVTA)
தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 22 (IRVTA)
கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலைச் சார்ந்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 23 (IRVTA)
தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலைச்சேர்ந்த கோயிமின் ராஜா ஒன்று,
யோசுவா 12 : 24 (IRVTA)
திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லோரும் முப்பத்தொரு ராஜாக்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24