எரேமியா 51 : 1 (IRVTA)
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருந்தவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பச்செய்து,
எரேமியா 51 : 2 (IRVTA)
தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்து நாளில் அதற்கு விரோதமாகசூழ்ந்து கொண்டிருப்பார்கள்.
எரேமியா 51 : 3 (IRVTA)
வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்செய்யுங்கள்.
எரேமியா 51 : 4 (IRVTA)
குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலை செய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள்.
எரேமியா 51 : 5 (IRVTA)
அவர்கள் தேசம் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச் செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும் யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை.
எரேமியா 51 : 6 (IRVTA)
நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது யெகோவா அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.
எரேமியா 51 : 7 (IRVTA)
பாபிலோன் யெகோவாவுடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கச்செய்தது; அதின் மதுவை மக்கள் குடித்தார்கள்; ஆகையால் மக்கள் புத்திமயங்கிப்போனார்கள்.
எரேமியா 51 : 8 (IRVTA)
பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் வலியை நீக்க பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.
எரேமியா 51 : 9 (IRVTA)
பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானம்வரை ஏறி ஆகாய மண்டலங்கள் வரை எட்டினது.
எரேமியா 51 : 10 (IRVTA)
யெகோவா நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய யெகோவாவின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள்.
எரேமியா 51 : 11 (IRVTA)
அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்* எடுத்துக் கொள்ளுங்கள் ; யெகோவா மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது யெகோவா வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி.
எரேமியா 51 : 12 (IRVTA)
பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதுங்கியிருப்பவர்களை வையுங்கள்; ஆனாலும் யெகோவா எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார்.
எரேமியா 51 : 13 (IRVTA)
திரளான தண்ணீர்களின்மேல் வாசம்செய்கிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.
எரேமியா 51 : 14 (IRVTA)
மெய்யாகவே, பச்சைக்கிளிகளைப்போல் திரளான மனிதரால் உன்னை நிரம்பச்செய்வேன்; அவர்கள் உன்மேல் ஆரவாரம்செய்வார்கள் என்று சேனைகளின் யெகோவா தம்முடைய ஜீவனைக்கொண்டு வாக்குக்கொடுத்தார்.
எரேமியா 51 : 15 (IRVTA)
அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.
எரேமியா 51 : 16 (IRVTA)
அவர் சத்தமிடும்போது திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலையிலிருந்து ஏவிவிடுகிறார்.
எரேமியா 51 : 17 (IRVTA)
மனிதர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் தெய்வச்சிலைகளால் வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த சிலைகள் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.
எரேமியா 51 : 18 (IRVTA)
அவைகள் மாயையும் மகா வஞ்சகமான செயலாக இருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளில் அழியும்.
எரேமியா 51 : 19 (IRVTA)
யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்திரமான கோத்திரம்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்.
எரேமியா 51 : 20 (IRVTA)
நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.
எரேமியா 51 : 21 (IRVTA)
உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன்.
எரேமியா 51 : 22 (IRVTA)
உன்னைக்கொண்டு ஆணையும் பெண்ணையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன்.
எரேமியா 51 : 23 (IRVTA)
உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய ஏர்மாடுகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்.
எரேமியா 51 : 24 (IRVTA)
பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் எல்லா குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 51 : 25 (IRVTA)
இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 51 : 26 (IRVTA)
மூலைக்கல்லுக்காகிலும் அஸ்திபாரக் கல்லுக்காகிலும் ஒரு கல்லையும் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கிற இடமாவாய் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 51 : 27 (IRVTA)
தேசத்தில் கொடியேற்றுங்கள்; மக்களுக்குள் எக்காளம் ஊதுங்கள்; மக்களை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாக வரவழையுங்கள்; அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; அரிப்புள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரச்செய்யுங்கள்.
எரேமியா 51 : 28 (IRVTA)
மேதியா தேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் எல்லா அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்திற்குக் கீழான எல்லா தேசத்தாருமாகிய மக்களை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.
எரேமியா 51 : 29 (IRVTA)
அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும்; பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் யெகோவா நினைத்தவைகள் நிலைக்கும்.
எரேமியா 51 : 30 (IRVTA)
பாபிலோன் பராக்கிரமசாலிகள் போர்செய்யாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து தைரியமற்றவர்களானார்கள்; அதின் இருப்பிடங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது.
எரேமியா 51 : 31 (IRVTA)
கடையாந்தர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும், துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், போர்வீரர்கள் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,
எரேமியா 51 : 32 (IRVTA)
தபால்காரன்மேல் தபால்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான்.
எரேமியா 51 : 33 (IRVTA)
பாபிலோன் மகள் மிதிக்கப்படுங் களத்திற்குச் சமானம்; அதைப் போரடிக்கும் காலம்வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்தில் அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 51 : 34 (IRVTA)
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.
எரேமியா 51 : 35 (IRVTA)
எனக்கும் என் இனத்தாருக்கும் செய்த கொடுமையின் பழி பாபிலோன்மேல் வரக்கடவதென்று சீயோனில் வாசமானவள் சொல்லுகிறாள்; என் இரத்தப்பழி கல்தேயர் தேசத்துக் குடிகளின்மேல் வரக்கடவதென்று எருசலேம் என்பவளும் சொல்லுகிறாள்.
எரேமியா 51 : 36 (IRVTA)
ஆகையால் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வற்றிப்போகவும் அதின் ஊற்றைச் சுரக்கவும்செய்வேன்.
எரேமியா 51 : 37 (IRVTA)
அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தங்குமிடமும், பாழும், ஈசல் போடப்படுதலுக்கு இடமுமாகப்போகும்.
எரேமியா 51 : 38 (IRVTA)
ஏகமாக அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கக்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.
எரேமியா 51 : 39 (IRVTA)
அவர்கள் மகிழ்ந்திருக்கும் சமயத்தில் நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 51 : 40 (IRVTA)
அவர்களை ஆட்டுக்குட்டிகளைப்போலவும், ஆட்டுக்கடாக்களைப்போலவும், வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகச்செய்வேன்.
எரேமியா 51 : 41 (IRVTA)
சேசாக்கு பிடிபட்டு, பூமிமுழுதும் புகழும் புகழ்ச்சி அகப்பட்டது எப்படி? தேசங்களுக்குள்ளே பாபிலோன் பிரமிப்பானது எப்படி?
எரேமியா 51 : 42 (IRVTA)
சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் திரளான அலைகளினால் அது மூடப்பட்டது.
எரேமியா 51 : 43 (IRVTA)
அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்திரமுமான பூமியுமாய், ஒரு மனிதனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாகப்போனது.
எரேமியா 51 : 44 (IRVTA)
நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கவைப்பேன்; மக்கள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்.
எரேமியா 51 : 45 (IRVTA)
என் மக்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; யெகோவாவுடைய கோபத்தின் உக்கிரத்திற்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆத்துமாவை காப்பாற்றிக்கொள்ளக்கடவன்.
எரேமியா 51 : 46 (IRVTA)
உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருடத்தில் ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருடத்தில் வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்தில் கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்.
எரேமியா 51 : 47 (IRVTA)
ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலைசெய்யப்படுகிற அனைவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள்.
எரேமியா 51 : 48 (IRVTA)
வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 51 : 49 (IRVTA)
பாபிலோன் இஸ்ரவேலில் கொலைசெய்யப்பட்டவர்களை விழச்செய்ததுபோல, பாபிலோனிலும் அனைத்து தேசங்களிலும் கொலைசெய்யப்படுகிறவர்கள் விழுவார்கள்.
எரேமியா 51 : 50 (IRVTA)
பட்டயத்திற்குத் தப்பினவர்களே, தங்கியிருக்காமல் நடந்துவாருங்கள்; தூரத்தில் யெகோவாவை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.
எரேமியா 51 : 51 (IRVTA)
நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; யெகோவாவுடைய ஆலயத்தின் பரிசுத்த இடங்களின்மேல் அந்நியர் வந்ததினால் வெட்கம் நம்முடைய முகங்களை மூடியது.
எரேமியா 51 : 52 (IRVTA)
ஆகையால், யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலைசெய்யப்படுகிறவர்கள் கத்துவார்கள்.
எரேமியா 51 : 53 (IRVTA)
பாபிலோன் வானபரியந்தம் ஏறினாலும், அது தன் பலமான அரணை உயர்த்தினாலும், அதைப் பாழாக்குகிறவர்கள் என்னிடத்திலிருந்து வருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 51 : 54 (IRVTA)
பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும்.
எரேமியா 51 : 55 (IRVTA)
யெகோவா பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியச்செய்வார்; அவர்களுடைய அலைகள் திரளான தண்ணீர்களைப்போல இரையும், அவர்களுடைய சத்தம் ஆரவாரமாயிருக்கும்.
எரேமியா 51 : 56 (IRVTA)
பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவா நிச்சயமாகப் பதில் அளிப்பார்.
எரேமியா 51 : 57 (IRVTA)
அதின் பிரபுக்களையும், அதின் ஞானிகளையும், அதின் தலைவரையும், அதின் அதிகாரிகளையும், அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கச்செய்வேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கிவிழுவார்கள் என்று சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள ராஜா சொல்லுகிறார்.
எரேமியா 51 : 58 (IRVTA)
பாபிலோனின் அகலமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான இடங்கள் நெருப்பால் சுட்டெரிக்கப்படும்; அப்படியே மக்கள் பிரயாசப்பட்டது வீணும், மக்கள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது நெருப்புக்கு இரையுமாகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 51 : 59 (IRVTA)
பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும், பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புத்தகத்தில் எழுதினான்.
எரேமியா 51 : 60 (IRVTA)
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாட்சிசெய்யும் நான்காம் வருடத்தில் பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனுடன்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் மகனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை.
எரேமியா 51 : 61 (IRVTA)
எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
எரேமியா 51 : 62 (IRVTA)
யெகோவாவே, இந்த இடத்தில் மனிதனும் மிருகங்களும் தங்காமலிருக்க, அது என்றென்றைக்கும் அழிந்த நிலையிலிருக்க, அதை அழித்துப்போடுவேன் என்று தேவனே நீர் அதைக்குறித்து சொன்னீர் என்பதை நீ சொல்லி,
எரேமியா 51 : 63 (IRVTA)
நீ இந்தப் புத்தகத்தை வாசித்து முடிந்தபோது, அதில் ஒரு கல்லைக் கட்டி, அதை ஐப்பிராத்து நடுவில் எறிந்துவிட்டு,
எரேமியா 51 : 64 (IRVTA)
இப்படியே பாபிலோன் முழுகிப்போகும், நான் அதின்மேல் வரச்செய்யும் தீங்கினால் எழுந்திருக்கமுடியாமல் சோர்ந்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இத்துடன் முடிந்தது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64