எரேமியா 48 : 1 (IRVTA)
மோவாபைக்குறித்த செய்தி மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ, நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போனது; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போனது.
எரேமியா 48 : 2 (IRVTA)
எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெருமை இனி இருக்காது; அது ஒரு தேசமாக இராமல் அதை அழிப்போம் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் அழிக்கப்படுவாய்; பட்டயம் உன்னைத் தொடரும்.
எரேமியா 48 : 3 (IRVTA)
பாழ்க்கடிப்பினாலும் பெரிய நொறுக்குதலினாலும் உண்டாகிற கூப்பிடுதலின் சத்தம் ஒரொனாயிமிலிருந்து கேட்கப்படும்.
எரேமியா 48 : 4 (IRVTA)
மோவாப் நொறுங்குண்டது; அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது.
எரேமியா 48 : 5 (IRVTA)
லூகித்திற்கு ஏறிப்போகிற வழியில் அழுகையின்மேல் அழுகை எழும்பும்; ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியில் நொறுக்குதல் செய்கிறதினால் ஏற்படுகிற கூக்குரலை எதிரிகள் கேட்கிறார்கள்.
எரேமியா 48 : 6 (IRVTA)
உங்கள் உயிர் தப்ப ஓடிப்போங்கள்; வனாந்திரத்திலுள்ள குறுகிப்போன செடியைப்போலிருப்பீர்கள்.
எரேமியா 48 : 7 (IRVTA)
நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷங்களையும் நம்புகிறதினால் நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கேமோஷ் சிறையாக்கப்பட்டுப்போகும்; அதின் ஆசாரியர்களும் பிரபுக்களும் எல்லோரும் சிறைப்பட்டுப்போவார்கள்.
எரேமியா 48 : 8 (IRVTA)
பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று யெகோவா சொன்னார்.
எரேமியா 48 : 9 (IRVTA)
மோவாபுக்கு இறக்கைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிமக்களில்லாமல் பாழாய்ப்போகும்.
எரேமியா 48 : 10 (IRVTA)
யெகோவாவுடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.
எரேமியா 48 : 11 (IRVTA)
மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாக வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் ஊற்றப்படாமலும், அதின் வண்டல்களின்மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை மாறவில்லை.
எரேமியா 48 : 12 (IRVTA)
ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது கவிழ்த்துப்போடுகிறவர்களை அதற்கு அனுப்புவேன்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் ஜாடிகளை உடைத்துப்போடுவார்கள்.
எரேமியா 48 : 13 (IRVTA)
அப்பொழுது இஸ்ரவேல் சந்ததி தங்கள் நம்பிக்கையான பெத்தேலாலே வெட்கப்பட்டதுபோல, மோவாப் கேமோஷாலே வெட்கப்படும்.
எரேமியா 48 : 14 (IRVTA)
நாங்கள் பராக்கிரசாலிகளென்றும், நாங்கள் போர்வீரர்களென்றும் நீங்கள் சொல்லுகிறதென்ன?
எரேமியா 48 : 15 (IRVTA)
மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைக்களத்திற்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள ராஜா சொல்லுகிறார்.
எரேமியா 48 : 16 (IRVTA)
மோவாபின் ஆபத்து வரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் வேகமாகவருகிறது.
எரேமியா 48 : 17 (IRVTA)
அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் புகழை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் அதற்காக அங்கலாய்த்துக்கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.
எரேமியா 48 : 18 (IRVTA)
தீபோன் பட்டணவாசியான மகளே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்துடன் உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் மதில்களை அழித்துப்போடுவான்.
எரேமியா 48 : 19 (IRVTA)
ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியில் நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்.
எரேமியா 48 : 20 (IRVTA)
மோவாப் தோல்வியடைந்ததினால் கலங்கிப்போனது; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.
எரேமியா 48 : 21 (IRVTA)
சமனான பூமியாகிய ஓலோனின்மேலும், யாத்சாவின்மேலும், மெபாகாத்தின் மேலும்,
எரேமியா 48 : 22 (IRVTA)
தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும்,
எரேமியா 48 : 23 (IRVTA)
கீரியாத்தாயீமின்மேலும், பேத்கமூலின்மேலும், பெத்மெயோனின்மேலும்,
எரேமியா 48 : 24 (IRVTA)
கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்தில் தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும்.
எரேமியா 48 : 25 (IRVTA)
மோவாபின் கொம்பு வெட்டப்பட்டது; அவன் கை முறிக்கப்பட்டது என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 48 : 26 (IRVTA)
அவனை வெறிகொள்ளச் செய்யுங்கள்; யெகோவாவுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டினான்; மோவாப் தான் வாந்தியெடுத்து அதில் புரளுவான்; அவன் பரியாசத்திற்கு இடமாவான்.
எரேமியா 48 : 27 (IRVTA)
இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையை ஆட்டுகிறாயே.
எரேமியா 48 : 28 (IRVTA)
மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய், கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்.
எரேமியா 48 : 29 (IRVTA)
அவன் அதிக பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் தற்பெருமையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.
எரேமியா 48 : 30 (IRVTA)
அவன் தற்பெருமையையும் நான் அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார்.
எரேமியா 48 : 31 (IRVTA)
ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனிதரினிமித்தம் பெருமூச்சுவிடப்படும்.
எரேமியா 48 : 32 (IRVTA)
சீப்மாவூரின் திராட்சைச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோனது; அவைகள் யாசேர் கடல்வரை போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்தகாலத்துப் பழங்களின்மேலும், உன் திராட்சைப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.
எரேமியா 48 : 33 (IRVTA)
பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போனது; திராட்சைரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயச்செய்தேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல.
எரேமியா 48 : 34 (IRVTA)
எஸ்போன் துவங்கி எலெயாலெ, யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஒரொனாயிம்வரை சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் தண்ணீர்களும் வற்றிப்போகும்.
எரேமியா 48 : 35 (IRVTA)
மோவாப் தேசத்து மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தெய்வங்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 48 : 36 (IRVTA)
ஆகையால், மோவாபினிமித்தம் என் இருதயம் நாதசுரம்போல் துயரமாய் தொனிக்கும்; கீராரேஸ் மனிதருக்காகவும், என் இருதயம் நாதசுரம்போல் துயரமாய் தொனிக்கும்; அவர்கள் சம்பாதித்த ஐசுவரியம் அழிந்துபோகிறதினால் அப்படித் தொனிக்கும்.
எரேமியா 48 : 37 (IRVTA)
தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், இடுப்புகளில் சணலாடைகள் உண்டு.
எரேமியா 48 : 38 (IRVTA)
மோவாபின் எல்லா வீடுகளின்மேலும் அதின் தெருக்களிலேயும் புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 48 : 39 (IRVTA)
மோவாப் எவ்வளவாக முறிந்துபோனதென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும்.
எரேமியா 48 : 40 (IRVTA)
இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் இறக்கைகளை விரிப்பான்.
எரேமியா 48 : 41 (IRVTA)
கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளில் மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற பெண்ணின் இருதயம்போல இருக்கும்.
எரேமியா 48 : 42 (IRVTA)
மோவாப் யெகோவாவுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டினதினால், அது ஒரு மக்கள் கூட்டமாக இராமல் அழிக்கப்படும்.
எரேமியா 48 : 43 (IRVTA)
மோவாப் தேசத்தின் விவசாயியே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 48 : 44 (IRVTA)
திகிலுக்கு விலக ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியில் பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருடத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 48 : 45 (IRVTA)
கடுமையான அடிக்குத் தப்ப ஓடிப்போகிறவர்கள் எஸ்போனின் நிழலில் ஒதுங்கி நின்றார்கள், ஆனாலும் நெருப்பு எஸ்போனிலும், நெருப்பு ஜூவாலை சீகோன் நடுவிலுமிருந்து புறப்பட்டு, மோவாப்தேசத்தின் எல்லைகளையும், கலகம் செய்கிறவர்களின் உச்சந்தலையையும் எரிக்கும்
எரேமியா 48 : 46 (IRVTA)
மோவாபே, உனக்கு ஐயோ, கேமோஷ் சிலைக்கு அருகிலுள்ள மக்கள் அழிவார்கள், உன் மகன்களும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் மகள்களும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்.
எரேமியா 48 : 47 (IRVTA)
ஆனாலும் வரும் நாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்துடன் முடிந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47