எரேமியா 31 : 1 (IRVTA)
அக்காலத்தில் நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 31 : 2 (IRVTA)
பட்டயத்திற்குத் தப்பியிருந்த, மக்கள் வனாந்திரத்தில் இரக்கம்பெற்றார்கள்; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 31 : 3 (IRVTA)
பூர்வகாலமுதல் யெகோவா எனக்குக் காட்சியளித்தார் என்பாய்; ஆம் ஆதி அன்பினால் உன்னை நேசித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்கிறேன்.
எரேமியா 31 : 4 (IRVTA)
இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.
எரேமியா 31 : 5 (IRVTA)
மறுபடியும் சமாரியாவின் மலைகளில் திராட்சைத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள்.
எரேமியா 31 : 6 (IRVTA)
எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள காவற்காரர் சொல்லும் காலம் வரும்.
எரேமியா 31 : 7 (IRVTA)
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபுக்காக மகிழ்ச்சியாய் கெம்பீரித்து, தேசங்களுடைய தலைவருக்காக ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கச்செய்து, துதித்து: யெகோவாவே, இஸ்ரவேலில் மீதியான உமது மக்களைக் காப்பாற்றும் என்று சொல்லுங்கள்.
எரேமியா 31 : 8 (IRVTA)
இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரவழைத்து, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து அழைத்துவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளும் அவர்களில் இருப்பார்கள்; திரளான கூட்டமாக இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.
எரேமியா 31 : 9 (IRVTA)
அழுகையுடனும் விண்ணப்பங்களுடனும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதியருகில் தவறாத செம்மையான வழியில் நடக்கச்செய்வேன்; இஸ்ரவேலுக்கு நான் தகப்பனாயிருக்கிறேன், எப்பிராயீம் என் மூத்தமகனாயிருக்கிறான்.
எரேமியா 31 : 10 (IRVTA)
தேசங்களே, நீங்கள் யெகோவாவுடைய வார்த்தையைக்கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காப்பதுபோல அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்.
எரேமியா 31 : 11 (IRVTA)
யெகோவா யாக்கோபை மீட்டு, அவனிலும் பலவானுடைய கைக்கு அவனை விலக்கி விடுவிக்கிறார்.
எரேமியா 31 : 12 (IRVTA)
அவர்கள் வந்து, சீயோனின் உச்சியில் கெம்பீரித்து, யெகோவா அருளும் கோதுமை, திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.
எரேமியா 31 : 13 (IRVTA)
அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருடன் ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
எரேமியா 31 : 14 (IRVTA)
ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளால் பூரிப்பாக்குவேன்; என் மக்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 31 : 15 (IRVTA)
ராமாவில் புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாததினால் அவைகளுக்காக ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 31 : 16 (IRVTA)
நீ அழாமல் உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாமல் உன் கண்களைக் காத்துக்கொள் என்று யெகோவா சொல்லுகிறார்; உன் செயல்களுக்குப் பலனுண்டென்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் எதிரியின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.
எரேமியா 31 : 17 (IRVTA)
உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்திற்குத் திரும்பிவருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 31 : 18 (IRVTA)
நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய யெகோவா.
எரேமியா 31 : 19 (IRVTA)
நான் திரும்பினபின்பு மனவேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு மார்பில் [* விலாவில்] அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி தலைகுனிந்துகொண்டும் இருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன்.
எரேமியா 31 : 20 (IRVTA)
எப்பிராயீம் எனக்கு அருமையான மகன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினதுமுதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 31 : 21 (IRVTA)
உனக்கு ஞாபகக்குறிகளை வை; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய மகளே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.
எரேமியா 31 : 22 (IRVTA)
முறைகெட்டுப்போன மகளே, எதுவரை விலகித் திரிவாய்? யெகோவா பூமியில் ஒரு புதுமையை உண்டாக்குவார், பெண்ணானவள் ஆணைச் சூழ்ந்துகொள்ளுவாள்.
எரேமியா 31 : 23 (IRVTA)
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் இருப்பிடமே, பரிசுத்த பர்வதமே, யெகோவா உன்னை ஆசீர்வதிக்கக்கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள்.
எரேமியா 31 : 24 (IRVTA)
அதில் யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனிதரும் விவசாயிகளும், மந்தைகளை மேய்க்கிறவர்களும் ஒன்றாகக் குடியிருப்பார்கள்.
எரேமியா 31 : 25 (IRVTA)
நான் களைப்புற்ற ஆத்துமாவைச் சம்பூரணமடையச்செய்து, சோர்ந்துபோன எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.
எரேமியா 31 : 26 (IRVTA)
இதற்காக நான் விழித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது.
எரேமியா 31 : 27 (IRVTA)
இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் மக்களையும், யூதா மக்களையும், மனிதவித்தினாலும் மிருகவித்தினாலும் விதைப்பேன்.
எரேமியா 31 : 28 (IRVTA)
அப்பொழுது நான் பிடுங்கவும், இடிக்கவும், நிர்மூலமாக்கவும், அழிக்கவும், தீங்குசெய்யவும் அவர்கள் பேரில் எப்படி எச்சரிக்கையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும், நாட்டவும் அவர்கள்பேரில் எச்சரிக்கையாயிருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 31 : 29 (IRVTA)
பிதாக்கள் திராட்சைக்காய்களைச் சாப்பிட்டார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசியது என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.
எரேமியா 31 : 30 (IRVTA)
அவனவன் தன்தன் அக்கிரமத்தினாலே இறப்பான்; எந்த மனிதன் திராட்சைக்காய்களை சாப்பிட்டானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
எரேமியா 31 : 31 (IRVTA)
இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் மக்களுடனும் யூதா மக்களுடனும் புது உடன்படிக்கைசெய்வேன்.
எரேமியா 31 : 32 (IRVTA)
நான் அவர்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவர கைப்பிடித்த நாளில் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 31 : 33 (IRVTA)
அந்நாட்களுக்குப்பிறகு, நான் இஸ்ரவேல் மக்களுடன் செய்யப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்தில் வைத்து, அதை அவர்கள் இருதயத்தில் எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 31 : 34 (IRVTA)
இனி ஒருவன் தன் அருகில் உள்ளவனையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: யெகோவாவை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்வரை, எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
எரேமியா 31 : 35 (IRVTA)
சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திரன், நட்சத்திரங்களை இரவு வெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கும் விதத்தில் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் யெகோவா என்னும் பெயருடைய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்:
எரேமியா 31 : 36 (IRVTA)
இந்த அமைப்புகள் எனக்கு முன்பாக இல்லாமல் ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு தேசமாயிராமல் அகன்றுபோகும் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 31 : 37 (IRVTA)
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயமுடியுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றிக்காகவும் வெறுத்துவிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 31 : 38 (IRVTA)
இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுரமுதல் கடைசிவாசல்வரை கர்த்தருக்கென்று கட்டப்படும்.
எரேமியா 31 : 39 (IRVTA)
பிறகு அளவுநூல் அதற்கு எதிராய்க் காரேப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத் புறமாக சுற்றிப்போகும்.
எரேமியா 31 : 40 (IRVTA)
பிணங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்குகள் அனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பக்கம் கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கடைசிவரை இருக்கிற எல்லா நிலங்களும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பிறகு அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: