எரேமியா 27 : 1 (IRVTA)
யூதா நேபுகாத்நேச்சாரைப் பணியவேண்டும் யோசியாவின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீ* சிதேக்கியா முடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்தில் யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
எரேமியா 27 : 2 (IRVTA)
யெகோவா என்னை நோக்கி: நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டாக்கி, அவைகளை உன் கழுத்தில் சுற்றிக்கொண்டு,
எரேமியா 27 : 3 (IRVTA)
அவைகளை எருசலேமுக்கு சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் பிரதிநிதிகள் கையில் ஏதோமின் ராஜாவுக்கும், மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் மக்களின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி,
எரேமியா 27 : 4 (IRVTA)
அவர்கள் தங்கள் எஜமான்களுக்குச் சொல்லும்படிக் கற்பிக்கவேண்டுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,
எரேமியா 27 : 5 (IRVTA)
நான் பூமியையும் மனிதனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் கரத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு விருப்பமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.
எரேமியா 27 : 6 (IRVTA)
இப்பொழுதும் நான் இந்த தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையில் கொடுத்தேன்; அவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன்.
எரேமியா 27 : 7 (IRVTA)
அவனுடைய தேசத்திற்குக் காலம் வருகிறவரையில் எல்லா மக்களும் அவனையும் அவனுடைய மகனையும் பேரனையும் சேவிப்பார்கள்; அதின்பின்பு அநேகம் மக்களும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள்.
எரேமியா 27 : 8 (IRVTA)
எந்த தேசமாவது, எந்த ராஜ்யமாவது பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்பவனைச் சேவியாமலும், தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்திற்குக் கீழ்ப்படுத்தாமலும்போனால், அந்தத் தேசத்தை நான் அவன் கையால் அழிக்கும்வரை, பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் தண்டிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 27 : 9 (IRVTA)
பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிற உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், உங்கள் குறிகாரருக்கும், உங்கள் சொப்பனக்காரருக்கும், உங்கள் நாள் பார்க்கிறவர்களுக்கும், உங்கள் சூனியக்காரருக்கும் நீங்கள் காதுகொடுத்துக் கேட்காதிருங்கள்.
எரேமியா 27 : 10 (IRVTA)
நான் உங்களை உங்கள் தேசத்திலிருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிவதற்காக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
எரேமியா 27 : 11 (IRVTA)
ஆனாலும் எந்த மக்கள் தன் கழுத்தை பாபிலோன் ராஜாவின் நுகத்திற்குக் கீழ்ப்படுத்தி, அவனைப் பணிவார்களோ, அந்த மக்களைத் தன் தேசத்தைப் பயிரிட்டு, அதில் குடியிருந்து நிலைக்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 27 : 12 (IRVTA)
இந்த எல்லா வார்த்தைகளின்படியே நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவுடன் பேசி: உங்கள் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்திற்குக் கீழ்ப்படுத்தி, அவனையும் அவன் மக்களையும் சேவியுங்கள்; அப்பொழுது பிழைப்பீர்கள்.
எரேமியா 27 : 13 (IRVTA)
பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற மக்களுக்கு விரோதமாகக் யெகோவா சொன்னதின்படியே, நீயும் உன் மக்களும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் ஏன் இறக்கவேண்டும்?
எரேமியா 27 : 14 (IRVTA)
நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
எரேமியா 27 : 15 (IRVTA)
நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் பெயரைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார் என்றேன்.
எரேமியா 27 : 16 (IRVTA)
மேலும் நான் ஆசாரியர்களையும் இந்த எல்லா மக்களையும் நோக்கி: இதோ, யெகோவாவுடைய ஆலயத்தின் பணிப்பொருட்கள் இப்பொழுது சீக்கிரத்தில் பாபிலோனிலிருந்து திரும்பக் கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
எரேமியா 27 : 17 (IRVTA)
அவர்கள் சொல்லைக் கேளாதிருங்கள்; பாபிலோன் ராஜாவைப் பணியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இந்த நகரம் அழியவேண்டியதென்ன?
எரேமியா 27 : 18 (IRVTA)
அல்லது அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்து, அவர்களிடத்தில் யெகோவாவுடைய வார்த்தை இருந்தால், யெகோவாவுடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரண்மனையிலும், எருசலேமிலும் மீதியான பணிப்பொருட்கள் பாபிலோனுக்குப் போகாமலிருக்க அவர்கள் சேனைகளின் யெகோவாவை நோக்கி மன்றாடட்டுமே.
எரேமியா 27 : 19 (IRVTA)
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் மகனாகிய எகொனியா என்னும் யூதாவின் ராஜாவையும், யூதாவிலும் எருசலேமிலிருந்த பெரியோர் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகும்போது,
எரேமியா 27 : 20 (IRVTA)
எடுக்காமல்விட்ட எல்லா தூண்களையும், கடல்தொட்டியையும், ஆதாரங்களையும், இந்த நகரத்தில் மீதியான மற்ற பணிப் பொருட்களையுங்குறித்துச் சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,
எரேமியா 27 : 21 (IRVTA)
யெகோவாவுடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரண்மனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிப்பொருட்கள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 27 : 22 (IRVTA)
நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கே இருக்கும்; பின்பு அவைகளைத் திரும்ப இந்த இடத்திற்குக் கொண்டுவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றேன்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22