எரேமியா 23 : 1 (IRVTA)
நீதியுள்ள கிளை என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ, என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 2 (IRVTA)
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தமது மக்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரிக்காமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைச் துரத்திவிட்டீர்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 3 (IRVTA)
நான் என் ஆடுகளில் மீதியாக இருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப்பெருகும்.
எரேமியா 23 : 4 (IRVTA)
அவைகளை மேய்க்கத் தகுதி உள்ளவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 5 (IRVTA)
இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது தாவீதிற்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பச்செய்வேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ஆட்சிசெய்து, பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
எரேமியா 23 : 6 (IRVTA)
அவர் நாட்களில் யூதா காப்பாற்றப்படும், இஸ்ரவேல் சுகமாக வாசம்செய்யும்; அவருக்குச் சூட்டப்படும் பெயர் நமது நீதியாயிருக்கிற யெகோவா என்பதே.
எரேமியா 23 : 7 (IRVTA)
ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் மக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சத்தியம் செய்யாமல்,
எரேமியா 23 : 8 (IRVTA)
இஸ்ரவேல் வீட்டின் சந்ததியாரைத் தங்கள் சொந்ததேசத்தில் குடியிருப்பதற்கு வடதேசத்திலும், நான் அவர்களைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து அழைத்து வழிநடத்திக்கொண்டுவந்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சத்தியம் செய்வார்களென்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 9 (IRVTA)
பொய் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசிகளுக்காக என் இருதயம் என் உள்ளத்தில் நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தருக்காகவும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளுக்காகவும் நான் வெறித்திருக்கிற மனிதனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன்.
எரேமியா 23 : 10 (IRVTA)
தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்திரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது; அவர்கள் ஓட்டம் பொல்லாதது; அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது.
எரேமியா 23 : 11 (IRVTA)
தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள்; என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 12 (IRVTA)
ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டில் சறுக்கலான வழியாயிருக்கும், துரத்தப்பட்டு அதில் விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருடத்தில் அவர்கள்மேல் பொல்லாப்பை வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 13 (IRVTA)
சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் மக்களை மோசம்போக்கினார்கள்.
எரேமியா 23 : 14 (IRVTA)
எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்செய்து, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாமல் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லோரும் எனக்குச் சோதோமைப்போலவும், அதின் குடிமக்கள் கொமோராவைப்போலவும் இருக்கிறார்கள்.
எரேமியா 23 : 15 (IRVTA)
ஆதலால் சேனைகளின் யெகோவா தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரவிற்றோ என்று சொல்லுகிறார்.
எரேமியா 23 : 16 (IRVTA)
உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமையடையச் செய்கிறார்கள்; யெகோவாவுடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 17 (IRVTA)
அவர்கள் என்னை அசட்டை செய்கிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று யெகோவா சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்தில் நடக்கிற அனைவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.
எரேமியா 23 : 18 (IRVTA)
யெகோவாவுடைய ஆலோசனையில் நின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?
எரேமியா 23 : 19 (IRVTA)
இதோ, யெகோவாவுடைய பெருங்காற்றாகிய கொடிய புயல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் கடுமையாக மோதும்.
எரேமியா 23 : 20 (IRVTA)
யெகோவா தம்முடைய இருதயத்தின் நினைவுகளை செய்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.
எரேமியா 23 : 21 (IRVTA)
அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களுடன் நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
எரேமியா 23 : 22 (IRVTA)
அவர்கள் என் ஆலோசனையில் நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை மக்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.
எரேமியா 23 : 23 (IRVTA)
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 24 (IRVTA)
யாராவது தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள முடியுமோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 25 (IRVTA)
சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் பெயரைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.
எரேமியா 23 : 26 (IRVTA)
எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.
எரேமியா 23 : 27 (IRVTA)
என் மக்களின் முற்பிதாக்கள் பாகாலுக்காக என் பெயரை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினால் என் பெயரை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள்.
எரேமியா 23 : 28 (IRVTA)
சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 29 (IRVTA)
என் வார்த்தை நெருப்பைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 30 (IRVTA)
ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 31 (IRVTA)
இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை சொன்னார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 32 (IRVTA)
இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் மக்களைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த மக்களுக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 33 (IRVTA)
பொய்யான தெய்வவாக்கு மற்றும் பொய் தீர்க்கதரிசிகள் யெகோவா சொன்னது என்னவென்று, இந்த மக்களாகிலும் ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பதில் என்று நீ அவர்களுடன் சொல்லவேண்டும்.
எரேமியா 23 : 34 (IRVTA)
கர்த்தரால் வரும் பதில் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் மக்களாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனிதனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 23 : 35 (IRVTA)
யெகோவா என்ன பதில் கொடுத்தார்? யெகோவா என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அருகில் உள்ளவனையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேளுங்கள்.
எரேமியா 23 : 36 (IRVTA)
ஆனால் கர்த்தரால் வரும் பதில் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவனவன் வார்த்தையே அவனவனுக்குப் பதிலாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் யெகோவா என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்.
எரேமியா 23 : 37 (IRVTA)
யெகோவா உனக்கு என்ன பதில் கொடுத்தார்? யெகோவா என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக.
எரேமியா 23 : 38 (IRVTA)
நீங்களோவென்றால், கர்த்தரால் வரும் பதில் என்று சொல்லுகிறதினால்: யெகோவாவின் பதில் என்று சொல்லாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியும், நீங்கள் இந்த வார்த்தையைக் யெகோவாவின் பதில் என்று சொல்லுகிறீர்களே.
எரேமியா 23 : 39 (IRVTA)
ஆதலால், இதோ, நான் உங்களை முற்றிலும் மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும், எனக்கு முன்பாக இல்லாதபடி கைவிட்டு,
எரேமியா 23 : 40 (IRVTA)
மறக்கமுடியாத, நிலையான நிந்தையையும், நிலையான வெட்கத்தையும் உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40