எரேமியா 16 : 1 (IRVTA)
அழிவின் நாள் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
எரேமியா 16 : 2 (IRVTA)
நீ பெண்ணைத் திருமணம் செய்யவேண்டாம்; இவ்விடத்தில் உனக்கு மகன்களும் மகள்களும் இருக்கவேண்டாம் என்றார்.
எரேமியா 16 : 3 (IRVTA)
இவ்விடத்தில் பிறக்கிற மகன்களையும் மகள்களையும், இந்தத் தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற தகப்பன்களையும் குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,
எரேமியா 16 : 4 (IRVTA)
மகா கொடிய வியாதிகளால் இறப்பார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்செய்வாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறந்து போவார்கள்; அவர்களுடைய உடல் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
எரேமியா 16 : 5 (IRVTA)
ஆகையால், நீ துக்கவீட்டில் நுழையாமலும், புலம்புவதற்க்குப்போகாமலும் அவர்களுக்கு பரிதாபப்படாமலும் இருப்பாயாக என்று யெகோவா சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த மக்களைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 16 : 6 (IRVTA)
இந்த தேசத்தில் பெரியோரும் சிறியோரும் இறப்பார்கள்; அவர்களை அடக்கம்செய்வாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்களுக்காக கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.
எரேமியா 16 : 7 (IRVTA)
இறந்தவர்களுக்காக ஏற்படுகிற துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு ஆகாரம் பரிமாறப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவோ, ஒருவனுடைய தாய்க்காவோ துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.
எரேமியா 16 : 8 (IRVTA)
நீ அவர்களுடன் அமர்ந்து சாப்பிட விருந்துவீட்டிலும் நுழையாதே.
எரேமியா 16 : 9 (IRVTA)
ஏனெனில், இதோ, இவ்விடத்தில் நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும் ஓயச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 16 : 10 (IRVTA)
நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த மக்களுக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: யெகோவா எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கை ஏன் சொல்லவேண்டும் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன என்றும் கேட்பார்களானால்,
எரேமியா 16 : 11 (IRVTA)
நீ அவர்களை நோக்கி: உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்கி, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.
எரேமியா 16 : 12 (IRVTA)
நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் பார்க்கிலும் அதிகக் கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக்கேளாமல், உங்கள் பொல்லாத இருதயக் கடினத்தின்படி நடக்கிறீர்கள்.
எரேமியா 16 : 13 (IRVTA)
ஆகவே, உங்களை இந்தத் தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நிய தெய்வங்களை வணங்குவீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.
எரேமியா 16 : 14 (IRVTA)
ஆகவே, இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம் செய்யாமல்,
எரேமியா 16 : 15 (IRVTA)
இஸ்ரவேல் மக்களை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரவழைத்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்செய்வார்கள்; நான் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 16 : 16 (IRVTA)
இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக் குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.
எரேமியா 16 : 17 (IRVTA)
என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்திற்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை; அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.
எரேமியா 16 : 18 (IRVTA)
முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்திற்கும், அவர்களுடைய பாவத்திற்கும் இரட்டிப்பாக நீதி செய்வேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் பங்கைச் சீயென்று அருவருக்குமளவுக்கு தங்கள் காரியங்களின் அசுத்தமான விக்கிரகங்களினால் நிரப்பினார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 16 : 19 (IRVTA)
என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய யெகோவாவே, அந்நியமக்கள் பூமியின் கடைசிமுனைகளிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் முற்பிதாக்கள் பிரயோஜனமில்லாத வீணான விக்கிரங்களைக் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
எரேமியா 16 : 20 (IRVTA)
மனிதன் தனக்குத் தெய்வங்களை உண்டாக்கலாமோ? அவைகள் தெய்வங்கள் அல்லவே.
எரேமியா 16 : 21 (IRVTA)
ஆதலால் இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியவைப்பேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரிவிப்பேன்; என் பெயர் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21