ஏசாயா 51 : 1 (IRVTA)
சீயோனுக்கு நித்திய இரட்சிப்பு நீதியைப் பின்பற்றி யெகோவாவை தேடுகிறவர்களாகிய நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட கிணற்றின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.
ஏசாயா 51 : 2 (IRVTA)
உன்னுடைய தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கும்போது நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகச்செய்தேன்.
ஏசாயா 51 : 3 (IRVTA)
யெகோவா சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான இடங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்திரத்தை ஏதேனைப்போலவும், அதின் காலியான இடத்தைக் யெகோவாவின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் பாடலின் சத்தமும் அதில் உண்டாயிருக்கும்.
ஏசாயா 51 : 4 (IRVTA)
என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் மக்களே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை மக்களின் வெளிச்சமாக நிறுவுவேன்.
ஏசாயா 51 : 5 (IRVTA)
என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் மக்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்.
ஏசாயா 51 : 6 (IRVTA)
உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோகும், பூமி ஆடையைப்போல் பழையதாகும்; அதின் குடிமக்களும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.
ஏசாயா 51 : 7 (IRVTA)
நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
ஏசாயா 51 : 8 (IRVTA)
பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுரோமத்தைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.
ஏசாயா 51 : 9 (IRVTA)
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; யெகோவாவின் புயமே, ஆரம்ப நாட்களிலும் முந்தின தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை* இராகாபும் வலுசர்ப்பமும் கடல்பிராணிகள் ஆகும் வதைத்ததும் நீதானல்லவோ?
ஏசாயா 51 : 10 (IRVTA)
மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய கடலை வற்றிப்போகச்செய்ததும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?
ஏசாயா 51 : 11 (IRVTA)
அப்படியே யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.
ஏசாயா 51 : 12 (IRVTA)
நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனிதனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின யெகோவாவை மறக்கிறதற்கும் நீ யார்?
ஏசாயா 51 : 13 (IRVTA)
துன்பம் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய கடுங்கோபத்திற்கு எப்போதும் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? துன்பம் செய்கிறவனுடைய கடுங்கோபம் எங்கே?
ஏசாயா 51 : 14 (IRVTA)
சிறைப்பட்டுப்போனவன் துரிதமாக விடுதலையாவான்; அவன் குழியிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.
ஏசாயா 51 : 15 (IRVTA)
உன் தேவனாயிருக்கிற யெகோவா நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாக கடலைக் குலுக்குகிற சேனைகளின் யெகோவா என்கிற நாமமுள்ளவர்.
ஏசாயா 51 : 16 (IRVTA)
நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் மக்கள்கூட்டமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.
ஏசாயா 51 : 17 (IRVTA)
யெகோவாவுடைய கோபமாகிய பாத்திரம் எழும்பு, எழும்பு, யெகோவாவுடைய கடுங்கோபத்தின் பாத்திரத்தை அவருடைய கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.
ஏசாயா 51 : 18 (IRVTA)
அவள் பெற்ற மக்கள் அனைவருக்குள்ளும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த மகன்கள் எல்லோரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை.
ஏசாயா 51 : 19 (IRVTA)
இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உன்னை ஆறுதல்படுத்துகிறவன் யார்? பாழாகுதலும், அழிவும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உன்னை ஆறுதல்படுத்துவேன்?
ஏசாயா 51 : 20 (IRVTA)
உன் மகன்கள் தளர்ந்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்கிய கலைமானைப்போல, அனைத்து வீதிகளின் முனையிலும், யெகோவாவுடைய கடுங்கோபத்தினாலும், உன் தேவனுடைய கடிந்துகொள்ளுதலினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.
ஏசாயா 51 : 21 (IRVTA)
ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடிக்காமல் வெறிகொண்டவளே, நீ கேள்.
ஏசாயா 51 : 22 (IRVTA)
கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய மக்களுக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்கிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் கடுங்கோபத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை.
ஏசாயா 51 : 23 (IRVTA)
உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23