ஏசாயா 23 : 1 (IRVTA)
தீருவைக்குறித்த தீர்க்கதரிசனம் தீருவைக்குறித்த செய்தி. தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
ஏசாயா 23 : 2 (IRVTA)
தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வியாபாரிகள் கடலிலே பயணம்செய்து உன்னை நிரப்பினார்கள்.
ஏசாயா 23 : 3 (IRVTA)
சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது தேசங்களின் சந்தையாயிருந்தது.
ஏசாயா 23 : 4 (IRVTA)
சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெற்றெடுப்பதும் இல்லை; இளைஞர்களை வளர்க்கிறதும் இல்லை; கன்னிப்பெண்களை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்கிறது.
ஏசாயா 23 : 5 (IRVTA)
எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்.
ஏசாயா 23 : 6 (IRVTA)
கடற்கரைக் குடிமக்களே, நீங்கள் தர்ஷீஸ்வரை புறப்பட்டுப்போய் அலறுங்கள்.
ஏசாயா 23 : 7 (IRVTA)
ஆரம்பநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? தூரதேசம்போய் வசிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாகக் கொண்டுபோகும்.
ஏசாயா 23 : 8 (IRVTA)
கிரீடம் அணிவிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வியாபாரிகள் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
ஏசாயா 23 : 9 (IRVTA)
சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் அனைவரையும் கனவீனப்படுத்தவும், சேனைகளின் யெகோவாவே இதை யோசித்துத் தீர்மானித்தார்.
ஏசாயா 23 : 10 (IRVTA)
தர்ஷீஸின் மகளே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை.
ஏசாயா 23 : 11 (IRVTA)
யெகோவா தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, இராஜ்யங்களைக் குலுங்கச்செய்தார்; கானானின்* பொஹினிசியா அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாகக் கட்டளைகொடுத்து:
ஏசாயா 23 : 12 (IRVTA)
ஒடுக்கப்பட்ட கன்னியாகிய மகளாகிய சீதோனே, இனிக் களிகூர்ந்துகொண்டிக்கமாட்டாய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார்.
ஏசாயா 23 : 13 (IRVTA)
கல்தேயருடைய பாபிலோன் தேசத்தைப் பார்; அந்த மக்கள் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்திரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரண்மனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார்.
ஏசாயா 23 : 14 (IRVTA)
தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது.
ஏசாயா 23 : 15 (IRVTA)
அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருடங்கள் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருடங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும்.
ஏசாயா 23 : 16 (IRVTA)
மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு.
ஏசாயா 23 : 17 (IRVTA)
எழுபது வருடங்களின் முடிவிலே யெகோவா வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் லாபத்திற்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள அநேக தேசங்களுடனும் வேசித்தனம்செய்யும்.
ஏசாயா 23 : 18 (IRVTA)
அதின் வியாபாரமும், அதின் லாபமும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாகச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; யெகோவாவுடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல உடைகளை அணியவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18