ஏசாயா 20 : 1 (IRVTA)
கூஷ் மற்றும் எகிப்தைக் குறித்த தீர்க்கதரிசனம் சேனாதிபதி தர்த்தான்* † , அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்திற்கு வந்து, அஸ்தோத்தின்மேல் போர்செய்து, அதைப் பிடித்த வருடத்திலே,
ஏசாயா 20 : 2 (IRVTA)
யெகோவா ஆமோத்சின் மகனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் இடுப்பிலிருக்கிற சணலாடையை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற காலணிகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடந்தான்.
ஏசாயா 20 : 3 (IRVTA)
அப்பொழுது யெகோவா: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்று வருடத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடக்கிறதுபோல,
ஏசாயா 20 : 4 (IRVTA)
அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய வாலிபர்களையும் முதியோரையும், ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக எகிப்தியருக்கு வெட்கமுண்டாக, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.
ஏசாயா 20 : 5 (IRVTA)
அப்பொழுது இந்தக் கடற்கரைக்குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:
ஏசாயா 20 : 6 (IRVTA)
இதோ, அசீரிய ராஜாவின் முகத்திற்குத் தப்புவதற்காக நாங்கள் நம்பி, உதவிக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்வார்கள் என்றார்.
❮
❯
1
2
3
4
5
6