ஆதியாகமம் 5 : 1 (IRVTA)
ஆதாமின் வம்சவரலாறு
1 நாளா 1:1-4 ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.
ஆதியாகமம் 5 : 2 (IRVTA)
அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.
ஆதியாகமம் 5 : 3 (IRVTA)
ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 5 : 4 (IRVTA)
ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 5 (IRVTA)
ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 6 (IRVTA)
சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 7 (IRVTA)
சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 8 (IRVTA)
சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 9 (IRVTA)
ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 10 (IRVTA)
ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 11 (IRVTA)
ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 12 (IRVTA)
கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப்* தேவனுக்கு ஸ்தோத்திரம் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 13 (IRVTA)
கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 14 (IRVTA)
கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 15 (IRVTA)
மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 16 (IRVTA)
மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 17 (IRVTA)
மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 18 (IRVTA)
யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 19 (IRVTA)
யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 20 (IRVTA)
யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 21 (IRVTA)
ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 22 (IRVTA)
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 23 (IRVTA)
ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள்.
ஆதியாகமம் 5 : 24 (IRVTA)
ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
ஆதியாகமம் 5 : 25 (IRVTA)
மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 26 (IRVTA)
மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 27 (IRVTA)
மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 28 (IRVTA)
லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து,
ஆதியாகமம் 5 : 29 (IRVTA)
“யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 5 : 30 (IRVTA)
லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 31 (IRVTA)
லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 32 (IRVTA)
நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32