எஸ்றா 10 : 1 (IRVTA)
மக்களின் பாவ அறிக்கை எஸ்றா இப்படி விண்ணப்பம்செய்து, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்திற்கு முன்பாகத் தாழவிழுந்துகிடக்கும்போது, இஸ்ரவேலில் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடினது; மக்கள் மிகவும் அழுதார்கள்.
எஸ்றா 10 : 2 (IRVTA)
அப்பொழுது ஏலாமின் மகன்களில் ஒருவனாகிய யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து மக்களிலுள்ள அந்நியப் பெண்களைச் சேர்த்துக்கொண்டதால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
எஸ்றா 10 : 3 (IRVTA)
இப்பொழுதும் அந்தப் பெண்கள் எல்லோரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனுடன் உடன்படிக்கை செய்வோமாக; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக.
எஸ்றா 10 : 4 (IRVTA)
எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்குரியது; நாங்களும் உம்மோடு இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.
எஸ்றா 10 : 5 (IRVTA)
அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் முக்கியமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்ய, அவர்களை ஆணையிடச் சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.
எஸ்றா 10 : 6 (IRVTA)
அதன்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்திற்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் மகனாகிய யோகனானின் அறைக்குள் சென்றான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினால் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.
எஸ்றா 10 : 7 (IRVTA)
அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,
எஸ்றா 10 : 8 (IRVTA)
மூன்று நாட்களுக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராமல்போனால், அவனுடைய பொருட்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபையிலிருந்து அவன் விலக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம் செய்தார்கள்.
எஸ்றா 10 : 9 (IRVTA)
அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லோரும் மூன்று நாட்களுக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதியாயிருந்தது; மக்கள் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
எஸ்றா 10 : 10 (IRVTA)
அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேல் இருக்கிற குற்றத்தை அதிகரிக்கச்செய்ய, வேறு இனப் பெண்களைத் திருமணம்செய்ததால் பாவம் செய்தீர்கள்.
எஸ்றா 10 : 11 (IRVTA)
இப்பொழுதும் நீங்கள் உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் மக்களையும், வேறு இனப் பெண்களையும் விட்டுவிலகுங்கள் என்றான்.
எஸ்றா 10 : 12 (IRVTA)
அப்பொழுது சபையார் அனைவரும் மகா சத்தத்தோடே மறுமொழியாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.
எஸ்றா 10 : 13 (IRVTA)
ஆனாலும் மக்கள் திரளாயிருக்கிறார்கள், இது மழைக்காலமுமாக இருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே முடியாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளையை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.
எஸ்றா 10 : 14 (IRVTA)
ஆகையால் இதற்கு சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரர்களாக ஏற்படுத்தப்படவேண்டும்; இந்தக் காரியத்தினால் நம்முடைய தேவனுக்கு இருக்கிற கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் வேறு இனமான பெண்களைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரவேண்டும் என்றார்கள்.
எஸ்றா 10 : 15 (IRVTA)
ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்காவின் மகன் யக்சியாவும் மாத்திரம் அதை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதாயி என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.
எஸ்றா 10 : 16 (IRVTA)
சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாக்களுடைய வம்சங்களின் தலைவர்கள் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல் தேதியிலே, தனித்து உட்கார்ந்து,
எஸ்றா 10 : 17 (IRVTA)
வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள் எல்லோருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
எஸ்றா 10 : 18 (IRVTA)
கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் ஆசாரிய புத்திரரில் மறு ஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
எஸ்றா 10 : 19 (IRVTA)
இவர்கள் தங்கள் பெண்களைத் தள்ளிவிடுவோம் என்று உறுதிமொழி கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானதால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
எஸ்றா 10 : 20 (IRVTA)
இம்மேரின் மகன்களில் அனானியும், செபதியாவும்,
எஸ்றா 10 : 21 (IRVTA)
ஆரீமின் மகன்களில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
எஸ்றா 10 : 22 (IRVTA)
பஸ்கூரின் மகன்களில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
எஸ்றா 10 : 23 (IRVTA)
லேவியர்களில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பெயர்கொண்ட கெலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் என்பவர்களும்;
எஸ்றா 10 : 24 (IRVTA)
பாடகர்களில் எலியாசிபும், வாசல் காவலாளர்களில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
எஸ்றா 10 : 25 (IRVTA)
மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் மகன்களில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
எஸ்றா 10 : 26 (IRVTA)
ஏலாமின் மகன்களில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;
எஸ்றா 10 : 27 (IRVTA)
சத்தூவின் மகன்களில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்;
எஸ்றா 10 : 28 (IRVTA)
பெபாயின் மகன்களில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;
எஸ்றா 10 : 29 (IRVTA)
பானியின் மகன்களில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்,
எஸ்றா 10 : 30 (IRVTA)
பாகாத்மோவாபின் மகன்களில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;
எஸ்றா 10 : 31 (IRVTA)
ஆரீமின் மகன்களில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,
எஸ்றா 10 : 32 (IRVTA)
பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;
எஸ்றா 10 : 33 (IRVTA)
ஆசூமின் மகன்களில் மதனாய், மத்தத்தா, சாபாத், எலிப்பெலேத், எரெமாயி, மனாசே, சிமேயி என்பவர்களும்;
எஸ்றா 10 : 34 (IRVTA)
பானியின் மகன்களில் மாதாயி, அம்ராம், ஊவேல்,
எஸ்றா 10 : 35 (IRVTA)
பெனாயா, பெதியா, கெல்லூ,
எஸ்றா 10 : 36 (IRVTA)
வனியா, மெரெமோத், எலியாசிப்,
எஸ்றா 10 : 37 (IRVTA)
மத்தனியா, மதனாய், யாசாய்,
எஸ்றா 10 : 38 (IRVTA)
பானி, பின்னூயி, சிமெயி,
எஸ்றா 10 : 39 (IRVTA)
செலேமியா, நாத்தான், அதாயா,
எஸ்றா 10 : 40 (IRVTA)
மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
எஸ்றா 10 : 41 (IRVTA)
அசரெயேல், செலேமியா, செமரியா,
எஸ்றா 10 : 42 (IRVTA)
சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;
எஸ்றா 10 : 43 (IRVTA)
நேபோவின் மகன்களில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
எஸ்றா 10 : 44 (IRVTA)
இவர்கள் எல்லோரும் வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள்; * புறஜாதி மனைவிமார்களையும் அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளையும் அனுப்பிவிட்டார்கள் இவர்களில் சிலர் திருமணம்செய்த பெண்களிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44