எசேக்கியேல் 31 : 1 (IRVTA)
{லீபனோனிலுள்ள கேதுரு} [PS] பாபிலோனின் சிறையிருப்பின் பதினோராம் வருடம் மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
எசேக்கியேல் 31 : 2 (IRVTA)
மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடனும் அவனுடைய திரளான மக்களுடனும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன்னுடைய மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாக இருக்கிறாய்?
எசேக்கியேல் 31 : 3 (IRVTA)
இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கிளைகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்து உயர்ந்த கேதுரு மரமாக இருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.
எசேக்கியேல் 31 : 4 (IRVTA)
தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயரச்செய்தது; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன்னுடைய நீர்க்கால்களை வெளியின் மரங்களுக்கெல்லாம் பாயவிட்டது.
எசேக்கியேல் 31 : 5 (IRVTA)
ஆகையால் வெளியின் எல்லா மரங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடும்போது திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கிளைகள் நீளமானது.
எசேக்கியேல் 31 : 6 (IRVTA)
அதின் கிளைகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கிளைகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டது; பெரிதான எல்லா தேசகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.
எசேக்கியேல் 31 : 7 (IRVTA)
அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன்னுடைய செழிப்பினாலும் தன்னுடைய கிளைகளின் நீளத்தினாலும் அலங்காரமாக இருந்தது.
எசேக்கியேல் 31 : 8 (IRVTA)
தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கமுடியாமல் இருந்தது; தேவதாரு மரங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு மரமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.
எசேக்கியேல் 31 : 9 (IRVTA)
அதின் அடர்ந்த கிளைகளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் மரங்களெல்லாம் அதின்மேல் பொறாமைகொண்டன.
எசேக்கியேல் 31 : 10 (IRVTA)
ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன்னுடைய வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன்னுடைய நுனிக்கிளையை உயர வளரச்செய்ததாலும், அதின் இருதயம் தன்னுடைய மேட்டிமையினால் உயர்ந்துபோனதினாலும்,
எசேக்கியேல் 31 : 11 (IRVTA)
நான் அதைத் தேசங்களில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு விருப்பமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்திற்காக அதைத் தள்ளிப்போட்டேன்.
எசேக்கியேல் 31 : 12 (IRVTA)
தேசங்களில் வல்லவராகிய அந்நிய தேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் எல்லா பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆறுகளினருகே முறிந்தன; பூமியிலுள்ள மக்கள் எல்லோரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்து போனார்கள்.
எசேக்கியேல் 31 : 13 (IRVTA)
விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தங்கினது; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின.
எசேக்கியேல் 31 : 14 (IRVTA)
தண்ணீரின் ஓரமாக வளருகிற எந்த மரங்களும் தங்களுடைய உயரத்தினாலே மேட்டிமை கொள்ளாமலும், தங்களுடைய கொப்புகளின் தழைக்குள்ளே தங்களுடைய நுனிக்கிளையை உயர வளரவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும், தங்களுடைய உயரத்தினாலே தங்கள்மேல் நம்பிக்கைவைக்காமலும் இருக்கும்படி இப்படிச் செய்வேன்; மனிதகுமாரர்களின் நடுவே அவர்கள் எல்லோரும் குழியில் இறங்குகிறவர்களுடன் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.
எசேக்கியேல் 31 : 15 (IRVTA)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது.
எசேக்கியேல் 31 : 16 (IRVTA)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன.
எசேக்கியேல் 31 : 17 (IRVTA)
அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள்.
எசேக்கியேல் 31 : 18 (IRVTA)
இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் மரங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் மரங்களுடன் நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, வாளாலே வெட்டுபட்டவர்களுடன் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவனுடைய கூட்டமும் இதுவே என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

BG:

Opacity:

Color:


Size:


Font: