யாத்திராகமம் 27 : 1 (IRVTA)
தகனபலியின் பலிபீடம் (யாத்திராகமம். 38:1-7) “ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமாக* 7 1/2 அடி நீளம், 7 1/2 அடி அகலம் 41/2 அடி உயரம் சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டாக்கவேண்டும்; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாக இருப்பதாக.
யாத்திராகமம் 27 : 2 (IRVTA)
அதின் நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகளை உண்டாக்கவேண்டும்; அதின் கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.
யாத்திராகமம் 27 : 3 (IRVTA)
அதின் சாம்பலை எடுக்கத்தகுந்த சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணங்களையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்கவேண்டும்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தால் செய்வாயாக.
யாத்திராகமம் 27 : 4 (IRVTA)
வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைச் செய்து, அந்தச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களை உண்டாக்கி,
யாத்திராகமம் 27 : 5 (IRVTA)
அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதிஉயரத்தில் இருக்கும்படி அதை பலிபீடத்தின் அடியில் சுற்றடைப்புக்குக் கீழே வைக்கவேண்டும்.
யாத்திராகமம் 27 : 6 (IRVTA)
பலிபீடத்திற்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடவேண்டும்.
யாத்திராகமம் 27 : 7 (IRVTA)
பலிபீடத்தைச் சுமக்கும்படி அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே மாட்டப்பட்டிருக்கவேண்டும்.
யாத்திராகமம் 27 : 8 (IRVTA)
அதை உள்ளே மற்றும் வெளியேவிட்டுப் பலகைகளினாலே செய்யவேண்டும்; மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதைச் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 27 : 9 (IRVTA)
பிராகாரமும் திரைகளும் 38:9-20 “ஆசரிப்பு கூடாரத்திற்கு பிராகாரத்தையும் உண்டாக்கவேண்டும்; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான 150 அடி நீளம் தொங்கு திரைகள் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 27 : 10 (IRVTA)
அவைகளுக்கு வெண்கலத்தினால் இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.
யாத்திராகமம் 27 : 11 (IRVTA)
அப்படியே வடக்கு பக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான 150 அடி நீளம் தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாக இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.
யாத்திராகமம் 27 : 12 (IRVTA)
பிராகாரத்தின் மேற்கு பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ§ 75 அடி நீளம் நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 27 : 13 (IRVTA)
சூரியன் உதிக்கிற திசையாகிய கிழக்குப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பது முழ* 75 அடி நீளம் அகலமாக இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 27 : 14 (IRVTA)
அங்கே ஒரு பக்கத்திற்குப் பதினைந்து முழ 22 1/2 அடி நீளம் நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 27 : 15 (IRVTA)
மறுபக்கத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 27 : 16 (IRVTA)
பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாகச் செய்யப்பட்ட இருபதுமுழ 20 அடி நீளம் நீளமான ஒரு தொங்கு திரையும் அதற்கு நான்கு தூண்களும், அவைகளுக்கு நான்கு பாதங்களும் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 27 : 17 (IRVTA)
சுற்று பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் வளையம் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
யாத்திராகமம் 27 : 18 (IRVTA)
பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும்§ 150 அடி நீளம், 75 அடி அகலம், 7/2 அடி உயரம் , இருபக்கத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாக இருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாக இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 27 : 19 (IRVTA)
ஆசரிப்பு கூடாரத்தின் எல்லா பணிகளுக்குத் தேவையான எல்லா பணிப்பொருட்களும், அதின் எல்லா ஆப்புகளும், பிராகாரத்தின் எல்லா ஆப்புகளும் வெண்கலமாக இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 27 : 20 (IRVTA)
விளக்குக்கு வேண்டிய எண்ணெய் லேவி. 24:1- 4. குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களுக்குக் கட்டளையிடு.
யாத்திராகமம் 27 : 21 (IRVTA)
கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைக்கு வெளியே ஆரோனும் அவனுடைய மகன்களும் மாலை துவங்கி அதிகாலைவரை யெகோவாவுடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கவேண்டும்; இது இஸ்ரவேலர்களின் தேசத்திற்கு தலைமுறை தலைமுறையாக நிரந்தர கட்டளையாக இருக்கட்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21