உபாகமம் 7 : 1 (IRVTA)
மக்களைத் துரத்திவிடுதல் “நீ சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை நுழையச்செய்து, உன்னைவிட எண்ணிக்கையிலும் பெலத்திலும் மிகுந்த மக்களாகிய ஏத்தியர்கள், கிர்காசியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் ஏழு பலத்த தேசங்களை உனக்கு முன்பாகத் துரத்தி,
உபாகமம் 7 : 2 (IRVTA)
உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களைத் தாக்கி, முற்றிலும் அழித்துவிடவேண்டும்; அவர்களுடன் உடன்படிக்கைசெய்யவும் அவர்களுக்கு மனமிரங்கவும் வேண்டாம்.
உபாகமம் 7 : 3 (IRVTA)
அவர்களுடன் சம்பந்தம் ஏற்படுத்தக்கூடாது; உன் மகள்களை அவர்கள் மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உன் மகன்களுக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக.
உபாகமம் 7 : 4 (IRVTA)
என்னைப் பின்பற்றாமல், அந்நிய தெய்வங்களை வணங்கும்படி அவர்கள் உன்னுடைய மகன்களை விலகச்செய்வார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.
உபாகமம் 7 : 5 (IRVTA)
நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளை உடைத்து, தோப்புகளை வெட்டி, சிலைகளை அக்கினியிலே எரித்துவிடவேண்டும்.
உபாகமம் 7 : 6 (IRVTA)
நீ உன் தேவனாகிய யெகோவா வுக்குப் பரிசுத்த மக்கள், பூமியிலுள்ள எல்லா மக்களிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னைத் தமக்குச் சொந்தமாயிருப்பதற்காகத் தெரிந்துகொண்டார்.
உபாகமம் 7 : 7 (IRVTA)
சகல மக்களிலும் நீங்கள் எண்ணிக்கையில் அதிகமான மக்களென்று யெகோவா உங்கள்மேல் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் எல்லா மக்களிலும் சிறிய கூட்டமாயிருந்தீர்கள்.
உபாகமம் 7 : 8 (IRVTA)
யெகோவா உங்களில் அன்புசெலுத்தியதாலும், உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவேண்டும் என்பதினாலும்; யெகோவா பலத்த கையினால் உங்களைப் புறப்படச்செய்து, அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்தும், அதின் ராஜாவான பார்வோனின் கையிலிருந்தும் உங்களை மீட்டுக்கொண்டார்.
உபாகமம் 7 : 9 (IRVTA)
ஆகையால் உன் தேவனாகிய யெகோவாவே தேவன் என்றும், தம்மில் அன்புவைத்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைவரை உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,
உபாகமம் 7 : 10 (IRVTA)
தம்மைப் பகைக்கிறவர்களுக்கு வெளிப்படையாகப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் வெளிப்படையாகப் பதிலளிப்பார் என்றும் நீ அறிவாயாக.
உபாகமம் 7 : 11 (IRVTA)
ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்வாயாக.
உபாகமம் 7 : 12 (IRVTA)
“இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து,
உபாகமம் 7 : 13 (IRVTA)
உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்து, கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகச்செய்து, உன் கர்ப்பப்பிறப்புகளையும், உன் நிலத்தின் பலன்களாகிய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 7 : 14 (IRVTA)
சகல மக்களைவிட நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் கால்நடைகளுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடு இருப்பதில்லை.
உபாகமம் 7 : 15 (IRVTA)
யெகோவா சகல நோய்களையும் உன்னை விட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியர்களின் கொடிய வியாதிகளில் ஒன்றும் உன்மேல் வரச்செய்யாமல், உன்னைப் பகைக்கிற அனைவரின்மேலும் அவைகளை வரச்செய்வார்.
உபாகமம் 7 : 16 (IRVTA)
உன் தேவனாகிய யெகோவா உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல மக்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன் கண் அவர்களுக்கு இரக்கம்காட்டாமல் இருப்பதாக; அவர்கள் தெய்வங்களை நீ வழிபடாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாக இருக்கும்.
உபாகமம் 7 : 17 (IRVTA)
“அந்த மக்கள்கூட்டத்தினர் என்னைவிட எண்ணிக்கையில் அதிகமுள்ளவர்கள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொள்வாயானால்,
உபாகமம் 7 : 18 (IRVTA)
உன் தேவனாகிய யெகோவா பார்வோனுக்கும் எகிப்தியர்கள் அனைவருக்கும் செய்ததையும்,
உபாகமம் 7 : 19 (IRVTA)
உன்னுடைய கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும், அற்புதங்களையும், உன் தேவனாகிய யெகோவா உன்னைப் புறப்படச்செய்து காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாக நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ யாரைப்பார்த்துப் பயப்படுகிறாயோ அவர்களுக்கும் உன் தேவனாகிய யெகோவா அப்படியே செய்வார்.
உபாகமம் 7 : 20 (IRVTA)
மீதியாயிருந்து உன் கண்களுக்குத்தப்பி ஒளிந்துகொள்ளுகிறவர்களும் அழிந்துபோகும்வரை உன் தேவனாகிய யெகோவா அவர்களுக்குள்ளே குளவிகளை* கொள்ளைநோய் அனுப்புவார்.
உபாகமம் 7 : 21 (IRVTA)
அவர்களைப் பார்த்து பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.
உபாகமம் 7 : 22 (IRVTA)
அந்த மக்களை உன் தேவனாகிய யெகோவா கொஞ்சம் கொஞ்சமாக உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒரே சமயத்தில் அழிக்கவேண்டாம்; அழித்தால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.
உபாகமம் 7 : 23 (IRVTA)
உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் அழியும்வரை அவர்களை மிகவும் கலங்கடிப்பார்.
உபாகமம் 7 : 24 (IRVTA)
அவர்களுடைய ராஜாக்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்களுடைய பெயர் வானத்தின்கீழ் இராதபடி அவர்களை அழிக்கக்கடவாய்; நீ அவர்களை அழித்துமுடியும்வரை ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள்.
உபாகமம் 7 : 25 (IRVTA)
அவர்களுடைய தெய்வங்களின் சிலைகளை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடி, அவைகளில் இருக்கிற வெள்ளியையும், பொன்னையும் ஆசைப்படாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.
உபாகமம் 7 : 26 (IRVTA)
அவைகளைப்போல நீ சாபத்திற்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிற்குக் கொண்டுபோகாதே; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருப்பாயாக, அது சாபத்திற்குள்ளானது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26