உபாகமம் 32 : 1 (IRVTA)
{மோசேயின் பாடல்} [PS] “வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; [QBR] பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. [QBR]
உபாகமம் 32 : 2 (IRVTA)
மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; [QBR] பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். [QBR]
உபாகமம் 32 : 3 (IRVTA)
யெகோவாவுடைய நாமத்தை பிரபலப்படுத்துவேன்; [QBR] நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள். [QBR]
உபாகமம் 32 : 4 (IRVTA)
“அவர் கன்மலை; [QBR] அவருடைய செயல் உத்தமமானது; [QBR] அவருடைய வழிகளெல்லாம் நியாயம், [QBR] அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; [QBR] அவர் நீதியும் செம்மையுமானவர். [QBR]
உபாகமம் 32 : 5 (IRVTA)
அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; [QBR] இதுவே அவர்களுடைய காரியம்; [QBR] அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார். [QBR]
உபாகமம் 32 : 6 (IRVTA)
விவேகமில்லாத மதிகெட்ட மக்களே, [QBR] இப்படியா யெகோவாவுக்குப் பதிலளிக்கிறீர்கள், [QBR] உன்னை ஆட்கொண்ட தகப்பன் அவரல்லவா? [QBR] உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா? [QBR]
உபாகமம் 32 : 7 (IRVTA)
ஆரம்பநாட்களை நினை; [QBR] தலைமுறை தலைமுறையாக கடந்துபோன வருடங்களைக் கவனித்துப்பார்; [QBR] உன் தகப்பனைக் கேள், [QBR] அவன் உனக்கு அறிவிப்பான்; [QBR] உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள். [QBR]
உபாகமம் 32 : 8 (IRVTA)
உன்னதமான தேவன் மக்களுக்குச் சொத்துக்களைப் பங்கிட்டு, [QBR] ஆதாமின் பிள்ளைகளை வெவ்வேறாகப் பிரித்த காலத்தில், [QBR] இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கைக்குத்தக்கதாக, [QBR] அனைத்து மக்களின் எல்லைகளைத் திட்டம்செய்தார். [QBR]
உபாகமம் 32 : 9 (IRVTA)
யெகோவாவுடைய மக்களே அவருடைய பங்கு; [QBR] யாக்கோபு அவருக்குச் சொந்தமானவர்கள். [QBR]
உபாகமம் 32 : 10 (IRVTA)
“பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான வெட்டவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், [QBR] அவனை நடத்தினார், [QBR] அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். [QBR]
உபாகமம் 32 : 11 (IRVTA)
கழுகு தன் கூட்டைக் கலைத்து, [QBR] தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, [QBR] தன் இறக்கைகளை விரித்து, [QBR] குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல, [QBR]
உபாகமம் 32 : 12 (IRVTA)
யெகோவா ஒருவரே அவனை வழிநடத்தினார், [QBR] அந்நிய தெய்வம் அவருடன் இருந்ததில்லை. [QBR]
உபாகமம் 32 : 13 (IRVTA)
பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்; [QBR] வயலில் விளையும் பலனை அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்; [QBR] கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் [QBR] அவன் சாப்பிடும்படி செய்தார். [QBR]
உபாகமம் 32 : 14 (IRVTA)
பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், [QBR] பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், [QBR] வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், [QBR] கொழுமையான கோதுமையையும், [QBR] இரத்தம்போன்ற பொங்கிவழிகிற திராட்சைரசத்தையும் சாப்பிட்டாய். [QBR]
உபாகமம் 32 : 15 (IRVTA)
“யெஷூரன் [* இஸ்ரவேலின் நீதிபரரை] கொழுத்துப்போய் உதைத்தான்; [QBR] கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமானதால், [QBR] தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு, [QBR] தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைசெய்தான். [QBR]
உபாகமம் 32 : 16 (IRVTA)
அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; [QBR] அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். [QBR]
உபாகமம் 32 : 17 (IRVTA)
அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; [QBR] தாங்கள் அறியாதவைகளும், [QBR] தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், [QBR] புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். [QBR]
உபாகமம் 32 : 18 (IRVTA)
உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ நினைக்காமற்போனாய்; [QBR] உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய். [QBR]
உபாகமம் 32 : 19 (IRVTA)
“யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும், [QBR] மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து, [QBR] அவர்களைப் புறக்கணித்து: [QBR]
உபாகமம் 32 : 20 (IRVTA)
என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; [QBR] அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; [QBR] அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; [QBR] உண்மையில்லாத பிள்ளைகள். [QBR]
உபாகமம் 32 : 21 (IRVTA)
தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, [QBR] தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; [QBR] ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, [QBR] மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன். [QBR]
உபாகமம் 32 : 22 (IRVTA)
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, [QBR] அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; [QBR] அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, [QBR] மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். [QBR]
உபாகமம் 32 : 23 (IRVTA)
“தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்; [QBR] என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன். [QBR]
உபாகமம் 32 : 24 (IRVTA)
அவர்கள் பசியினால் வாடி, [QBR] சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்; [QBR] கொடிய மிருகங்களின் பற்களையும், [QBR] தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். [QBR]
உபாகமம் 32 : 25 (IRVTA)
வெளியிலே பட்டயமும், [QBR] உள்ளே பயங்கரமும், [QBR] வாலிபனையும், இளம்பெண்ணையும், குழந்தையையும், [QBR] நரைத்த கிழவனையும் அழிக்கும். [QBR]
உபாகமம் 32 : 26 (IRVTA)
எங்கள் கை உயர்ந்ததென்றும், [QBR] யெகோவா இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைவர்கள் தவறான எண்ணம்கொண்டு சொல்லுவார்கள் என்று, [QBR]
உபாகமம் 32 : 27 (IRVTA)
நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால், [QBR] நான் அவர்களை மூலைக்குமூலை சிதறடித்து, [QBR] மனிதர்களுக்குள் அவர்களுடைய பெயர் அழிந்துபோகச்செய்வேன் என்று சொல்லியிருப்பேன். [QBR]
உபாகமம் 32 : 28 (IRVTA)
“அவர்கள் யோசனை இல்லாத மக்கள், [QBR] அவர்களுக்கு உணர்வு இல்லை. [QBR]
உபாகமம் 32 : 29 (IRVTA)
அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, [QBR] தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார். [QBR]
உபாகமம் 32 : 30 (IRVTA)
அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், [QBR] யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, [QBR] இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி? [QBR]
உபாகமம் 32 : 31 (IRVTA)
தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். [QBR]
உபாகமம் 32 : 32 (IRVTA)
அவர்களுடைய திராட்சைச்செடி, [QBR] சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சைச்செடியிலும் குறைந்த தரமுள்ளதாக இருக்கிறது, [QBR] அவைகளின் பழங்கள் விஷமும் அவைகளின் குலைகள் கசப்புமாக இருக்கிறது. [QBR]
உபாகமம் 32 : 33 (IRVTA)
அவர்களுடைய திராட்சைரசம் வலுசர்ப்பங்களின் விஷமும், [QBR] விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது. [QBR]
உபாகமம் 32 : 34 (IRVTA)
“இது என்னிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, [QBR] என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டு இருக்கிறதில்லையோ? [QBR]
உபாகமம் 32 : 35 (IRVTA)
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; [QBR] ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; [QBR] அவர்களுடைய ஆபத்துநாள் நெருங்கியிருக்கிறது; [QBR] அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள் விரைவாக வரும். [QBR]
உபாகமம் 32 : 36 (IRVTA)
யெகோவா தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து, [QBR] அவர்கள் பெலன் போயிற்று என்றும், [QBR] அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, [QBR] தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். [QBR]
உபாகமம் 32 : 37 (IRVTA)
அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு, [QBR] பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் [QBR] அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே? [QBR]
உபாகமம் 32 : 38 (IRVTA)
அவைகள் எழுந்து உங்களுக்கு உதவிசெய்து [QBR] உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும். [QBR]
உபாகமம் 32 : 39 (IRVTA)
“நான் நானே அவர், [QBR] என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; [QBR] நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; [QBR] நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்; [QBR] என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை. [QBR]
உபாகமம் 32 : 40 (IRVTA)
நான் என் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி, [QBR] நான் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவர் என்கிறேன். [QBR]
உபாகமம் 32 : 41 (IRVTA)
மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி, [QBR] என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் எதிரிகளிடத்தில் பழிவாங்கி, [QBR] என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதில்கொடுப்பேன். [QBR]
உபாகமம் 32 : 42 (IRVTA)
கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; [QBR] என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும். [QBR]
உபாகமம் 32 : 43 (IRVTA)
“மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, [QBR] தம்முடைய எதிரிகளுக்குப் பதில்கொடுத்து, [QBR] தமது தேசத்தின்மேலும் தமது மக்களின்மேலும் கிருபையுள்ளவராக இருப்பார்”. [PE][PS]
உபாகமம் 32 : 44 (IRVTA)
மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
உபாகமம் 32 : 45 (IRVTA)
மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர்கள் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு,
உபாகமம் 32 : 46 (IRVTA)
அவர்களை நோக்கி: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
உபாகமம் 32 : 47 (IRVTA)
இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான். [PS]
உபாகமம் 32 : 48 (IRVTA)
{மோசேயின் மரணம்} [PS] அந்த நாளிலேதானே யெகோவா மோசேயை நோக்கி:
உபாகமம் 32 : 49 (IRVTA)
“நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்கு சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;
உபாகமம் 32 : 50 (IRVTA)
நீங்கள் சீன் வனாந்திரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீரின் அருகில் இஸ்ரவேல் மக்களுக்குள்ளே என்னைப் பரிசுத்தம்செய்யாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
உபாகமம் 32 : 51 (IRVTA)
உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய்.
உபாகமம் 32 : 52 (IRVTA)
நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற எதிரேயுள்ள தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ நுழைவதில்லை” என்றார். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52

BG:

Opacity:

Color:


Size:


Font: