தானியேல் 2 : 1 (IRVTA)
நேபுகாத்நேச்சாரின் கனவு நேபுகாத்நேச்சார் ஆட்சிசெய்யும் இரண்டாம் வருடத்திலே, நேபுகாத்நேச்சார் கனவுகளைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய தூக்கம் கலைந்தது.
தானியேல் 2 : 2 (IRVTA)
அப்பொழுது ராஜா தன் கனவுகளைத் தனக்குத் தெரிவிப்பதற்காக ஞானிகளையும் சோதிடர்களையும் மாயவித்தைக்காரர்களையும் கல்தேயர்களையும் அழைக்கச் சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.
தானியேல் 2 : 3 (IRVTA)
ராஜா அவர்களை நோக்கி: ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவின் அர்த்தத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்.
தானியேல் 2 : 4 (IRVTA)
அப்பொழுது கல்தேயர்கள் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; கனவை உமது அடியார்களுக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரிய மொழியிலே* தானியேல். 2:4-7:28, வரை அராமிக் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது சொன்னார்கள்.
தானியேல் 2 : 5 (IRVTA)
ராஜா கல்தேயர்களுக்கு மறுமொழியாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் கனவையும் அதின் அர்த்தத்தையும் எனக்குச் சொல்லாவிட்டால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்.
தானியேல் 2 : 6 (IRVTA)
கனவையும் அதின் அர்த்தத்தையும் சொல்வீர்களென்றால், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் கனவையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான்.
தானியேல் 2 : 7 (IRVTA)
அவர்கள் மறுபடியும் மறுமொழியாக: ராஜா அடியார்களுக்குக் கனவைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தைச் சொல்வோம் என்றார்கள்.
தானியேல் 2 : 8 (IRVTA)
அதற்கு ராஜா மறுமொழியாக: என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.
தானியேல் 2 : 9 (IRVTA)
காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாக பொய்யும் புரட்டுமான செய்தியைச் சொல்லும்படி திட்டமிட்டிருக்கிறீர்கள்; நீங்கள் கனவை எனக்குச் சொல்லாவிட்டால், உங்கள் அனைவருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் கனவை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் சொல்லமுடியுமென்று அறிந்துகொள்வேன் என்றான்.
தானியேல் 2 : 10 (IRVTA)
கல்தேயர்கள் ராஜசமுகத்தில் மறுமொழியாக: ராஜா கேட்கும் காரியத்தை சொல்லத்தக்க மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு ஞானியினிடத்திலாவது சோதிடனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.
தானியேல் 2 : 11 (IRVTA)
ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களுடன் வாசம்செய்யாத தேவர்களேயல்லாமல் ராஜசமுகத்தில் அதை அறிவிக்க முடிந்தவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.
தானியேல் 2 : 12 (IRVTA)
இதனால் ராஜா மகா கோபமும் எரிச்சலுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான்.
தானியேல் 2 : 13 (IRVTA)
ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.
தானியேல் 2 : 14 (IRVTA)
பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவின் மெய்க்காப்பாளர்களுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாகப் பேசி:
தானியேல் 2 : 15 (IRVTA)
இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாக பிறப்பிப்பதற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் அதிபதியாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.
தானியேல் 2 : 16 (IRVTA)
தானியேல் ராஜாவினிடத்தில் போய், கனவின் அர்த்தத்தை ராஜாவிற்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்செய்தான்.
தானியேல் 2 : 17 (IRVTA)
பின்பு தானியேல் தன் வீட்டிற்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக,
தானியேல் 2 : 18 (IRVTA)
அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.
தானியேல் 2 : 19 (IRVTA)
பின்பு இரவுநேரத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினான்.
தானியேல் 2 : 20 (IRVTA)
பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்திற்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
தானியேல் 2 : 21 (IRVTA)
அவர் காலங்களையும் நேரங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.
தானியேல் 2 : 22 (IRVTA)
அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.
தானியேல் 2 : 23 (IRVTA)
என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்ததினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான்.
தானியேல் 2 : 24 (IRVTA)
தானியேல் கனவிற்கு அர்த்தம் கூறுதல் பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.
தானியேல் 2 : 25 (IRVTA)
அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின்முன் வேகமாக அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு மனிதனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.
தானியேல் 2 : 26 (IRVTA)
ராஜா பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட கனவுகளையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கமுடியுமா என்று கேட்டான்.
தானியேல் 2 : 27 (IRVTA)
தானியேல் ராஜசமுகத்தில் மறுமொழியாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவிற்குத் தெரிவிக்க ஞானிகளாலும், சோதிடராலும், விண் ஆராய்ச்சியாளர்களாலும், குறிசொல்லுகிறவர்களாலும் முடியாது.
தானியேல் 2 : 28 (IRVTA)
மறைபொருட்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய கனவும் உமது படுக்கையின்மேல் உம்முடைய எண்ணத்தில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்:
தானியேல் 2 : 29 (IRVTA)
ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கும்போது, இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பினது; அப்பொழுது மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்.
தானியேல் 2 : 30 (IRVTA)
உயிரோடிருக்கிற எல்லோரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவிற்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.
தானியேல் 2 : 31 (IRVTA)
ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகவும் பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு முன்னே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.
தானியேல் 2 : 32 (IRVTA)
அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும், புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும், தொடையும் வெண்கலமும்,
தானியேல் 2 : 33 (IRVTA)
அதின் கால்கள் இரும்பும், பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக இருந்தது.
தானியேல் 2 : 34 (IRVTA)
நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.
தானியேல் 2 : 35 (IRVTA)
அப்பொழுது அந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், பொன்னும் முழுவதும் நொறுங்குண்டு, கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடைக்காமல் காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோனது; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய மலையாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
தானியேல் 2 : 36 (IRVTA)
கனவு இதுதான்; அதின் அர்த்தத்தையும், ராஜசமுகத்தில் தெரிவிப்போம்.
தானியேல் 2 : 37 (IRVTA)
ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும், பராக்கிரமத்தையும், வல்லமையையும், மகிமையையும் அருளினார்.
தானியேல் 2 : 38 (IRVTA)
சகல இடங்களிலுமுள்ள மனிதர்களையும், வெளியின் மிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.
தானியேல் 2 : 39 (IRVTA)
உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்ஜியம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்ஜியம் ஒன்று எழும்பும்.
தானியேல் 2 : 40 (IRVTA)
நான்காவது ராஜ்ஜியம் இரும்பைப்போல உறுதியாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.
தானியேல் 2 : 41 (IRVTA)
பாதங்களும், கால்விரல்களும், பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்ஜியம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணுடன் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
தானியேல் 2 : 42 (IRVTA)
கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்ஜியம் ஒரு பங்கு பலமுள்ளதாகவும் ஒரு பங்கு நெரிசலுமாயிருக்கும்.
தானியேல் 2 : 43 (IRVTA)
நீர் இரும்பைக் களிமண்ணுடன் கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனிதர்களோடு சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணுடன் இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
தானியேல் 2 : 44 (IRVTA)
அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்ஜியத்தை எழும்பச்செய்வார்; அந்த ராஜ்ஜியம் வேறு மக்களுக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியையும், பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்ஜியங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, அதுவோ என்றென்றைக்கும் நிற்கும்.
தானியேல் 2 : 45 (IRVTA)
இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவிற்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது உண்மை, அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.
தானியேல் 2 : 46 (IRVTA)
அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கைசெலுத்தவும், தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.
தானியேல் 2 : 47 (IRVTA)
ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினதினால், உண்மையாகவே உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.
தானியேல் 2 : 48 (IRVTA)
பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.
தானியேல் 2 : 49 (IRVTA)
தானியேல் ராஜாவை வேண்டிகொண்டதினால் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படிவைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் அரண்மனையில் இருந்தான்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49