அப்போஸ்தலர்கள் 14 : 1 (IRVTA)
இக்கோணியாவில் பவுலும் பர்னபாவும் இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதர்களுடைய ஜெப ஆலயத்தின் உள்ளே பிரவேசித்து யூதர்களிலும் கிரேக்கர்களிலும் திரளான மக்கள் நம்பத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 2 (IRVTA)
விசுவாசிக்காத யூதர்கள் சகோதரர்களுக்கு விரோதமாக யூதரல்லாதவர்களுடைய மனதைத் தூண்டிவிட்டு, பகையுண்டாக்கினார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 3 (IRVTA)
அவர்கள் அங்கே அநேகநாட்கள் வாழ்ந்து கர்த்த்தரை முன்னிட்டுத் தைரியம் உள்ளவர்களாகப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்கு சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி தயவுபண்ணினார்.
அப்போஸ்தலர்கள் 14 : 4 (IRVTA)
பட்டணத்து மக்கள் பிரிந்து, சிலர் யூதர்களையும் சிலர் அப்போஸ்தலர்களையும் சேர்ந்துகொண்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 5 (IRVTA)
இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது,
அப்போஸ்தலர்கள் 14 : 6 (IRVTA)
இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவிற்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப் புறங்களுக்கும் ஓடிப்போய்;
அப்போஸ்தலர்கள் 14 : 7 (IRVTA)
அங்கே நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 8 (IRVTA)
லீஸ்திராவிலும் தெர்பையிலும் லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து,
அப்போஸ்தலர்கள் 14 : 9 (IRVTA)
பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு,
அப்போஸ்தலர்கள் 14 : 10 (IRVTA)
நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
அப்போஸ்தலர்கள் 14 : 11 (IRVTA)
பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி,
அப்போஸ்தலர்கள் 14 : 12 (IRVTA)
பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 13 (IRVTA)
அல்லாமலும் பட்டணத்திற்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான கோவிலின் மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, மக்களோடுகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
அப்போஸ்தலர்கள் 14 : 14 (IRVTA)
அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்களுடைய துணிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாக:
அப்போஸ்தலர்கள் 14 : 15 (IRVTA)
மனிதர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனிதர்கள் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்கு திரும்பவேண்டும் என்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
அப்போஸ்தலர்கள் 14 : 16 (IRVTA)
கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும்,
அப்போஸ்தலர்கள் 14 : 17 (IRVTA)
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாக அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணியிருக்கிறார் என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 18 (IRVTA)
இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு மக்கள் பலியிடாதபடிக்கு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது.
அப்போஸ்தலர்கள் 14 : 19 (IRVTA)
பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனான் என்று எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 20 (IRVTA)
சீடர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கும்போது, அவன் எழுந்து, பட்டணத்திற்குள்ளே போனான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.
அப்போஸ்தலர்கள் 14 : 21 (IRVTA)
அந்தியோகியாவிற்குத் திரும்பிவருதல் தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து,
அப்போஸ்தலர்கள் 14 : 22 (IRVTA)
சீடர்களுடைய மனதைத் தைரியப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின்வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 23 (IRVTA)
அல்லாமலும் அந்தந்த சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 24 (IRVTA)
பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
அப்போஸ்தலர்கள் 14 : 25 (IRVTA)
பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 26 (IRVTA)
அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 27 (IRVTA)
அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,
அப்போஸ்தலர்கள் 14 : 28 (IRVTA)
அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள்.
❮
❯