2 இராஜாக்கள் 3 : 1 (IRVTA)
மோவாப் கலகம் செய்தல் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருட ஆட்சியில் ஆகாபின் மகனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரெண்டு வருடங்கள் ஆட்சிசெய்து,
2 இராஜாக்கள் 3 : 2 (IRVTA)
யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப் போலவும் தன் தாயைப் போலவும் அல்ல; தன் தகப்பன் உண்டாக்கிய பாகாலின் சிலையை அகற்றிவிட்டான்.
2 இராஜாக்கள் 3 : 3 (IRVTA)
என்றாலும் இஸ்ரவேலைப் பாவம் செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்.
2 இராஜாக்கள் 3 : 4 (IRVTA)
மோவாபின் ராஜாவாகிய மேசா, திரளான ஆடுமாடுகளை உடையவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவிற்கு ஒரு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், ஒரு இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான்.
2 இராஜாக்கள் 3 : 5 (IRVTA)
ஆகாப் இறந்தபின்பு மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவிற்கு விரோதமாகக் கலகம் செய்தான்.
2 இராஜாக்கள் 3 : 6 (IRVTA)
அந்தக் காலத்திலே யோராம் என்னும் ராஜா சமாரியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலையெல்லாம் எண்ணிக்கை செய்து போய்:
2 இராஜாக்கள் 3 : 7 (IRVTA)
மோவாபின் ராஜா எனக்கு விரோதமாகக் கலகம்செய்தான்; மோவாபியர்கள்மேல் போர்செய்ய, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான்தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
2 இராஜாக்கள் 3 : 8 (IRVTA)
எந்த வழியாகப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்திரவழியாகப் போவோம் என்றான்.
2 இராஜாக்கள் 3 : 9 (IRVTA)
அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாட்கள் சுற்றித்திரிந்தபோது, அவர்களுக்குப் பின்செல்லுகிற இராணுவத்திற்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல்போனது.
2 இராஜாக்கள் 3 : 10 (IRVTA)
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் யெகோவா மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.
2 இராஜாக்கள் 3 : 11 (IRVTA)
அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிப்பதற்கு யெகோவாவுடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் ஊற்றிய சாப்பாத்தின் மகனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் வேலைக்காரர்களில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான்.
2 இராஜாக்கள் 3 : 12 (IRVTA)
அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்திற்குப் போனார்கள்.
2 இராஜாக்கள் 3 : 13 (IRVTA)
எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பன் மற்றும் தாயாருடைய தீர்க்கதரிசிகளிடம் போ என்றான்; அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, யெகோவா இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.
2 இராஜாக்கள் 3 : 14 (IRVTA)
அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பார்க்காமலிருந்தால் நான் உம்மைக் கவனிக்கவும் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய யெகோவாவுக்கு முன் நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
2 இராஜாக்கள் 3 : 15 (IRVTA)
இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது யெகோவாவுடைய கரம் அவன்மேல் இறங்கி,
2 இராஜாக்கள் 3 : 16 (IRVTA)
அவன்: யெகோவா உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.
2 இராஜாக்கள் 3 : 17 (IRVTA)
நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும், உங்களுடைய ஆடுமாடுகளும் கால்நடைகளும் குடிப்பதற்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்.
2 இராஜாக்கள் 3 : 18 (IRVTA)
இது யெகோவாவின் பார்வைக்கு சாதாரணகாரியம்; மோவாபியர்களையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.
2 இராஜாக்கள் 3 : 19 (IRVTA)
நீங்கள் சகல கோட்டைகளையும், சிறந்த பட்டணங்களையும் தகர்த்து நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.
2 இராஜாக்கள் 3 : 20 (IRVTA)
அடுத்தநாள் காலையில் பலிசெலுத்துகிற நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாக வந்ததால் தேசம் தண்ணீரால் நிரம்பினது.
2 இராஜாக்கள் 3 : 21 (IRVTA)
தங்களோடு போர்செய்ய ராஜாக்கள் வருகிறதை மோவாபியர்கள் அனைவரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் பயன்படுத்தக்கூடிய வயதுள்ளவர்களையும், அதற்குமேல் தகுதியானவர்கள் எல்லோரையும் சேர்த்து அழைத்துக்கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்.
2 இராஜாக்கள் 3 : 22 (IRVTA)
மோவாபியர்கள் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தத்தைப் போல சிவப்பாகக் காணப்பட்டது.
2 இராஜாக்கள் 3 : 23 (IRVTA)
அதனால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்துபோனார்கள்; ஆதலால் மோவாபியர்களே, கொள்ளையிட வாருங்கள் என்று சொன்னார்கள்.
2 இராஜாக்கள் 3 : 24 (IRVTA)
அவர்கள் இஸ்ரவேலின் முகாமிற்கு வந்தபோது, இஸ்ரவேலர்கள் எழும்பி, மோவாபியர்களைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாகத் தாக்கி, அவர்களுடைய தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியர்களைத் தாக்கி,
2 இராஜாக்கள் 3 : 25 (IRVTA)
பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலங்களிலும் கற்களால் நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிக்கப்படாமல் இருக்கிறபோது; கவண்காரர்கள் அதைச் சுற்றிவளைத்து அதையும் சேதமாக்கினார்கள்.
2 இராஜாக்கள் 3 : 26 (IRVTA)
போர் மும்முரமாகிறதென்று மோவாபியர்களின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் கடுமையாகத் தாக்குகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே முடியாமல்போனது.
2 இராஜாக்கள் 3 : 27 (IRVTA)
அப்பொழுது அவன் தன்னுடைய இடத்தில் ராஜாவாகப்போகிற தன் மூத்த மகனைப் பிடித்து, மதிலின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள்மேல் கடுங்கோபம் ஏற்பட்டதால்* இஸ்ரவேலர்கள்மேல் கடுங்கோபம் ஏற்பட்டதால். இந்த வாக்கியம் அதிகமாக பழைய ஏற்பாட்டில் தேவன் கோபமாயிருக்கிறார் என்று காட்டப்பட்டுள்ளது. அல்லது மோவாபியர்கள் இராஜாவாகப் போகிற மகனையே பலியிட்டதால், இஸ்ரவேலர்கள் மேல் அதிக கோபம் கொண்டு தாக்கியிருக்கலாம். ஆகையால் யுத்தத்தை விட்டு போயிருக்கலாம். , அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27