2 நாளாகமம் 5 : 1 (IRVTA)
யெகோவாவுடைய ஆலயத்திற்காக சாலொமோன் செய்த வேலைகள் அனைத்தும் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம் செய்வதற்காக பொருத்தனை செய்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், அனைத்து பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
2 நாளாகமம் 5 : 2 (IRVTA)
உடன்படிக்கைப் பெட்டி ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுதல் பின்பு யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர்கள் எல்லோரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
2 நாளாகமம் 5 : 3 (IRVTA)
அப்படியே இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
2 நாளாகமம் 5 : 4 (IRVTA)
இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் வந்தபின்பு லேவியர்கள் பெட்டியை எடுத்து,
2 நாளாகமம் 5 : 5 (IRVTA)
பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியர்களே.
2 நாளாகமம் 5 : 6 (IRVTA)
ராஜாவாகிய சாலொமோனும், அவனோடு கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள்.
2 நாளாகமம் 5 : 7 (IRVTA)
அப்படியே ஆசாரியர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய இறக்கைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.
2 நாளாகமம் 5 : 8 (IRVTA)
கேருபீன்கள், பெட்டி இருக்கும் இடத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு சிறகுகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
2 நாளாகமம் 5 : 9 (IRVTA)
பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாக அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; வெளியே அவைகள் காணப்படவில்லை; அது இந்த நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
2 நாளாகமம் 5 : 10 (IRVTA)
இஸ்ரவேல் வம்சத்தினர் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, யெகோவா ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை செய்தபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அதிலே இருந்ததில்லை.
2 நாளாகமம் 5 : 11 (IRVTA)
வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர்கள் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டார்கள்.
2 நாளாகமம் 5 : 12 (IRVTA)
ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய மகன்களும் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகர்களான லேவியர்கள் அனைவரும் மெல்லிய புடவைகளை அணிந்து, கைத்தாளங்களையும் தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் பிடித்து பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடு பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
2 நாளாகமம் 5 : 13 (IRVTA)
அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஒரேசத்தமாக யெகோவாவை துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படும்போதும், பாடகர்கள் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தை தொனிக்கச்செய்து, யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கும்போதும், யெகோவாவுடைய வீடாகிய தேவாலயம் மேகத்தால் நிரப்பப்பட்டது.
2 நாளாகமம் 5 : 14 (IRVTA)
அந்த மேகத்தால் ஆசாரியர்கள் ஊழியம்செய்து நிற்கமுடியாமற்போனது; யெகோவாவுடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பினது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14