2 நாளாகமம் 3 : 1 (IRVTA)
சாலொமோன் தேவாலயத்தைக் கட்டுதல் பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் யெகோவாவினால் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த இடத்திலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான்.
2 நாளாகமம் 3 : 2 (IRVTA)
அவன் தான் ஆட்சிசெய்த நான்காம் வருடம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.
2 நாளாகமம் 3 : 3 (IRVTA)
தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.
2 நாளாகமம் 3 : 4 (IRVTA)
முன்புற மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபது முழ நீளமும், நூற்றிருபது முழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.
2 நாளாகமம் 3 : 5 (IRVTA)
ஆலயத்தின் பெரிய மாளிகையைத் தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் மூடி, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்தரித்து,
2 நாளாகமம் 3 : 6 (IRVTA)
அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.
2 நாளாகமம் 3 : 7 (IRVTA)
அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், சுவர்களையும், கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.
2 நாளாகமம் 3 : 8 (IRVTA)
மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபது முழமுமாக இருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் மூடினான்.
2 நாளாகமம் 3 : 9 (IRVTA)
ஆணிகளின் எடை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் மூடினான்.
2 நாளாகமம் 3 : 10 (IRVTA)
அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாக உண்டாக்கினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
2 நாளாகமம் 3 : 11 (IRVTA)
அந்தக் கேருபீன்களுடைய சிறகுகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு சிறகு ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மற்ற சிறகு ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.
2 நாளாகமம் 3 : 12 (IRVTA)
மற்றக் கேருபீனின் ஒரு சிறகும் ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மற்ற சிறகும் ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.
2 நாளாகமம் 3 : 13 (IRVTA)
இப்படியே அந்தக் கேருபீன்களின் சிறகுகள் இருபதுமுழம் விரிந்திருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியிருந்தது.
2 நாளாகமம் 3 : 14 (IRVTA)
இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவுப்பு நூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டாக்கினான்.
2 நாளாகமம் 3 : 15 (IRVTA)
ஆலயத்திற்கு முன்பாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேல் இருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
2 நாளாகமம் 3 : 16 (IRVTA)
சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் செய்து, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதுளம் பழங்களையும் செய்து அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான்.
2 நாளாகமம் 3 : 17 (IRVTA)
அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் மற்றொன்றை இடது புறத்திலும் நாட்டி, வலதுபுறத் தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத் தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17