1 தீமோத்தேயு 5 : 1 (IRVTA)
ஆலோசனைகள் முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும்,
1 தீமோத்தேயு 5 : 2 (IRVTA)
முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு.
1 தீமோத்தேயு 5 : 3 (IRVTA)
ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.
1 தீமோத்தேயு 5 : 4 (IRVTA)
விதவையானவளுக்கு குழந்தைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாக நடத்தி, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாக இருக்கிறது.
1 தீமோத்தேயு 5 : 5 (IRVTA)
ஆதரவற்ற விதவையாக இருந்து தனிமையாக இருக்கிறவள் தேவன்மேல் நம்பிக்கையுள்ளவளாக, இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.
1 தீமோத்தேயு 5 : 6 (IRVTA)
சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள்.
1 தீமோத்தேயு 5 : 7 (IRVTA)
அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.
1 தீமோத்தேயு 5 : 8 (IRVTA)
ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.
1 தீமோத்தேயு 5 : 9 (IRVTA)
அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து,
1 தீமோத்தேயு 5 : 10 (IRVTA)
குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
1 தீமோத்தேயு 5 : 11 (IRVTA)
இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி,
1 தீமோத்தேயு 5 : 12 (IRVTA)
முதலில் கொண்டிருந்த வாக்குறுதியை விட்டுவிடுவதினாலே தண்டிக்கப்படுவார்கள்.
1 தீமோத்தேயு 5 : 13 (IRVTA)
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
1 தீமோத்தேயு 5 : 14 (IRVTA)
எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
1 தீமோத்தேயு 5 : 15 (IRVTA)
ஏனென்றால், இதற்குமுன்பு சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.
1 தீமோத்தேயு 5 : 16 (IRVTA)
விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது.
1 தீமோத்தேயு 5 : 17 (IRVTA)
நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும்.
1 தீமோத்தேயு 5 : 18 (IRVTA)
போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
1 தீமோத்தேயு 5 : 19 (IRVTA)
மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் குற்றச்சாட்டை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.
1 தீமோத்தேயு 5 : 20 (IRVTA)
மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவம் செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
1 தீமோத்தேயு 5 : 21 (IRVTA)
நீ பட்சபாதத்தோடு ஒன்றும் செய்யாமலும், விசாரிப்பதற்குமுன்பு முடிவுபண்ணாமலும், இவைகளைக் காத்துநடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களுக்கும்முன்பாக, உறுதியாகக் கட்டளையிடுகிறேன்.
1 தீமோத்தேயு 5 : 22 (IRVTA)
யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள்.
1 தீமோத்தேயு 5 : 23 (IRVTA)
நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள்.
1 தீமோத்தேயு 5 : 24 (IRVTA)
சிலருடைய பாவங்கள் வெளிப்படையாக இருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.
1 தீமோத்தேயு 5 : 25 (IRVTA)
அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது.
❮
❯