1 தெசலோனிக்கேயர் 5 : 1 (IRVTA)
சகோதரர்களே, இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையும்குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.
1 தெசலோனிக்கேயர் 5 : 2 (IRVTA)
இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 3 (IRVTA)
சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
1 தெசலோனிக்கேயர் 5 : 4 (IRVTA)
சகோதரர்களே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் இருளில் இருக்கிறவர்களில்லையே.
1 தெசலோனிக்கேயர் 5 : 5 (IRVTA)
நீங்களெல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாக இருக்கிறீர்கள்; நாம் இரவிற்கும் இருளுக்கும் உரியவர்களல்ல.
1 தெசலோனிக்கேயர் 5 : 6 (IRVTA)
ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம்.
1 தெசலோனிக்கேயர் 5 : 7 (IRVTA)
தூங்குகிறவர்கள் இரவிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இரவிலே வெறிகொள்ளுவார்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 8 (IRVTA)
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்புக்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம்.
1 தெசலோனிக்கேயர் 5 : 9 (IRVTA)
தேவன் நம்மைத் தண்டிப்பதற்காக நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
1 தெசலோனிக்கேயர் 5 : 10 (IRVTA)
நாம் உயிரோடிருக்கிறவர்களானாலும், மரித்தவர்களானாலும், அவரோடு நாம் ஒன்றாகப் பிழைத்திருப்பதற்காக அவர் நமக்காக மரித்தாரே.
1 தெசலோனிக்கேயர் 5 : 11 (IRVTA)
ஆகவே, நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவளர்ச்சி உண்டாகும்படிச் செய்யுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 12 (IRVTA)
இறுதி அறிவுரைகள் அன்றியும், சகோதரர்களே, உங்களுக்குள்ளே கடுமையாக உழைத்து, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாக இருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,
1 தெசலோனிக்கேயர் 5 : 13 (IRVTA)
அவர்களுடைய செயல்களின் அடிப்படையில் அவர்களை மிகவும் அன்பாக நினைத்துக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாக இருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 14 (IRVTA)
மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 15 (IRVTA)
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 16 (IRVTA)
எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 17 (IRVTA)
இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 18 (IRVTA)
எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 5 : 19 (IRVTA)
ஆவியை அவித்துப்போடாமலிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 20 (IRVTA)
தீர்க்கதரிசனங்களை சாதாரணமாக எண்ணாதிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 21 (IRVTA)
எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 22 (IRVTA)
தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 23 (IRVTA)
சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
1 தெசலோனிக்கேயர் 5 : 24 (IRVTA)
உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
1 தெசலோனிக்கேயர் 5 : 25 (IRVTA)
சகோதரர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 26 (IRVTA)
சகோதரர்கள் எல்லோரையும் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 27 (IRVTA)
இந்தக் கடிதம் பரிசுத்தமான சகோதரர்கள் எல்லோருக்கும் வாசிக்கப்படவேண்டுமென்று கர்த்தரின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
1 தெசலோனிக்கேயர் 5 : 28 (IRVTA)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28