1 பேதுரு 5 : 1 (IRVTA)
மூப்பர்களும் இளைஞர்களும் உங்களில் உள்ள மூப்பர்களுக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்குள்ளவனாக இருக்கிற நான் புத்திசொல்லுகிறது என்னவென்றால்:
1 பேதுரு 5 : 2 (IRVTA)
உங்களிடம் உள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாக இல்லை, மனப்பூர்வமாகவும், அவலட்சணமான ஆதாயத்திற்காகவும் இல்லை, உற்சாக மனதோடும்,
1 பேதுரு 5 : 3 (IRVTA)
சுதந்திரத்தை பெருமையோடு ஆளுகிறவர்களாக இல்லை, மந்தைக்கு முன்மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
1 பேதுரு 5 : 4 (IRVTA)
அப்படி செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமை குறையாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்.
1 பேதுரு 5 : 5 (IRVTA)
அப்படியே, இளைஞர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; “பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”
1 பேதுரு 5 : 6 (IRVTA)
ஆகவே, குறித்தக் காலத்திலே தேவன் உங்களை உயர்த்துவதற்காக, அவருடைய பலத்த கரங்களுக்குள் அடங்கி இருங்கள்.
1 பேதுரு 5 : 7 (IRVTA)
அவர் உங்களை விசாரிக்கிறவராக இருப்பதினால், உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
1 பேதுரு 5 : 8 (IRVTA)
தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருங்கள், விழித்திருங்கள்; ஏனென்றால், உங்களுடைய எதிராளியாகிய பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம்போல யாரை விழுங்கலாமோ என்று தேடிச் சுற்றித்திரிகிறான்.
1 பேதுரு 5 : 9 (IRVTA)
விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்தில் உள்ள உங்களுடைய சகோதரர்களும் அப்படிப்பட்டப் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே.
1 பேதுரு 5 : 10 (IRVTA)
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
1 பேதுரு 5 : 11 (IRVTA)
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
1 பேதுரு 5 : 12 (IRVTA)
இறுதி வாழ்த்துரை உங்களுக்குப் புத்திசொல்லுவதற்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை, தேவனுடைய உண்மையான கிருபைதான் என்று சாட்சியிடுவதற்கும், நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதி, உண்மையுள்ள சகோதரனாக எனக்குத் தோன்றுகிற சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.
1 பேதுரு 5 : 13 (IRVTA)
உங்களோடு தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் மகனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
1 பேதுரு 5 : 14 (IRVTA)
ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடு வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேவிற்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14